ஞானம்
சித்தர்களின் ஞான தவத்தை தெரிந்து கொள்ள விரும்புவர்கள் படிக்க வேண்டிய பாடல்.
கண்ணை மூடி கொண்டு சில யோக பயிர்ச்சிகளை செய்து கொண்டு இறைவனை அடைந்து விட முடியும் என்று நினைத்து கொண்டிருப்பவர்கள் படிக்க வேண்டிய பாடல். இந்த பாடலுக்கான குரு நாதரின் முழு விளக்கம் “ஞானம் பெற விழி” என்ற புத்தகத்தில் இருந்து கொடுக்கிறோம். படித்து தெளிந்து சித்தர்களும், வள்ளல் பெருமானும் சொல்லும் தவத்தின் படி திரும்ப எல்லாம் வல்ல அருட்பெரும்சோதியை வேண்டுகிறோம்
சித்தன் என்பவன் எந்தவொரு சடங்கு, சம்பிரதாயங்களுக்கு கட்டுப்பட்டவனாக இருக்கமாட்டான். முற்போக்கு சிந்தனை கொண்டவனாக இருப்பான். இயற்கையை நேசித்து அதனுடன் உறவாடி கொள்பவன். சாதி, மதம் பேதமின்றி அனைவரையும் ஒருமுகமாக பார்க்கும் குணம் கொண்டவனாக இருப்பான். தம்மையே ஈசனாக உருவகப்படுத்தி கொள்பவன்.
மனிதன் என்பவன் மனதிற்கு கட்டுப்பட்டவன். தமது மனம் எதை நினைக்கிறதோ அதற்க்கு உடன் பட்டு நடப்பவன். சடங்கு,சம்பிரதாயங்களுக்கு உட்பட்டவன். சமுதாயத்தில் பின்னிப்ப்பினைக்கபட்டவன். தாம் உண்டு தம் வேலை உண்டு என்று உள்ளவன்.
வித்தென்ற மரமின்ன தென்று காணா
வீணர்களும் காவி கட்டி விருதாவாகப்
புத்தகமாங் காவியங்கள் புராண சாத்திரம்
புதுப்புதுப் பூசை வழி நிவே தனங்கள்
சுத்தமுடன் நியமவகை செப்பிடாமல்
சூதாகப் பிரட்டித்துச் சூட்ச மென்றே
இத்தரையில் மறைத்து வைத்தார் தீட்சை காணார்
இல்லறந்தான் இகபரத்தின் மோட்ச வீடே.
உடல் மரம் என்றும் உயிர் வித்து என்றும் உணராது வீணர்கள் தன்னையே குருவென்று கூறி காவி உடை அனிந்து திரிவார்கள். பல காவியங்களையும், சாஸ்திரங்களை படித்து பல கதைகலை அளப்பார்கள். புதுபுது பூசை வழிகளை கண்டுபிடித்து கடவுளுக்கு நிவேதனம் செய்து அவர்கள் உண்டு கொழுப்பார்கள். சரியை கிரியை யோக ஞானம் என்ற உண்மையான நெறிமுறைகளை கற்று கொடுக்காமல். உண்மையை அறியாமல் அது இரகசியம் இது இரகசியம் என்று கூறுவார்கள். அவரகள் தீட்சை பெற்று உண்மைப் பொருளை காணாதவர்கள். இல்லரத்தில் இருந்துகொண்டே நல்ல குருநாதரிடம் தீட்சை பெற்று தியானம் செய்வதே இகபர சுகத்தின் மோட்ச வீடு.
வீடென்ற வீடகத்தி னுண்மை காண
விளம்பிடுவேன் வெட்டவெளி யாகத்தானே
ஆடென்ற அரனவருஞ் சடா பாரத்தில்
அம்பிகையைச் சுமந்த வகை யறிந்து கொள்வீர்
நாடென்ற பிரமாவும் நாவிற் பெண்ணை
நயந்து வைத்தும் நானிலத்தில் நயமுற்றெய்தார்
சேடனெற்ற விட்ணுவுந் தன் னெஞ்சிற் றானே
சித்தமுடன் ஓர் மாதை வைத்திட்டாரே.
வீடென்ற உடம்பில் மோட்ச வீடாகிய சூட்சமத்தை அகத்தில் உண்மையாய் காணும் வழியை கூறுகிறேன். சிவன் தன் தலை முடியில் கங்கையையும் தன் உடம்பில் பாதி அம்பிகையையும் சுமந்து கொண்டுருக்கிறார். பிரம்மாவும் தன் நாவில் சரஸ்வதியை நயந்து வைத்தே இந்த நானிலத்தை விருப்பமுடன் படைக்கிறார். விஷ்ணுவும் தன் நெஞ்சில் லெட்சுமியை வைத்துள்ளார். இதனை அறிந்து கொண்டு பெண் துணை இல்லாமல் எதனையும் அடைய முடியாது என்று மூவரும் உணர்த்துகிறார்கள். இதை உணர்ந்து இல்லற தர்மத்தில் இருந்துகொண்டே இறைநிலையை அடைய உண்மையில் தியானம் செய்வீர்.
கடத்தேறப் பொருள்வேணும் வாதம்வேணும்
கண்டிருந்தும் பாகமதைச் செய்யவேணும்
படந்தன்னிற் சித்திரத்தைப் பார்த்துக் கண்டால்
பதிவாக உன்முகமும் தெரியுமாப்போல்
விடையேறு மீசனையும் அந்திசந்தி
மிக்கதந்தை தாய்பதத்தை மறக்கவேண்டாம்
முடவனைப்போல் சாஸ்திரத்தைப் பார்த்தால்நீயும்
முத்தியில்லை யாகோபு மொழிந்தவாறே. -– இராமதேவர் (யாகோபு)
எடுத்த ஜீவன் கடைத்தேற வாதம் அறியவேணும் அதை பாகம் தவறாமல் செய்ய வேண்டுமாம். படத்தில் சித்தரத்தை பார்தால் அதில் தன் முகம் தெரிகின்ற அளவுக்கு ஈசனையும், தாய் தந்தையரையும் மறவாமல் எப்போதும் நினைக்க வேண்டுமாம். அதை விட்டு சாஸ்திரங்களைப் படித்துத் தெரிந்து கொள்வதால் மட்டும் முக்தி கிடைக்காது.
கலியுகத்தின் இறுதி காலம்
அந்தநாள் அக்காலம் நமது நாட்டில்
அநேகவிதப் பஞ்சங்கள் அவத்தை மெத்த
சந்தேக மில்லாமல் சாட்சி யப்போ
சாற்றிடுவே னாகாயந் தனிற் களாங்கம்
விந்தையுடன் நட்சத்திரம் ஒன்று தோன்றி
வெட்டவெளி பிரகாசம் வெகு வாஞ் சோதி
மந்தமின்றி வால் நீண்டு மதிமேல் நிற்கும்
மானிடர்கள் பிணிபலவால் மாள்வார் கதிரே.
கலியுகம் முற்றிடும் அந்த நாட்களில் நமது நாட்டில் அநேக விதமான பஞ்சங்களும் துன்பங்களும் பெருகி நடக்கும் அதற்கான அறிகுறிகளை சொல்கிறேன். ஆகாயத்தில் பற்பல களங்கங்கள் உண்டாவதை காணலாம். மிக அதிசயமான வால் நட்சத்திரம் தோன்றி வெட்ட வெளியில் பிரகாசிக்கும். அதிலிருந்து கிளம்பும் ஒளி வால் போல் நீண்டு சந்திரன் மேல் நிற்கும். சூரியனின் வெப்பம் மிக அதிகமாகி புதுப்புது நோய்கள் உண்டாகி மனிதர்கள் மாள்வர்.
கதிரவணுங் கடும்பனியுங் காருங் கோடைக்
கற்பனைகள் மெத்தவுண்டு ஆகாயத்தில்
மதி தாழ்ந்து கரியினுட மண்டை போல
மகாரூப ரூப வெளி மதி மேற் காணும்
துதியாக நாழி இரு இருபத் தைந்தில்
தோற்றிடுமே மாத்திரைதான் மூன்று மட்டும்
சதியாக வடதேசம் தன்னி லோர்பால்
கடல்போங்கி நெருப்பு ரத்த மழையுடண் டங்கே.
கதிரவனிடமிருந்து கொடும் வெப்பமும் இரவில் கொடும் பனியும் கொட்டிதீற்கும். கற்பனைக்கு எட்டாத பல அதிசயங்கள் வானில் நடக்கும். சந்திரன் பூமிக்கு மிக தாழ்ந்து நிற்கும். யானை மண்டை ஓடு போல் மிக பெரிய உருவங்களும் அரூபங்களும் சந்திரன் மேல் தோன்றும். கால நேரங்கள் மாறி ஒரு நாள் பொழுது மூன்று மாத்திரை அளவே ஆகி எப்பொழுதும் இருள் சூழ்ந்து இருக்கும். வடதேசங்களில் கடல் பொங்கி அழிவுகள் ஏற்படும். மேலும் நெருப்பு வெடிகளால் ரத்த மழை கொட்டி நாடே சீரழியும்.
எங்கெங்கும் சாதுக்கள் ஏகக் கூட்டம்
ஏழைகளுக் குதவியாய் எய்தி நிற்பார்
பங்கமுடன் பாவி வெள்ளை பாத கன்றான்
பக்தர்களை சிறை கொள்வன் பட்ச மின்றி
மங்கி செக தீசனையே பூஜிப்பார் கூவி
மாநிலந்தான் பிரளயம்போல் மயங்கிக் காணும்
சங்கையுடன் சண்டாளர் சமரை நீத்துச்
சடுதியினில் வருவேவென் றறைந்து போனார்.
எங்கெங்கும் மக்கள் துன்புறுதலைக்கண்டு சாதுக்கள் கூட்டம் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வார்கள். அவர்கள் மீது வெள்ளையர்கள் கோபம் கொண்டு பக்தர்களை சிறைக்கொள்வான். பக்தர்கள் செகதீசனை பூஜித்து கூவி அழைப்பார்கள். பிரளயம் காலம் போல் பூமி பிளந்து பூகம்பங்கள் ஏற்பட்டு மக்கள் மயங்கி மடிவார்கள். சந்தேகம்மின்றி இந்த சண்டாளப்போரை நீக்கி உலக மக்களை காக்க உடனே நான் வருவேன் என்று என்னிடத்தில் சொல்லி மறைந்து போனார் போகர்.
சந்திரரேகை 200 என்ற நூலில் போகரின் சீடரான கோரக்கர் இவ்வாறு கூறி இருக்கிறார்
சித்தர்களின் சாதிக் கொள்கை:.:
சாதியொன்றில்லை சமயமொன்றில்லை யென்
றோதி யுணர்ந்தறிவாய் , குதம்பாய்
ஓதி உணர்ந்தறிவாய் (குதம்பைச் சித்தர் பாடல் 145)
ஆண்சாதி பெண் சாதி யாகும் இருசாதி
வீண்சாதி மற்றவெல்லாம் குதம்பாய்
வீண் சாதி மற்ற வெல்லாம் (குதம்பைச் சித்தர் 137)
பறைச்சியாவ தேதடா பனத்தியாவ தேதடா
இறைச்சிதோ லெலும்பினு மிலக்கமிட்டிருக்குதோ
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுத்துப்பாரு மும்முளே(சிவவாக்கியர் பாடல் 40)
தழைப்பதற்குச் சாதியென்றும் விந்து வென்றும்
தந்தைதாய் பிள்ளையென்றும் பாரியென்றும்
உழைப்பதற்குச் சொன்னதல்லாற் கதிவேறில்லை (அகத்தியர் ஞானம் 4)
காணப்பா சாதிகுலம் எங்கட்கில்லை
கருத்துடனே என்குலம் சுக் குலம்தான் மைந்தா
தொல்லுலகில் நாற்சாதி யனேகஞ் சாதி
தொடுத்தார்கள் அவரவர்கள் பிழைக்கத் தானே (வான்மீகர் ஞானம் பாடல்

நால்வருணன் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்ற கலைச்சாதியெலாம் பிள்ளை விளையாட்டே
சாதியும் மதமும் சமயமும் பொய்யென
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி
சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தேன்
சாத்திரக் குப்பையும் தணிந்தேன்(வள்ளலார் திருவருட்பா)
சாதியிலே மதங்களிலே சமயநெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளில் கோத்திர சண்டையிலே
ஆதியிலே அபிமானித்து அலைகின்றீர் உலகீர்
சமயபேதம் பலவான சாதிபேதங்கள்
சமயத்தோர்க் கேயல்லாது சற்சாதுக் களுக்கோ (பாம்பாட்டி சித்தர்)
சாதிபேதம் சொல்லுறீர் தெய்வம்
தான் என்று ஒரு உடல் பேதம் உண்டோ
ஓதியபால் அதில் ஒன்றாகி அதில்
உற்பத்தி நெய்தயில் மோராச்சு(கொங்கணர் வாலைக்கும்மி 94)
சாதிக் கொடுமைகளை எதிர்ப்பதையும்,சாதி வேறுபாடுகள் செய்யும் தொழிலின் அடிப்படையில் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன என்பதையும் சித்தர்களின் பாடல்கள் விளக்குகின்றன.
பஞ்சாட்சர மந்திரம் (நமசிவய):.
நமசிவய என்ற சொல்லிற்கு உரிய இலக்கணங்கள் எல்லாம் அமைந்ததும், எல்லா மந்திரங்களுக்கும் முதன்மையானதும், தமிழன் கொண்ட இறைக் கொள்கை அனைத்தையும் உள்ளடக்கியதும் ஆகிய மந்திரம் ஐந்தெழுத்து ஆகும்.
நமசிவய எனும் ஐந்தெழுத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருளைக் குறிக்கும். அதன் விவரம் வருமாறு:
ந – நடப்பு
ம – மறைப்பு
சி – சிறப்பு
வ –வனப்பு
ய – யாப்பு
இதில்,
நடப்பு – உயிர் உலகில் பிறந்து உலகியல் நடப்பு வாழ்வதைக் குறிக்கும்.
மறைப்பு – அறியும் பொருளான உயிரை அறியாமையாகிய இருள்
மறைப்பது குறிக்கப் படுகிறது.
சிறப்பு – எல்லோரும் ஒப்புக் கொள்கிற சிறப்பிற்கெல்லாம் சிறப்பான பரம்பொருளைக் குறிக்கும்.
வனப்பு – பேராற்றல் படைத்த பரம்பொருள் மிகச்சிறிய ஆற்றல் படைத்த உயிருடன் தொடர்பு கொள்ளுவது குறிக்கப்படுகிறது.
யாப்பு – அனுபவம் கொடுத்து உயிருக்கு அறிவை ஏற்றுவதற்காக அல்லது அறியாமையைத் தேய்ப்பதற்காக உயிர் ஓர் உடலில் கட்டப்படுவது குறிக்கப் படுகிறது. யாக்கப்படுவதால் யாப்பு.
அட்டாங்க யோகம் :.
1. இயமம்,
2. நியமம்,
3. ஆதனம்,
4. பிராணாயாமம்,
5. பிரத்தியாகாரம்,
6. தாரணை,
7. தியானம்,
8. சமாதி
என்று எட்டுவகை உறுப்புக்களைக் கொண்ட யோகம்.
549. உரைத்தன வற்கரி ஒன்று மூடிய
நிரைத்த இராசி நிரைமுறை எண்ணிப்
பிரைச்சதம் எட்டும் பேசியே நந்தி
நிரைத்த இயமம் நியமம் செய்தானே.
பொருள் : பலவாறாகப் பேசப்பெற்று வந்த பிராணன் என்ற ஒன்று இழுக்கப் பெற்றும், அது பன்னிரண்டு விரற்கடை கண்டத்துக்குக் கீழும் கண்டத்துக்கு மேலும் இயங்குமாறும் நினைந்து, அட்டாங்க யோகத்தை எடுத்துரைத்தே குருநாதன் முறையாகத் தீமையைப் போக்குவதற்கும் நன்மையைப் பற்றுவதற்கும் வழிவகை செய்தருளினான்.
550. செய்த இமயம் நியமம் சமாதிசென்று
உய்யப் பராசத்தி உத்தர பூருவம்
எய்த கவச நியாசங்கள் முத்திரை
எய்த உரைசெய்வன் இந்நிலை தானே.
பொருள் : முற்கூறியவாறு உரைசெய்த இயம நியம ஒழுக்கங்களில் நின்று சமாதி பொருந்தி உய்தி பெறவும், முன்னின்று வழிகாட்டிப் பின்னின்று தூங்கிக் கொண்டிருக்கும் பராசக்தியின் துணையை அடையவும் கவச நியாசங்கள் முத்திரைகளை அறிந்து ஒழுகவும் ஆகிய இம்முறையில் யான் கூறிச செல்வேன். (இயமம் - புலனடக்கல்; நியமம் - ஒழுக்க நெறி நிற்றல், சமாதி - தன்னை மறந்திருத்தல்)
551. அந்நெறி இந்நெறி என்னாதுஅட் டாங்கத்து
அந்நெறி சென்று சமாதியி லேநின்மின்
நன்னெறி செல்வார்க்கு ஞானத்தில் ஏகலாம்
புன்னெறி யாகத்தில் போர்க்கில்லை யாகுமே.
பொருள் : இறைவனை அடைவதற்கு அதுநெறி இது நெறி என்று தடுமாறாமல் அட்டாங்க யோக நெறியிலே நின்று சமாதி கூடுமின். அவ்வாறு அந்நெறி சென்று பொருந்தினவர்க்கு ஞான யோகம் கைகூடிச் சிவப்பேறு எய்தலாம். அவ்வாறு ஞானம் கூடாவிட்டாலும் பிறவிக்கு வரும் நெறியில் வந்து உடம்பில் பொருந்துவது இல்லையாகும். அட்டாங்க யோகநெறி நின்று சமாதி கூடினவர்க்குப் பிறவியில்லை.
552. இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரம்
சயமிகு தாரணை தியானம் சமாதி
அயமுறும் அட்டாங்கம் ஆவதும் ஆமே.
பொருள் : இயமம் நியமம் பலவகைப்பட்ட ஆசனம், நன்மையைத்தரும், பிராணாயமம், பிரத்தியாகாரம் வெற்றி மிக்க தாரணை, தியானம், சமாதி ஆகியவை நல்வினையுடையோர்க்குக் கிட்டும் எண்வகை உறுப்புக்களைக் கொண்ட யோக நெறியாகும். (பிராணாயாமம் - பேச்சினை அடக்குதல். தாரணை - தரித்தல் அயம் - நல்வினை.)
இயமம்:.
(இயமமாவது தீயனவற்றைச் செய்யாமல் ஒழுகுதல், இயமத்தை முதலில் கூறி எஞ்சிய உறுப்புக்களை முறையே அடுத்துக்கூறுவார் ஆசிரியர்.)
553. எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையும்
செழுந்தண் நியமங்கள் செய்ம்மின்என் றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
அழுந்திய நால்வர்க்கு அருள்புரிந் தானே.
பொருள் : எட்டுத் திக்குகளிலும் சூழ்ந்தெழுந்து பெருமழை பெய்தாலும் குளிர்ச்சியைத் தருகின்ற இயமங்களைத் தவறாது செய்யுங்கள் என்று சிவபெருமான் கொழுமை மிக்க பவளம் போன்ற குளிர்ந்த தன் சடையோடே பொருந்திய சனகாதி நால்வருக்கும் அருளிச் செய்தான். (நால்வர், சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர்.)
554. கொல்லான் பொய்கூறான் களவிலான் எண்குணன்
நல்லான் அடக்கம் உடையான் நடுச்செய்ய
வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கள்காமம்
இல்லான் இயமத்து இடைநின்றானே.
பொருள் : ஓருயிரைக் கொல்லாதவனும், பொய் கூறாதவனும், திருடாதவனும், ஆராய்ச்சியுடையவனும், நல்லவனும், பணிவுடையவனும், நீதி வழுவாதவனும், பகிர்ந்து கொடுத்து உண்பவனும், குற்றமில்லாதவனும், கள்ளும் காமமும் இல்லாதவனுமாகிய தன்மை உடையவனே இயமஒழுக்கங்களில் நிற்பவன் ஆவான்
நியமம்:.
(நியமமாவது நல்லனவற்றைச் செய்து ஒழுகுதல்)
555. ஆதியை வேதத்தின் அப்பொரு ளானைச்
சோதியை அங்கே சுடுகின்ற அங்கியை
பாதியுள் மன்னும் பராசக்தி யோடுடன்
நீதி யுணர்ந்து நியமத்த னாமே.
பொருள் : ஆதியானவனை, நாத வடிவானவனை, ஒளி வடிவானவனை, மூலாதாரத்தில் அக்கினி மயமாகவுள்ளவனை, சித்தினிடம் பிரிப்பின்றி யிருக்கும் பராசக்தியோடு உயிரோடு உடனாய் உறையும் தர்மத்தை உணர்ந்து ஒழுகுபவனே நியமத்தன் ஆவான். (பாதியுள்-திருமேனிக் கண் ஒரு பதியிதல் எனினுமாய்)
556. தூய்மை அருள்ஊண் சுருக்கம் பொறைசெவ்வை
வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை
காமம் களவு கொலையெனக் காண்பவை
நேமிஈர் ஐந்தும் நியமத்த னாமே.
பொருள் : தூய்மை, கருணை, சுருங்கிய உணவு, பொறுமை, நேர்மை, வாய்மை, உறுதியுடைமை யாகியவற்றை வளர்த்தலும், ஏனைய காமம், களவு கொலை யாகியவற்றைத் தீமையெனக் காண்டலுமாக நியமநெறியில் நிற்பவன் பத்துக் குணங்களைக் கொண்டவனாவான். (நேமி-நியமத்தை உடையவன், காதல் உயிரின் மாட்டும் காமம் உடம்பின் மாட்டும் செல்வன.)
557. தவம்செபம் சந்தோடம் ஆத்திகம் தானம்
சிவன்தன் விரதமே சித்தாந்தக் கேள்வி
மகம்சிவ பூசைஒண் மதிசொல்ஈர் ஐந்தும்
நிவம்பல செய்யின் நியமத்த னாமே.
பொருள் : தவம், செபம், மகிழ்வு, தெய்வ நம்பிக்கை, கொடை, சிவவிரதம், முப்பொருள் உண்மை கேட்டல், வேள்வி, சிவபூசை, சோதி தரிசனம், என்று சொல்லப்பெற்றபத்தையும் உயர்வாகக் கடைப்பிடிப்பவன் நியம நெறியில் உள்ளவனாவான்.
ஆதனம்:.
(ஆதனம் - இருக்கை யோகம் புரிவதற்கு முன் இருக்க வேண்டிய ஆசன முறையைப் பற்றியும் அவற்றால் உண்டாகும் பயனைப் பற்றியும் இங்குக் கூறப்பெறும்)
558. பங்கயம் ஆதி பரந்தபல ஆதனம்
அங்குள வாம்இரு நாலும் அவற்றினுள்
சொங்கில்லை யாகச் சுவத்திகம் எனமிகத்
தங்க இருப்பத் தலைவனும் ஆமே.
பொருள் : பத்மாசனம் முதலாகப் பரந்துபட்ட ஆசனங்கள் பல அங்கு உள்ளன. அவ்ஆசன வகைகளுள் எட்டு முக்கியமாகும். சோர்வு இல்லாமல் சுவத்திகம் என்ற சுகாசனத்தில் பொருந்தி இருக்கத் தலைவனாவான். சாதாரணமாக உட்காருவதுதான் சுகாசனமாகும்.
559. ஓரணை அப்பதம் ஊருவின் மேல்ஏறிட்டு
ஆர வலித்துஅதன் மேல்வைத்து அழகுறச்
சீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப்
பார்திகழ் பத்மா சனமெனல் ஆகுமே.
பொருள் : ஒருபக்கம் அணைந்த காலைத் தொடையின்மேல் ஏறும்படி செய்து மிக இழுத்து வலப்பக்கத் தொடையின் மேல் இடக்காலையும், இடப்பக்கத் தொடையின்மேல் வலக்காலையும் வைத்து, அழகாகக் கைகளை மலர்த்தித் தொடையின்மேல் வைக்க உலகம் புகழ் பத்மாசனம் ஆகும், (ஊரு - தொடை)
560. துரிசில் வலக்காலைத் தோன்றவே மேல்வைத்து
அரிய முழந்தாளில் அங்கைகளை நீட்டி
உரிய இடும்உடல் செவ்வே இருத்தி
பரிசு பெறுமது பத்திரா சனமே.
பொருள் : குற்றமில்லாத வலக்காலை இடப்பக்கம் தொடையின் மேல் விளங்கும்படி வைத்து அருமையான முழங்கால்களின் மேல் அழகிய கைகளை நீட்டி, தளர்கின்ற உடம்பைச் செம்மையாக இருத்தி நன்மையைப் பெறுவது பத்திராசனமாம்.
561. ஒக்க அடியிணை ஊருவில் ஏறிட்டு
முக்கி உடலை முழங்கை தனில் ஏற்றித்
தொக்க அறிந்து துளங்காது இருந்திடில்
குக்குட ஆசனம் கொள்ளலும் ஆமே.
பொருள் : பத்மாசனத்தில் கூறியதுபோல் பாதங்கள் இரண்டையும் தொடையின்மேல் மாறி ஏற்றி, முக்கி உடம்பை முழங்கைவரை தூக்கி நிறுத்தி, உடம்பின் பாரம் கைகளில் தங்குவதற்கான சமநிலை தெரிந்து அசையாதபடி இருந்தால் குக்குட ஆசனம் செய்தலும் கூடும். (குக்குடம் - கோழி, குக்குட - ஆசனம் - கோழி இருக்கை)
562. பாத முழந்தாளில் பாணி களைநீட்டி
ஆதர வோடும்வாய் அங்காந்து அழகுறக்
கோதில் நயனம் கொடிமூக்கி லேயுறச்
சீர்திகழ் சிங்கா தனமெனச் செப்புமே.
பொருள் : பாத நுணிகளைப் பூமியில் ஊன்றி முழங்காலில் நீட்டி, அப்போது வாயைப் பிளந்து கொண்டு, அழகு பொருந்தக் குற்றமற்ற கண்களை நாசி, காக்கிரம் என்னும் புருவ நடுவில் வைத்திருப்பது புகழ் அமைந்த சிம்மாசனம் என்று சொல்லப்படும். (கொடிமூக்கு-மூக்கு நுனி.)
563. பத்திரம் கோமுகம் பங்கயம் கேசரி
செத்திரம் வீரம் சுகாதனம் ஓரேழும்
உத்தம மாம்முது ஆசனம், எட்டெட்டுப்
பத்தொடு நூறு பலஆ சனமே.
பொருள் : பத்திரம், கோமுகம், பங்கயம், கேசரி, சொத்திரம், வீரம் சுகாதனம் என்று ஓரேழும் மேலானவையாம். பழமையான ஆசனங்கள் இவற்றோடு நூற்று இருபத்தாறும் அவற்றின் மேலும் பல ஆசனங்களாம். தத்துவப் பிரகாசம் என்ற நூலில் ஆசனங்களில் பெயரும் அமைக்கும் முறையும் கூறப்பட்டுள்ளன. திருமூலநாயனார் ஓதி யருளிய இருக்கை எட்டேயாம். எனினும் பிறர் கொள்கைகளைக் கூறும் முறையில் பிறவும் கொள்ளப்பட்டன.
பிராணாயாமம்:.
(பிரணாயாமமாவது பிராணனைக் கட்டுப்படுத்தல். மேலே கூறிய ஆசனவகையில் ஏதாவது ஒன்றில் இருந்து பிராணாயமப் பயிற்சி செய்யவேண்டும். பிராணாயாமம் ஆசனம் போன்று பல்வேறு வகைத்து)
564. ஐவர்க்கு நாயகன் ஆவ்வூர்த் தலைமகன்
உய்யக் கொண்டேறும் குதிரைமற்று ஒன்றுண்டு
மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாதுபோய்ப்
பொய்யரைத் துள்ளி விழுந்திடும் தானே.
பொருள் : ஐம்பொறிகளுக்கு நாயகனும் அவ்உடம்புக்குத் தலைவனுமாகிய ஆன்மா, உய்திபெற்று மேல் செல்லுவதற்கு மனத்தோடு பிராணனாகிய குதிரை ஒன்றுள்ளது. அது தேகத்தை விட்டு அகண்டத்தைப் பற்றி நின்றோர்க்கு வசப்பட்டு நிற்கும். மெய்யுணர்வில்லாது கண்டத்தைப்பற்றி நின்றோர்க்குப் பிராணன் வசப்படாமல் கீழே தள்ளிவிடும் (குதிரை - பிராணவாயு)
565. சூரியன் நல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகுஅறி வார்குஇல்லை
கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படும் தானே.
பொருள் : மனமாகிய ஆரியன் மிகவும் நல்லவன். அவன் ஓட்டுகின்ற பிராணன், அபானன் ஆகிய குதிரைகள் இரண்டு உள்ளன. அவற்றை வெளியே விட்டு உள்ளே நிறுத்தும் திறமையை அறிபவர் இல்லை. பிராண செயம் பெற்ற குருநாதனின் அருள் கிட்டினால் பிராணன் அபானன் ஆகிய குதிரையைச் சேர்த்துப் பிடிக்கப் பிராண செயம் அமையும். (குதிரை இரண்டு - இடைகலை, பிங்கலை, ஆரியன் - பெருமை மிக்க மனம்.)
566. புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டால்
கள்ளுண்ண வேண்டாம் தானே களிதரும்
துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோருக்கே
பொருள் : பறவையை விட வேகத்துடன் கூடிய பிராணனின் வழி சிரசை நோக்கிச் சென்றால் கள்ளுண்ணாமலேயே மகிழ்ச்சியுண்டாகும். உடலில் சோர்வு நீங்கும். சுறுசுறுப்புடனும் இருக்கும். பிராணனும் மனமும் சிரசில் பாயும் மனமுடையோர்க்கு இவ்வுண்மையைச் சொன்னோம். (புரவி - பிராணவாயு.)
567. பிராணன் மனத்தொடும் பேராது அடங்கிப்
பிராணன் இருக்கில் பிறப்புஇறப்பு இல்லை
பிராணன் மடைமாறிப் பேச்சுஅறி வித்துப்
பிராணன் நடைபேறு பெற்றுண்டீர் நீரே
பொருள் : நாமரூப பேதமான பிரபஞ்சத்தை எண்ணாதவற்கு மனமும் பிராணனும் அடங்கி, பிராணன் ஒடுங்கின் பிறப்பு இறப்பு இல்லை. சிவன் தனி வியக்தியில் வைகி வாக்கு உதித்துப் பிராணனும் நிலை மாறி, பிராணன் ஒடுங்காத போது பிறப்பு இறப்பில் படுவீர்.
568. ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில்
ஊறுதல் முப்பத்து இரண்டது ரோசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சகம் ஆமே
பொருள் : பதினாறு மாத்திரை காலஅளவு இடப்பக்கமுள்ள நாசித் துவாரத்தில் காற்றை உள்ளுக்கு இழுத்தால் பூரகமாம். அறுபத்து நான்கு மாத்திரை அளவு இழுத்த காற்றை உள்ளே நிறுத்தல் கும்பகமாம் முப்பத்திரண்டு மாத்திரை கால அளவு வலப்பக்கம் நாசித்துவாரத்தில் காற்றை மெல்லன விடுதல் ரேசகமாம். முன்னே சொல்லிய முறைக்கு மாறாக வலப்பக்கம் நாசித் துவாரத்தில் காற்றை இழுத்து நிறுத்தி இடப்பக்கம் நாசித் துவாரத்தில் விடுதல் வஞ்சனையாம்.
569. வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பஞ்சாம்
தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
வளியினும் வேட்டு அளியனும் ஆமே.
பொருள் : சாதகர் காற்றை இழுத்துத் தன் வசப்படுத்தி அடக்கியிருந்தால், உடம்பு பளிங்கு போன்று மாசின்றித் தூயதாய் அது முதுமை எய்தினும் இளமைத் தன்மை உண்டாகும். இதனைத் தெளிய குருவின் அருளையும் பெற்றுவிட்டால் அவர் உடம்பானது காற்றைவிட மென்மை யுடையதாகி, எங்கும் செல்லும் ஆற்றல் பெற்று மேன்மையடைவர்.
570. எங்கே இருக்கினும் பூரி இடத்திலே
அங்கே அதுசெய்ய ஆக்கைக்கு அழிவில்லை
அங்கே பிடித்துஅது விட்டன வும்செல்லச்
சங்கே குறிக்கத் தலைவனும் ஆமே.
பொருள் : நீ எங்கே இருந்தாலும் இடப்பாக நாசியாகிய இடைகலை வழியாகவே பூரகம் செய்வாயாக அங்கே அவ்வாறு பூரிக்க உடம்புக்கு அழிவில்லை . அங்கே கும்பகம் செய்து அப்பிராணன், சொல்லும் அளவு மேற் சொல்ல சங்கநாதம் உண்டாகி மேன்மை அடையலாம்.
571. ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வார்இல்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே.
பொருள் : இடைகலை பிங்கலை வழியாக இழுத்துப் பூரித்து, காற்றை உள்ளே கும்பகம் செய்யும் முறையைத் தெரிந்தவர் இல்லை. அவ்வாறு காற்றைக் கும்பகம் செய்யும் முறையைத் தெரிந்தவர் காலனைக் கடக்கும் இலட்சியத்தை உடையவராவர்.
572. மேல்கீழ் நடுப்பக்கம் மிக்குறப் பூரித்துப்
பாலாம் இரேசகத் தால்உட் பதிவித்து
மாலாகி உந்தியுள் கும்பித்து வாங்கலே
ஆலாலம் உண்டான் அருள்பெற லாமே.
பொருள் : முறையான காற்று தொண்டை மூலாதாரம், விலா ஆகியவற்றில் நிரம்பும்படி செய்து, மறு பகுதியான இரசேகத்தால் (விடுதலால்) அவயவங்களை ஒன்றோடு ஒன்று பதியும்படி செய்து, விருப்பத்தோடு வயிற்றில் கும்பகம் செய்து இருக்கவே நீலகண்டப் பெருமான் அருளைப் பெறலாகும்.
573. வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே
ஏமுற்ற முப்பத்து இரண்டும் இரேசித்துக்
காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண்டும்
ஓமத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே.
பொருள் : இடைகலை வழியாகப் பதினாறு மாதிரை பூரகம் செய்து, விரும்பத்தக்க பிங்கலையின்கண் பாதுகாப்புற்ற முப்பத்து இரண்டு மாத்திரை இரேசகம் செய்து, பூரித்தலும் இரேசித்தலுமாகிய வேள்வியால் அறுபத்துநான்கு மாத்திரை சூம்பகம் செய்ய உண்மை விளையும்
574. இட்டது அவ்வீடு இளகாது இரேசித்துப்
புட்டிப் படத்தச நாடியும் பூரித்து
கொட்டிப் பிராணன் அபானனும் கும்பித்து
நட்டம் இருக்க நமனில்லை தானே.
பொருள் : ஆக்கப்பட்டதாகிய இவ்வுடம்பு தளர்ச்சியடையாமல் இரேசகம் செய்து, பத்து நாடிகளும் விம்முமாறு காற்றினை உள்ளே இழுந்து நிரப்பி, பிராணனும் அபானனும் சேரப்பெற்று நேராக நிமிர்ந்திருக்க எம பயம் இல்லையாம். (நட்டம் இருக்க - நிலை நிறுத்த எனினுமாம்)
575. புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட வுள்ளே நின்மலம் ஆக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமம் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.
பொருள் : உயிர்ப்பாய்ப் புறம்போந்து புக்குத்திரிகின்ற வாயுவை முறையான கும்பகத்தினாலே உள்ளே தூய்மை செய்தால் உறுப்புக்களில் இரத்த ஓட்டம் பாய்ந்து சிவந்து நிற்கும். தலைமுடி, மயிர்கறுத்து விளங்கும். கிரணங்களால் சூழப்பெற்ற ஆத்மன் உடலில் நிலைபெற்று நிற்பான், உடலும் அழியாது என்றபடி.
576. கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்
ஓடுவர் மீளுவர் பன்னிரண்டு அங்குலம்
நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல்
கூடிக் கொளின்கோல அஞ்செழுத்து ஆமே.
பொருள் : உடம்பை இடமாகக் கொண்ட பிராண சத்தி, குழந்தையாக இருந்தபோது பன்னிரண்டு விரற்கடை நீளம் சென்றும் புகுந்தும் இருந்தனர். வயதான போது தொண்டைக்கு மேலே சிரசில் செல்லும் நான்கு விரற்கடையைத் துண்டித்துவிட்டு எட்டு விரற்கடை அளவே தொழிற்படுகின்றனர். மேலே தடை செய்யப்பட்ட நான்கு விரற்கடையும் தொழிற்படுமாறு செய்துகொண்டால் சாதகர் பஞ்சாக்கர சொரூபமாவர்.
577. பன்னிரண் டானைக்குப் பகல்இரவு உள்ளது
பன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன்
பன்னிரண் டானையைப் பாகன் அறிந்தபின்
பன்னிரண் டானைக்குப் பகல்இரவு இல்லையே.
பொருள் : பன்னிரண்டு விரற்கடை செயற்படும் பிராணனாகிய சூரியனுக்குப் பகல் என்று இரவு என்றும் காலங்கள் உள்ளன. மூக்கிலிருந்து தொண்டை வழியாகக் கீழ் நோக்கிப் பாய்வதால் சிரசிலுள்ள ஆன்மா அறியவில்லை. கீழ்முகம் செல்லாது மேல்முகம் கொண்ட பிராணனை ஆன்மா அறிந்தபின், பிராணனாகிய சூரியனுக்குப் பகல் இரவு என்ற காலங்கள் இன்றி எப்போதும் பிரகாசிக்கும். (பாகன் - ஆன்மா).
பிரத்தியாகாரம்:.
(புறத்தே செல்லும் மனத்தை உள்ளே நிறுத்திப் பழகுதலே பிரத்தியாகாரமாம். இது அடயோகம், இலயயோகம், இலம்பிகாயோகம், மந்திரயோகம், இராஜ யோகம், சிவயோகம் என்ற பிரிவுகளுக்கு ஏற்ப வேறுபடும் அட்டாங்கயோகத்தில், இயமம், நியமம், ஆசனம், பிராணயாமம் என்பன பூர்வபட்சம் என்றும், பிரத்தியாகாரம் தாரணை, தியானம், சமாதி என்பன உத்தரபட்சம் என்றும் கொள்ள வேண்டும். பூர்வம் முன்நிகழ்வது; உத்தரம்-பின் நிகழ்வது.)
578. கண்டுகண்டு கருத்துற வாங்கிடின்
கொண்டு கொண்டு உள்ளே குணம்பல காணலாம்
பண்டுகந்து எங்கும் பழமறை தேடியை
இன்றுகண்டு இங்கே இருக்கலும் ஆமே.
பொருள் : புறத்தே சென்று ஓடுகின்ற மனத்தை அகத்தே பொருந்துமாறு செய்துவிடின், அக்காட்சியைக் கொண்டு சிறிது சிறிதாக இருள் நீங்கி ஒளி பெறலாம். முன்பு விரும்பி எங்கும் பழைய வேதங்களால் தேடப்பெற்ற பொருளை எடுத்த இவ்வுடலில் அகத்தே கண்டு இருத்தல் கூடும்.
579. நாபிக்கும் கீழே பன்னிரண்டு அங்குலம்
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிகிலர்
தாபிக்கும் மந்தரம் தன்னை அறிந்தபின்
கூவிக் கொண்டு ஈசன் குடியிருந் தானே
பொருள் : உந்திக்குக் கீயே பன்னிரண்டு அங்குலத்தில் மூலதாரத்தில் உள்ள குண்டலியை மேல்எழுப்பும் மந்திரமாகிய பிராசாத மந்திரத்தை ஒருவரும் அறியவில்லை. அவ்வாறு எழுப்பும் மந்திரத்தை அறிந்த பின்னர் சிவன் நாத மயமாகச் சிரசின் மேல் விளங்கி நிற்பான். இது ஓம் என்ற மந்திரத்தைக் குறிக்கிறது.
580. மூலத்து இருவிரல் மேலுக்கு முன்நின்ற
பாலித்த யோனிக்கு இருவிரல் கீழ்நின்ற
கோலித்த குண்டலி யுள்எழும் செஞ்சுடர்
ஞாத்து நாபிக்கு நால்விரல் கீழதே.
பொருள் : மூலதாரத்துக்கு இருவிரல் அளவு மேலுள்ளதும் முன்பக்கம் பார்வையுடையதும் வெளிப்படுத்தும் தன்மையுடைய குறிக்கு இரண்டு விரல் அளவு கீழே உள்ளதுமான இடத்தில் வட்டமிட்டுக் கொண்டுள்ள குண்டலினியுள் எழுகின்ற செஞ்சுடர், உடம்பில் உந்திக் கமலத்துக்கு நான்கு விரல் அளவு கீழே யுள்ளது. (செஞ்சுடர் - உச்சித்துளைவழி, பிரமரந்தி மார்க்கம்)
581. நாசிக்கு அதோமுகம் பன்னிரண்டு அங்குலம்
நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல்
மாசித்த மா யோகம் வந்து தலைப்பெய்தும்
தேகத்துக்கு என்றும் சிதைவில்லை யாகுமே.
பொருள் : நாசிக்குக் கீழ் பன்னிரண்டு அங்குல அளவிலுள்ள இதயத்து நீ மனத்தை இழுத்து வைத்துச் செஞ்சுடரை நினைப்பாய் ஆயின் அட்டமா சித்திகளும் ராஜயோகமும் வந்து கூடும். இத்தியானம் தேகத்துக்கு எப்பொழுதும் தீமை செய்யாததாகும். இதை அநாகதம் என்பர். (அகவழிபாடு - மானத பூசை.)
582. சோதி இரேகைச் சுடரொளி தோன்றிடின்
கோதில் பரானந்தம் என்றே குறிக்கொண்டுமின்
நேர்திகழ் கண்டத்தே நிலவொளி எய்தினால்
ஓதிய தன்னுடல் உன்மத்தம் ஆமே.
பொருள் : இரு மின்னற் கொடி பின்னி ஓடுவது போன்ற ஒளி தோன்றினால் குற்றமில்லாத மேலான ஆனந்தம் என்றே எண்ணுங்கள். நேர்மை விளங்கும் கண்டத் தானத்தில் (கழுத்துப் பிரதேசத்தில்) நிலவொளி தோன்றிடின் பிரத்தியாகாரப் பயிற்சி செய்த சாதகனது உடலில் ஆனந்தப் பரவசம் உண்டாகும். (இரேகைச் சுடரொளி - கீற்றுப் போன்ற ஒளி என்பாரும் உளர்)
583. மூலத் துவாரத்தை முக்காரம் இட்டிரு
மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு
வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு
காலத்தை வெல்லும் கருத்து இதுதானே.
பொருள் : மூலாதாரத்தை ஆகுஞ்சனம் என்ற முத்திரையால் அடைத்துக் கொண்டிரு பிரமரத்தின் மேல் மனத்தைப் புறம் விழித்தபடி இரு இதுதான் காலத்தை வெல்லும் உபாயமாகும். (ஆகுஞ்சனம் - குதத்தை மேலெழும்படி அடைத்திருத்தல்.)
584. எருவிடும் வாசற்கு இருவிரல் மேலே
கருவிடும் வாசற்கு இருவிரல் கீழே
உருவிடும் சோதியைஉள்கவல் லார்க்குக்
கருவிடும் சோதி கலந்துநின் றானே.
பொருள் : மலங்கழிக்கும் வாயிலாகிய குதத்துக்கு மேலே இருவிரலும், கருவுண்டாகும் வாயிலாகிய கோசத்துக்கு இருவிரல் கீழுள்ள இடத்தில் உருப்பெறும் குண்டலினியை நினைக்க வல்லார்க்கு கருவிடும் மகேசுரன் சோதிவடிவில் கலந்துள்ளான்.
585. ஒருக்கால் உபாதியை ஒண்சோதி தன்னைப்
பிரித்துஉணர் வந்த உபாதிப் பிரிவைக்
கரைத்துஉணர் உன்னல் கரைதல் உள் நோக்கல்
பிரத்தியா காரப் பெருமைய தாமே.
பொருள் : சுழுமுனையில் மலத்தின் காரியமாகிய இருளால் உண்டாகும் அவத்தையை (நிலை வேறுபாட்டை)யும் புருவ நடுவில் விளங்கும் சோதியினின்றும் பிரித்துள்ள நிலை வேறுபாட்டினையும ஒழித்து உணர்வு மயமான ஒளியை நினைத்து உருகி மனத்தை ஒருமைப் படுத்தல் பிரத்தியாகாரப் பெருமையாம். (ஒருக்கால் - சுழுமுனை)
586. புறப்பட்ட வாயுப் புகவிடா வண்ணம்
திறப்பட்டு நிச்சயம் சேர்ந்துடன் நின்றால்
உறப்பட்டு நின்றது உள்ளமும் அங்கே
புறப்பட்டுப் போகான் பெருந்தகை யானே.
பொருள் : வெளியே சென்ற வாயுவை மீளவும் புக முடியாதபடி திறமையாக உள்ளொளியில் பொருத்தி நின்றால் உள்ளம் வலுவடைந் துள்ளதாம், அப்போது பெருந் தகுதியுடைய இறைவனும் அவ்வொளியில் நிலைபெற்றுப் புறப்பட்டுப் போகாதவனாய் விளங்குவான்.
587. குறிப்பினின் உள்ளே குவலயம் தோன்றும்
வெறுப்பிருள் நீங்கி விகிர்தனை நாடும்
சிறப்புறு சிந்தையைச் சிக்கென்று உணரில்
அறிப்புற காட்சி அமரரும் ஆமே.
பொருள் : குறித்து நிறுத்தலாகிய பிரத்தியாகரத்தில் உலகம் முழுவதுமே இருந்த நிலையிலிருந்து அறியப்படும். வெறுக்கத் தக்க அறியாமையாகிய இருளை நீங்கி வேறுபாட்டினைச் செய்யும் சிவனை நாடுங்கள். சிவத்தை விரும்புகின்ற சிறப்புற்ற சிந்தையில் உறுதியாக உணர்ந்தால் சிவஞானம் பொருந்திய தேவருமாவர்.
தாரணை:.
(தாரணையாவது, தரிக்கச் செய்தல், பிரத்தியாகாரப் பயிற்ச்சியால் உள்ளுக்கு இழுத்த மனத்தை நிலைபெறச் செய்தல் என்க.)
588. கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்காட்டி
வீணாத்தண்டு ஊடே வெளியுறத் தானோக்கிக்
காணாக்கண் கேளாச் செவிஎன்று இருப்பார்க்கு
வாணான் அடைக்கும் வழிஅது வாமே.
பொருள் : கோணுதல் இல்லாத மனத்தை ஐõலந்திர பந்தம் முதலியவற்றால் கீழ் நோக்காது தடுத்து நடு நாடியின் வழியாகச் செல்லும் பிராணனுடன் மனத்தையும் பொருத்தி ஆகாயத்தின் இடை பார்வையைச் செலுத்தி, காணாத கண்ணுகம் கேளாத செவியுமாக இருப்பார்க்கு வாழ்நாளாகிய ஆயுள் அழியாமல் அடைக்கும் உபாயமாகும்.
589. மலையார் சிரத்திடை வானீர் அருவி
நிலையாரப் பாயும் நெடுநாடி யூடுபோய்ச்
சிலையார் பொதுவில் திருநட மாடும்
தொலையாத ஆனந்தச் சோதிகண் டேனே.
பொருள் : மலைபோன்ற சிரசினிடை ஆகாயகங்கை எப்போதும் பாய்ந்து கொண்டேயிருக்கின்ற சுழுமுனை நாடியின் வழியாகச் சென்று, பரநாத ஒலிகூடிய சிற்சபையில் ஆனந்தக் கூத்தாடும் அகலாத ஆனந்தத்தை நல்கும் சோதியைத் தரிசித்தேன்.
590. மேலை நிலத்தினாள் வேத்துப் பெண்பிள்ளை
மூல நிலத்தில் எழுகின்ற மூர்த்தியை
ஏல எழுப்பி இவளுடன் சந்திக்கப்
பாலனும் ஆவான் பார்நந்தி ஆணையே.
பொருள் : சிரசின்மேல் எழுந்தருளியுள்ள சிற்சத்தி மாற்றத்தைச் செய்யும் தேவியாவாள், மூலாதாரத்தில் குண்டலினியாகிய கிரியா சத்தியோடு பொருந்திய மூர்த்தியைத்தாரணைப் பயிற்சியால் அம்மூர்த்தியைச் சிரசின்மேல் எழுந்தருளப் பண்ணிச் சிற்சக்தியுடன் சேரும்படி செய்தால் வயதில் முதிர்ந்தவனும் வாலிபன் ஆவான் பார்த்தறிக. இது நந்தியின் ஆணையாகும்.
591. கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி
இடைவாசல் நோக்ட இனிதுள் நிறுத்தி
மடைவாயில் கொக்குப்போல் வந்தித்து இருப்பார்க்கு
உடையாமல் ஊழி இருக்கலும் ஆமே.
பொருள் : மூலாதாரத்தை அடைத்து அங்குள்ள காம வாயு அல்லத அபானனை மேலே செல்லும்படி செய்து நடுவழியான சுழுமுனையின் மேல் மனத்தைப் பொருத்தி நீரோடும் மடைவாயிலில் காத்திருக்கும் கொக்குப் போல நாட்டத்தை விடாமல் இருப்போர்க்கு, தேகம் சிதையாமல் ஊழிக்காலம் வரை இருக்கலாம்.
592. கலந்த உயிருடன் காலம் அறியில்
கலந்த உயிரது காலின் நெருக்கம்
கலந்த உயிரது காலது கட்டின்
கலந்த உயிருடன் காலமும் நிற்குமே.
பொருள் : உடலில் உயிர் கலந்துள்ள கால எல்லையை அறியின் அக்கால எல்லை பிராணன் இயக்கத்தால் அமைந்துள்ளது. அத்தகைய உயிரில் பிராணனது இயக்கத்தைக் கட்டி நிறுத்திவிட்டால் உயிருடன் பொருந்திய காலமும் அழிவின்றுட நிற்கும். ஆயுள் நிலைத்து நிற்கும் என்றபடி.
593. வாய்திற வாதார் மனத்திலோர் மாடுண்டு
வாய்திறப் பாரே வளியிட்டுப் பாய்ச்சுவர்
வாய்திற வாதார் மதியிட்டு மூட்டுவர்
கோய்நிற வாவிடின் கோழையும் ஆமே.
பொருள் : வாய்திறவாமல் மௌனமாக இருப்பவரது மன மண்டலத்தில் பிராணனாகிய செல்வம் ஒன்றுள்ளது. அங்ஙனமின்றி வாய்திறந்து பேசிக் கொண்டிருப்பவர் பிராணனை வெளியிட்டு வீணாக்குபவர். பேசாத மௌனியர் மதிமண்டலத்தில் பிராணனைச் செலுத்திச் சோதியை அறிகின்றனர். சகஸ்ரதளமாகிய செப்பினைத் திறந்து பார்க்க வல்லமையற்றவர்கள் கோழைத்தனம் உள்ளவராவர். (கோய்-நகை வைக்கும் செப்பு)
594. வாழலும் ஆம்பல காலும் மனத்திடைப்
போழ்கின்ற வாயு புறம்படாப் பாய்ச்சுறில்
ஏழுசா லேகம் இரண்டு பெருவாய்தல்
பாழி பெரியதோர் பள்ளி அறையிலே.
பொருள் : உள்ளத்தினின்றும் இறங்கி ஊடறுத்துச் செல்லுகின்ற வாயுவை வெளியே போகாதபடி நடு நாடியின்கண் செலுத்தின்ஏழு சாளரங்களையும் இரண்டு பெரிய வாயில்களையும் கொண்ட தேவர் கோயில் பெரிய வாயில்களையும் கொண்ட தேவர் கோயிலில் பெரிய பள்ளி அறையிலே பலகாலம் வாழலாம். (ஏழு சாலேகம் - கண்இரண்டு, காதுஇரண்டு, நாசி இரண்டு, வாய் ஒன்று; ஆக ஏழு துவாரங்கள். இரண்டு பெருவாய்-எருவாய், கருவாய். பாழி- உடல்; பள்ளி அறை - சகஸ்ரதளம், ஓய்வுபெறும் இடம்)
595. நிரம்பிய ஈரைந்தில் ஐந்தவை போனால்
இரங்கி விழித்திருந்து என்செய்வை பேதாய்
வரம்பினைக் கோலி வழிசெய்கு வார்க்குக்
குரங்கினைக் கொட்டை பொதியலும் ஆமே.
பொருள் : புலன்களைத் துய்த்து நிரம்பிய ஞானேந்திரிய கன்மேந்திரியமாகிய பத்தில் ஞானேந்திரியங்கள் ஐந்தும் நீங்கினால் அறிவிலியே ! நீ வருந்தி இருந்தும் என்ன பயனைப் பெறமுடியும்? ஆனால் இந்திரியங்களின் எல்லையைத் தாண்டி நிற்பவர்க்கு, மனமாகிய குரங்கை உடம்பினில் சேட்டையின்றி இருக்கச் செய்ய முடியும். (ஈரைந்து - தசவாயு என்று சிலர் கொள்வர். கொட்டை கோட்டை என்றும் பாடம்.)
596. முன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர்
பின்னை வந்தவர்க்கு என்ன பிரமாணம்
முன்னூறு கோடி உறுகதி பேசிடில்
என்ன மாயும் இடிகரை நிற்குமே.
பொருள் : முன்னமே வந்து பிறந்தார் அனைவரும் தாரனைப் பயிற்சி இன்மையால் அழிந்து ஒழிந்தனர். பின்னே வந்தவர் அழியமாட்டார் என்பதற்கு என்ன பிரமாணம் ? அவ்வாறு அழிகின்றவர் அடையும் நிலைகளைப் பேசினால் அவை அளவற்றனவாகும். என்ன வியப்பு ! ஆற்றில் இடிந்து கரைகின்ற கரை போன்று நாளும் அழிகின்ற உடம்பு அழியாது நிற்குமோ ? (இடிகரை - அழியும் தேகம்)
597. அரித்த உடலைஐம் பூதத்தில் வைத்து
பொருத்தஐம் பூதம்சத் தாதியிற் போந்து
தெரித்த மனாதிசத் தாதியிற் செல்லத்
தரித்தது தாரணை தற்பரத் தோடே.
பொருள் : ஐம்பொறிகளால் அரிப்புண்ட உடலை ஐம்பூதங்களில் வைத்து, அப்படிப்பட்ட ஐம்பூதங்களில் சத்தம் முதலான தன் மாத்திரைகளில் போகும்படியாக ஆராயப் பெற்ற மனம் முதலிய அந்தக் கரணங்கள் நாதத்தில் ஒடுங்க ஆன்மா தற்பர மாகிய சிவனோடு பொருந்தியிருப்பதே தாரணையாகும்
தியானம்:.
(தியானம் என்பது இடைவிடாது நினைந்திருத்தல். இடையீடுபட்டு எண்ணுவது தாரணை. இடையீடுபடாது எண்ணுவது தியானம். தியானம் எத்தனை வகையென்றும், அதனை எவ்வாறு செய்து பழக வேண்டும் என்றும் இங்கு ஆசிரியர் கூறுகிறார்.)
598. வரும்ஆதி ஈர்எட்டுள் வந்த தியானம்
பொருவாத புந்தி புலன்போக மேவல்
உருவாய சத்தி பரத்தியான முன்னும்
குருவார் சிவத்தியானம் யோகத்தின் கூறே.
பொருள் : முன்னே தாரணைப் பகுதியில் பத்தாவது மந்திரத்தில் கூறியபடி அமைந்த தியானமாவது, ஒப்பற்ற புத்தியும் புலனும் நீங்கியிருத்தலாம். அது உருவோடுகூடிய சத்தியை மேலாக எண்ணுதலாகிய பரத்தியானம் என்றும் ஒளி பொருந்திய சிவனை எண்ணுதலாகிய சிவத்தியானம் என்றும் இருகூறாக யோகத்தில் கூறப்பெறும்.
599. கண்நாக்கு மூக்குச் செவிஞானக் கூட்டத்துள்
பண்ஆக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்டு
அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டிப்
புண்ணாக்கி நம்மைப் பிழைப்பித்த வாறே.
பொருள் : கண், நாக்கு, மூக்கு, செவியாகிய ஞானேந்திரியங்கள் கூடுமிடத்தில், நாதத்தை உதிக்கச் செய்யும் பழமையான பொருள் ஒன்றுள்ளது அது அண்ணாக்குப் பிரதேசத்தில் எல்லையற்ற பேரொளியைக் காட்டி, மனம் புறவழிச் செல்லாமல் தடுத்து நம்மைப் பிழைக்கச் செய்தது இவ்வண்ணமாம்.
600. ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளி தன்னைக்
கண்õரப் பார்த்துக் கலந்தங்கு இருந்திடில்
விண்ணாறு வந்து வெளிகண் டிட ஓடிப்
பண்ணாமல் நின்றது பார்க்கலும ஆமே.
பொருள் : ஒன்றாகிய ஞானக்கண்ணில் பொருந்திய சோதியை இருகண்களையும் பொருந்திப் பார்த்து அங்கே சலனமில்லாமல் பொருந்தியிருந்தால் ஆகாய கங்கை நன்கு புலப்படும். முறையில் சிதாகாயப் பெருவெளியில் பொருந்தி நிற்கப் பண்ணாமல் நின்ற சுயம்பு மூர்த்தியைப் பார்க்கலுமாகும்.
601. ஒருபொழுத உன்னார் உடலோடு உயிரை
ஒருபொழுது உன்னார் உயிருள் சிவனை
ஒருபொழுது உன்னார் சிவனுறை சிந்தையை
ஒருபொழுது உன்னார் சந்திரப் பூவையே.
பொருள் : உடலோடு கலந்துள்ள உயிரை ஒரு பொழுதும் நினையார்கள்; உயிருக்கு உயிராக விளங்கும் சிவனை ஒரு போதும் எண்ணார்கள்; சிவன் எழுந்தருளியிருக்கின்ற சிந்தையையும் ஒருபொழுதும் எண்ணமாட்டார்கள். என்னே இவர்கள் அறியாமை. (சந்திரப்பூ-ஆஞ்ஞையுள்ள சந்திரன் போன்ற வெண்ணிறஒளி)
602. மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச்
சினந்து விளக்கினைச் செல்ல நெருங்கி
அனைத்து விளக்கும் திரியொக்கத் தூண்ட
மனத்து விளக்கது மாயா விளக்கே.
பொருள் : மனத்தில் விளங்கும் ஒளியை மாட்சியைப் பெறும்படி மேலே செலுத்திச் சினமாகிய அக்கினியைப் போகும்படி செய்து, யாவற்றையும் விளக்கி நிற்கும் சிவ ஒளியைச் சுழுமுனை என்ற திரியைத் தூண்டி நடத்த மனத்துள் விளங்கும் சிவம் என்றும் மங்காத விளக்காகும்.
603. எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதினைக் கண்டறி வார்இல்லை
உள்நாடி உள்ளே ஒளிபெற நோக்கினால்
கண்ணாடி போலக் கலந்துநின் றானே.
பொருள் : எண்ணாயிரம் ஆண்டுகள் யோகம் பயின்றாலும் கண்ணில் சோதியாக இருந்து விளங்குபவனைக் கண்டு அறிபவர்கள் யாரும் இல்லை. மன மண்டலமாகிய உள்ளத்தில் ஒளி பொருந்தும்படி பார்ப்பவர்க்கு, கண்ணாடியில் உருவத்தைக் காண்பது போல உள்ளத்தில் கலந்திருப்பதைக் காணலாம்.
604. நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டமும் இல்லை மனைக்கும் மனைக்கும் அழிவில்லை
ஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லை
தேட்டமும் இல்லை சிவன்அவன் ஆமே.
பொருள் : இரண்டு கண்பார்வையையும் நடுமூக்கில் பொருத்தி வைத்திடில் சோர்வும் இல்லை. உடம்புக்கும் அழிவில்லை, மனத்தின் ஓட்டம் இராது. அறியும் தன்மை இராது. தான் என்ற முனைப்பும் இராது புறத்தே செல்லும் அறிவுத் திறனும் இராது. அவன் சிவனாகலாம். (மனை - உடல்.)
605. நயனம் இரண்டும் நாசிமேல் வைத்திட்டு
உயர்வெழா வாயுவை உள்ளே அடக்கித்
துயர்அற நாடியே தூங்கவல் லார்க்குப்
பயனிது காயம் பயமில்லை தானே.
பொருள் : இரண்டுகண் பார்வையையும் நாசி காக்கிரம் என்ற பருவ நடுவில் வைத்து, உயர்தலினின்றும் தாழாத பிராணனை உள்ளே அடக்க, துன்பத்தைத் தரும் மனமாதியை நீக்கி யோக நித்திரை செய்வார்க்கு எடுத்த இவ்வுடல் பயனைத் தருவதாகும். பிரபஞ்சம் பிணிக்கும் என்ற பயமும் இல்லையாம். நாசியில் உயர்ந்த இடம் புருவ மேடு சாதகர் தியானம் செய்யும் போது கண்பார்வையைப் புருவநடுவில் செலுத்தியிருக்க வேண்டும்.
606. மணிகடல் யானை வார்குழல் மேகம்
அணிவண்டு தும்பி வளைபேரி கையாழ்
தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும்
பணிந்தவர்க்கு அல்லது பார்க்கஒண் ணாதே.
பொருள் : மணி, கடல், யானை, புல்லாங்குழல், மேகம், அழகியவண்டு, தும்பி, சங்கு, பேரிகை, யாழ் ஆகியவற்றின் நுண்ணொலிகள் பத்தும் தியானத்தில் அடங்கியிருப்பவர்க்கன்றி வேறுயாராலும் அறிய ஒண்ணாது. இதுவே திருச்சிலம்போசை என்ப.
607. கடலொடு மேகம் களிறுஒடும் ஓசை
அடஎழும் வீணை அண்டர்அண் டத்துச்
சுடர்மனு வேணுச் சுரிசங்கின் ஓசை
திடம்அறி யோகிக்குஅல் லால்தெரி யாதே.
பொருள் : கடல், மேகம், யானை, ஆகியவற்றின் ஓசையும் கம்பி இறுக்கத்தால் வீணையில் எழும் நாதமும், ஆகாயத்தில் அமைந்துள்ள வேத கோஷம், புல்லாங்குழல், சுருங்கிய வாயினையுடைய சங்கு ஆகியவற்றின் ஓசையும் திடமாக அறியவல்ல யோகியர்க்கன்றி ஏனையோரால் அறியமுடியாது. கடலோசை முதலியன வன்மையான ஓசை என்றும் வீணைஓசை முதலியன மென்மையான ஓசை என்று அறிக.
608. ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும்
பாசம் இயங்கும் பரிந்துயி ராய்நிற்கும்
ஓசை அதன்மணம் போல விடுவதோர்
ஓசையாம் ஈசன் உணரவல் லார்க்கே.
பொருள் : இறைவனது இயல்பும், தேவர் குழாச் சேர்க்கையும், பாசத்தின் இயக்கமும், பாசத்தை விட்ட உயிராய் நிற்பதும் நாதமாகும். அதனை உணர வல்லார்க்கு பூவினில் வெளிவரும் கந்தம் போல ஈசன் நாதத்தில் விளங்குகிறான் என்பது புலப்படும்.
609. நாத முடிவிலே நல்லாள் இருப்பது
நாத முடிவிலே நல்யோகம் இருப்பது
நாத முடிவிலே நாட்டம் இருப்பது
நாத முடிவிலே நஞ்சுண்ட கண்டனே.
பொருள் : நாத தத்துவம் முடிந்த இடத்திலே பராசக்தி யுள்ளான். அங்கு நல்ல யோகத்தின் முடிவு உள்ளது. நாத முடிவில் நம் மனத்தில் பதிவது அவ்விடத்தில் நீலகண்டப்பெருமான் விளங்குவான். ஓசை முடிந்த இடமே திருவருள் வெளிப்படும் இடம்.
610. உதிக்கின்ற ஆறினும் உள்ளங்கி ஐந்தும்
துதிக்கின்ற தேசுடைத் தூங்கிருள் நீங்கி
அதிக்கின்ற ஐவருள் நாதம் ஒடுங்கக்
கதிக்கொன்றை ஈசன் கழல்சேர லாமே.
பொருள் : ஆறு ஆதாரங்களில் தோன்றுகின்ற ஐவகை அக்கினியும் வணங்குகின்ற பிரகாசத்தோடு கூடிய நீல ஒளியை அகன்று, இயக்குகின்ற பஞ்ச தன்மாத்திரைகளில் ஒன்றாகிய சததம் ஒடுங்க, பொன்னொளியில் விளங்கும் இறைவனது திருவடியை அடையலாம், ஆறு ஆதாரங்களாவன; மூலம், கொப்பூழ், மேல்வயிறு, நெஞ்சம், மிடறு, புருவநடு என்பனவாம்.
611. பள்ளி அறையில் பகலே இருளில்லை
கொள்ளி அறையில் கொளுந்தாமல் காக்கலாம்
ஒள்ளிது அறியிலோ ரோசனை நீளிது
வெள்ளி அறையில் விடிவுஇல்லை தானே.
பொருள் : இந்திரியங்கள் ஓய்வு பெறுகின்ற பள்ளி அறை என்ற பரஅவத்தையில் (பரை நிலையில்) ஒளியேயன்றி இருளில்லை ஒளியேயுள்ள அறையான படியால் வேறு அக்கினி கொளுத்தாமல் காக்கலாம். ஒளியை உடையதாகிய இந்நிலையை அறியில் இது தியானத்தில் எய்தப் பெறுவது ஆகும். இருளே இல்லாதபடியால் விடிவே இல்லை. (பள்ளி அறை - உள்ளம் கொள்ளி அறை - சுடுகாடு எனினும் ஆம்)
612. கொண்ட விரதம் குறையாமல் தான்ஒன்றித்
தண்டுடன் ஓடித் தலைப்பட்ட யோகிக்கு
மண்டலம் மூன்றினும் ஒக்க வளர்ந்தபின்
பிண்டமும் மாறி பிரியாது இருக்குமே.
பொருள் : சந்திரமண்டலமும் அமைக்க வேண்டுமென்று மேற் கொண்ட குறிக்கோளுக்குக் குறைவு வராமல் தான் ஒன்றுபட்டு, முதுகு தண்டிலுள்ள சுழுமுனை நாடி வழியாக மேல் நோக்கி ஏறிச்சென்ற யோகிக்கு அக்கினி மண்டலம், சூரிய மண்டலம், சந்திரமண்டலம் ஆகிய மூன்றும் பொருந்தும் வகையில் வளர்ந்தபின் எடுத்த தேகம் உலகம் உள்ளவரை சீவனை விட்டு அகலாது. (மண்டலம் மூன்று - வாத, பித்த, சிலேத்துமமுமாம்)
613. அவ்வவர் மண்டலம் ஆம்பரிசு ஒன்றுண்டு
அவ்வவர் மண்டலத்து அவ்வவர் தேவராம்
அவ்வவர் மண்டலம் அவ்வவர்க் கேவரில்
அவ்வவர் மண்டலம் ஆயம்மற் றோர்க்கே.
பொருள் : அவ்வவர் மண்டலத்தினால் ஆகின்ற தன்மை ஒன்றுள்ளது. அக்கினி, சூரிய, சந்திர மண்டலங்களுக்குப் பிரமன், விஷ்ணு, உருத்திரன் ஆகியோர் தலைவராம். அவ்வவரது ஆட்சி அவ் வம்மண்டலத்தில் இருப்பின் அவ்வவரது மண்டலம் மற்றவர்க்கு உதவி செய்யும் கூட்டமாகும்.
614. இளைக்கின்ற நெஞ்சத்து இருட்டறை உள்ளே
முளைக்கின்ற மண்டலம் மூன்றிலும் ஒன்றித்
துளைப்பெரும் பாசம் துருவிடு மாகில்
இளைப்பின்றி மார்கழி ஏற்றம தாமே.
பொருள் : உலகப் பொருளில் மயங்கித் தவிக்கின்ற உள்ளமாகிய இருட்டறையில்தான் உதயமாகின்ற மூன்று மண்டலங்களுள் பொருந்திப் பிரமரந்திரத்துளை வழியாகச் சிவத்தினிடம் பெருங்காதல் கொண்டு ஆராய்ந்து மேற்சென்றால் துன்பம் நீங்கிச் சிரசின் மேல் விடியற்காலம் போல வெளிச்சத்தைக் காணலாம். (துருவிடுதல் - ஆராய்தல். மார்கழி ஏற்றம் - அருணோதயம், மார்கழித்திங்கள் திருவாதிரைத் திருநாளாகும். திருவாதிரை சிவபிரானுக்குச் சிறப்புடையது.)
615. முக்குணம் மூடற வாயுவை மூலத்தே
சிக்கென மூடித் திரித்துப் பிடித்திட்டுத்
தக்க வலம்இடம் நாழிகை சாதிக்க
வைக்கும் உயிர்நிலை வானவர் கோனே
பொருள் : தாமத இராசத சாத்துவிகம் என்ற முக்குணங்களாகிய இருள்நீங்க மூலாதாரத்திலுள்ள அபானனை மேலெழும்படி செய்து, வலப்புற சூரிய கலையை இடப்புறமுள்ள சந்திர கலையோடு பொருந்தும்படி அதிகாரையில் ஒரு நாழிகை பயின்றால் உயிரை உடம்பில் அழியாது சிவன் வைப்பான். (உயிர்நிலை- உடல்)
616. நடலித்த நாபிக்கு நால்விரல் மேலே
மடலித்த வாணிக்கு இருவிரல் உள்ளே
கடலித்து இருந்து கருதவல் லார்கள்
சடலத் தலைவனைத் தாமறிந் தாரே.
பொருள் : அசைவினை உண்டாக்கிக் கொண்டிருக்கும் உந்திச் சக்கரத்துக்கு நான்கு விரல் மேலே ஊர்த்துவ முகமாய் மேலே செல்லும் வாக்கு வெளிப்படும் தொண்டைச் சக்கரத்துக்கு இரண்டு விரற்கடை கீழேயுள்ள அநாகதச் சக்கரத்தில் கடல்முழக்கம் போன்று பொங்கி எழுகின்ற ஒலியினைத் தியானிக்க வல்லவர்கள் உடம்புக்கு உரியவனாகிய ஆன்மாவை அறிந்தவராவார்.
617. அறிவாய்அசத் தென்னும் ஆறாறு அகன்று
செறிவான் மாயை சிதைத்தரு ளாலே
பிறியாத பேரருள் ஆயிடும் பெற்றி
நெறியான அன்பர் நிலையறிந் தாரே.
பொருள் : அறிவான் ஆன்மா, அறிவில்லாத முப்பத்தாறு தத்துவங்களும் நீங்கி, செறிந்துள்ள மாயையை அருளாலே கெடுத்து, சிவனோடு நீங்காதிருக்கும் அருள் சத்தியாகிவிடும் பேற்றைச் சிவநெறியில் முறைப்பட்ட அன்பரே அவ்வுண்மையை உணர்ந்தோராவர்.
சமாதி:.
(சமாதியாவது, உயிரும் இறைவனும் ஒன்றி நிற்றல்)
618. சமாதி யமாதியில் தான்செல்லக் கூடும்
சமாதி யமாதியில் தான்எட்டுச் சித்தி
சமாதி யமாதியில் தங்கினோர்க்கு அன்றே
சமாதி யமாதி தலைப்படுந் தானே.
பொருள் : இயமம் முதலியவைகளைக் கடைப்பிடித்து சமாதிவரை செல்லும் முறைமையைச் சொல்லக் கேட்டால், இயமம் முதல் சமாதிக்கு முன்னுள்ள அங்கங்கள் கடைப்பிடிக்கப்படின், எட்டாவதான சமாதி கைகூடும். இவ்எட்டு உறுப்புக்களையும் நியமமாகச் செய்து வருபவர்க்கு அட்டாங்க யோகத்தின் இறுதி உறுப்பான சமாதி கைகூடும்.
619. விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடில்
சந்தியி லான் சமாதியில் கூடிடும்
அந்தமி லாத அறிவின் அரும்பொருள்
சுந்தரச் சோதியும் தோன்றிடும் தானே.
பொருள் : ஒளியும் ஒலியும் சிரசின் மேல் சகஸ்ரதளத்தில் மிகுந்து விளங்கினால், யோகமான சமாதியில் சீவன் பொருந்தி யிருக்கும். அப்போது இறுதியில் ஞான சொரூப மானசிவம் அழகிய சோதியாக வெளிப்படும். (விந்து - உடல் உரஅமிழ்து. நாதம் - உயிர்ப்பு ஓசை மேரு - புருவமத்தி)
620. மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு
மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை
மன்மனத் துள்ளே மகிழ்ந்திருப் பார்க்கு
மன்மனத் துள்ளே மனோலயம் ஆமே.
பொருள் : நினைத்தலைச் செய்யும் மனம் எங்கே உள்ளதோ அங்கே பிராண வாயுவும் உண்டு. மனம் நினைக்கவில்லை யானால் பிராணவாயுவின் அசைவும் உண்டாகாது. அம்மனத்துள்ளே நினைப்பதைவிட்டு மகிழ்ந் திருப்பார்க்கு நினைக்கும் மனமே நினையாத மனமாகி அடங்கிவிடும். (மன் - நினைத்தல்)
621. விண்டலர் கூபமும் விஞ்சத்து அடவியும்
கண்டுணர் வாகக் கருதியிருப் பார்கள்
கெண்டு வெளியிற் செழுங்கிரி யத்திடை
கொண்டு குதிரை குசைசெறுத் தாரே.
பொருள் : பிளந்து வெளிப்படும் ஒளியாகிய நீர்ஊற்றையும் அதில் சிவமாகிய அறிவுக் காட்டையும், தரிசித்து உணர்வு மயமாக எண்ணியிருப்பவர்கள் செழுமையான சிரசாகிய மாலையில் பிராணனாகிய குதிரையைச் செலுத்தி மனமாகிய கயிற்றைக் கொண்டு கட்டிவிடுவார்கள். (செழுங்கிரி - புருவநடுமுனை; ஆக்கினையின் உச்சி.)
622. மூல நாடி முகட்டலகு உச்சியுள்
நாலு வாசல் நடுவுள் இருப்பீர்கள்
மேலை வாசல் வெளியிறக் கண்டபின்
காலன் வார்த்தை கனாவிலும் இல்லை
பொருள் : சிவத்தை நாடிச் சிரசின் உச்சியிலுள்ள சகஸ்ரதளத்தில் கண்ணறிவு, காதறிவு, மூக்கறிவு, நாக்கறிவு ஆகிய நான்கு அறிவும் பொருந்தும் வண்ணம் இருப்பவர்களே ! விரிந்த சகஸ்ர தளத்துக்கு மேலே அகண்டத்தைத் தரிசித்தபின் உங்களுக்குக் காலன் என்ற சொல்லுங்கூடக் கனவிலும் இல்லை.
623. மண்டலம் ஐந்து வரைகளும் ஈராறு
கொண்டிட நிற்கும் குடிகளும் ஆறெண்மர்
கண்டிட நிற்கும் கருத்து நடுவாக
உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே.
பொருள் : பிருதிவி முதலிய ஐந்து மண்டலங்களும் அகரமுதல் உன்மனி ஈறாகவுள்ள கலைகள் பன்னிரண்டும் ஆதாரச் சக்கரங்களிலுள்ள அட்சரங்களை இடமாகக் கொண்டுள்ள தேவதைகள் நாற்பத்தெட்டும் கருத்து மாத்திரமாக நிராதாரத்தில் (சாந்தியதீத கலையில்) கண்டு, எங்கும் வியாபகமாயுள்ள திருவடியைப் பொருந்தி அனுபவிப்பான் சிவயோகி.
624. பூட்டொத்து மெய்யில் பொறிப்பட்ட வாயுவைத்
தேட்டற்ற அந்நிலம் சேரும் படிவைத்து
நாட்டத்தை மீட்டு நயனத் திருப்பார்க்குத்
தோட்டத்து மாம்பழம் தூங்கலும் ஆமே.
பொருள் : பூட்டைக் கருவியைப் போல உடம்பில் கீழும் மேலுமாகச் செல்லும் வாயுவை தேடுதலுற்ற பிரமரந்திரத்தால் பொருந்தச் சேர்த்து, தேடியலைதலை விட்டு விழித்தபடி இருப்பார்க்கு, சிவக் கனியோடு அசைவற்றிருக்கலாம். (பூட்டை - கிணற்றுராட்டினம் நயனத்திருப்பார்க்கு இடையறாது எண்ணி இருப்பார்க்கு.)
625. உருஅறி யும்பரிசு ஒன்றுண்டு வானோர்
கருவரை பற்றிக் கடைந்தமுது உண்டார்
அருவரை ஏறி அமுதுண்ண மாட்டார்
திருவரை யாம்மனம் தீர்ந்துஅற்ற வாறே.
பொருள் : எங்கள் ஆன்ம சொரூபத்தை அறியும் சிறப்பான முறை ஒன்று உள்ளது. (அதனை யான் சொல்லுவேன்). தேவர்கள் கருவுண்டாகும் இடத்தில் பொருந்தி இன்பத்தைப் பெற்றனர். அதனால் சிரசின் உச்சியில் சென்று அமுத பானம் செய்யாதவர். ஆகவே மனம் அடங்கச் சிரசின் மேலிடத்தில் பொருந்துவதே சொரூபத்தை அறிதலாம். திருப்பாற்கடலைக் கடைந்த செய்தியைக் கூறுவாரும் உளர்.
626. நம்பனை ஆதியை நான்மறை ஓதியைச்
செம்பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியை
அன்பினை ஆக்கி அருத்தி ஒடுக்கிப்போய்க்
கொம்பேறிக் கும்பிட்டுக் கூட்டமிட் டாரே.
பொருள் : நம்பத் தகுந்தவனும் முதல் பொருளானவனும், நான்கு வேதங்களை ஓதியவனும் செம்பொன்னின் உள்ளே விளங்கும் சோதி போன்றவனுமாகிய சிவனிடம் அன்பினைப் பெருக்கி ஆசையை அடக்கிப் போய் சகஸ்ர தளத்தில் பொருந்தி நின்று சாதகர் நிட்டைகூடியிருந்தார்.
627. மூலத்து மேலது முச்சது ரத்தது
கால் அத்து இசையில் கலக்கின்ற சந்தினில்
மேலைப் பிறையினில் நெற்றிநேர் நின்ற
கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே
பொருள் : குண்டலினி நான்கு இதழ்களோடு கூடிய மூலாதாரத்திலுள்ள முக்கோணவடிவமானது. அது அபானன் சத்திகெட்டுப் பிராணனோடு சேர்கின்ற இடத்தில் பெருமைமிக்க அர்த்த சந்திரனில் நெற்றிக்கு நடுவேயுள்ள வடிவத்தில் அர்த்தசந்திரன் முதல் உன்மனி ஈறாகவுள்ள கலைகளாக விளங்கும்.
628. கற்பனை யற்றுக் கனல்வழி யேசென்று
சிற்பனை எல்லாம் சிருட்டித்த பேரொளிப்
பொற்பினை நாடிப் புணர்மதி யோடுற்றுத்
தற்பர மாகத் தகுந்தண் சமாதியே
பொருள் : சீவ சங்கற்பங்களைவிட்டு மூலக் கனலோடு மேற்சென்று சிற்பத் திறம் நிறைந்த இப்புவனங்களை யெல்லாம் படைத்துக் கொடுத்த பேரொளி அழகனாகிய பரமசிவத்தை, தேடி மதி மண்டலத்தோடு பொருந்தி, தான் என்றும் சிவமென்றும் பேதமாகாதது, சாந்தம் பொருந்திய சமாதியாகும். (தற்பரமாதல் என்பது ஆன்வா பேதமற்றுச் சிவத்தோடு நிற்றல்)
629. தலைப்பட்டு இருந்திடுத் தத்துவம் கூடும்
வலைப்பட்டு இருந்திடும் மாதுநல் லாளும்
குலைப்பட்டு இருந்திடும் கோபம் அகலும்
துலைப்பட்டு இருந்திடும் தூங்கவல் லார்க்கே.
பொருள் : மேற்கூரிய வண்ணம் வாழ்க்கையை மாற்றியவரிடம் ஆன்மா நன்கு விளங்கும் ஆன்மா சிவத்தைச் சார்ந்திருத்தலால் திருவருட் சத்தியும் அங்கே பிணைந்து நிற்கும். அருட்சத்திக்கு எதிரமான் காமக் குரோதத்தின் அகன்று விடும் சமாதி கூடினவர்க்கு நடுமை நிலைமை தானே வந்துவிடும். (துவைப்பட்டிருத்தல் - நடுவு நிற்றல்)
630. சோதித் தனிச்சுட ராய்நின்ற தேவனும்
ஆதியும் உள்நின்ற சீவனும் ஆகுமாம்
ஆதிப் பிரமன் பெருங்கடல் வண்ணனும்
ஆதி அடிபணிந்து அன்புறு வாரே.
பொருள் : ஒளியோடு கூடிய ஒப்பற்ற சுடர்வடிவமாக நின்ற சிவமும், ஆதியாகிய சத்தியும் உள்ளே விளங்குகின்ற மலமற்ற ஆன்மாவும் சமாதியில் ஒன்றேயாகும். படைப்புக்கு முதல்வனாகிய பிரமனும் நீல மேனியையுடைய திருமாலும் ஆதிமுதல்வனாகிய சிவத்திடம் அடி பணிந்து அவனிடம் என்றும் நீங்கா அன்பு எய்துவர்.
631. சமாதிசெய் வார்க்குத் தகும்பல யோகம்
சமாதிகள் வேண்டாம் இறையுடன் ஏகில்
சமாதிதான் இல்லைதான் அவன் ஆகில்
சமாதியின் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே.
பொருள் : சமாதியில் இருப்பவர்க்குப் பல யோகங்கள் சித்திக்கும் எப்போதும் இறைவனோடு ஒன்றியிருக்கின் சமாதிகள் வேண்டாம். ஆன்மாவாகிய தான் சிவமேயானால் சமாதி தேவை யில்லாததாகும். சமாதியினால் அறுபத்து நான்கு கலை ஞானங்களும் வந்து பொருந்தும். (சமாதி - நிஷ்டை)
சித்தர்களின் இரசவாதம்:.
இரசவாதம் என்னும் சொல்லுக்கு இரசத்தை வேதித்தல் என பொருள். எளிய உலோகங்களுடன் சிலவகையான தாவர வகைகளைச் சேர்த்து தங்கம் தயார் செய்வது.
பரிசன வேதி பரிசித்த தெல்லாம்
வரிசை தருவான் வகையாகு மாபோல்
குருபரி சித்த குவலய மெல்லாம்
திரிமலம் தீர்ந்து சிவகதி யாமே
இப்படி செய்து தங்கம் கிடைக்க வேண்டுமென்றால் தங்கத்தின் மீது ஆசை இருக்க கூடாது. இந்த வகையான முயற்சி கடந்த நூற்றாண்டுகளில் உலகெங்கிலும் நடந்திருக்கின்றது.". இன்றைய வேதியியல் அறிவின் படி இரும்பையோ அல்லது வேறு எந்த ஒரு தனிமத்தையோ பொன்னாக்க முடியாது. எனினும் அப்படிப்பட்ட முயற்சிகளே இன்றைய வேதியல் துறையின் முன்னோடி என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுதான்.
மருந்துகளில் ரசம் முதன்மையானது. இதன் மூலம் இரசபஸ்பம், ரசசெந்தூரம், ரசக்கட்டு, முதலிய மருந்துகள் தயாரிக்கப்பட்டன. தீராத பல கொடிய நோய்களுக்கு இம்மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. எனவே ரசவாதம் என்றால் ரசத்தின் மாறுதல்களை அறிவது என்று பொருள்.
சில சித்தர்கள் ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்தி இறைப்பொருளுடன் ஒன்றுவதை ஒருவிதமான ரசவாதமாகப் பயின்றனர். இதையே 'தெய்வீக ரசவாதம்' என்றும் 'பேரின்பரசவாதம்', 'இன்பரசவாதம்', என்றும் 'ஞானரசவாதம்' என்றும் சொல்வார்கள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சித்தர் வழியில் ஐயா Prof.Dr.ராஜாகிருஷ்ணமூர்த்தி அவர்கள் மூலமாக தொகுத்து அளிக்க பட்ட வாசி யோக கலை மற்றும் அறிவியல் : more details conduct visited in
siddharyogam.com and
https://www.facebook.com/raja.moorthy.752?fref=nf
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தீட்சை என்றால் என்ன?
இதன் அவசியம் என்ன ?
ஒரு செய்முறையை நேரடியாக, வாய முறையாக அல்லது எழுத்து வழியாக சொல்வது தீட்சை.
கிரியை தீட்சை, மந்திர தீட்சை, யோகா தீட்சை சன்யாச தீட்சை
கிரியைதீட்சை ::: பூசை.ஹோமம், யாகம் . சிரார்த்தம் போன்ற கிரியைகளை செய்யும் முறைகளை சொல்லி தருவது .
மந்திரதீட்சை ::: பிரணவம் . சிவா , சக்தி , நாராயண ,காயத்ரி ஆகிய மந்திரங்களை உச்சரிக்க மற்றும் சித்தி செய்யும் முறை கற்று தருவது
யோக தீட்சை: ;;ஹடயோகம் , அஷ்டாங்க யோகம் மற்றும் யோகசிததி வழி முறைகளை கற்றுத்தருவது
சன்யாச தீட்சை :: துரவர நெறிமுறைகளை கற்று தருவது
இது போன்று பல தீட்சைகள் உள்ளன..
தீட்சை யின் அவசியம்
தீட்சை கொடுப்பவர் குரு .தீட்சை பெறுபவர் சீடர் .
தீட்சை கொடுக்கும சடங்கு . என்பது இறைவன் முன்னிலையில் இருவரும் செய்து கொள்ளும் ஒப்பந்தம் .. குருவின் கடமை சிடருக்கு தான் சொல்லி கொடுப்பதாக சொன்ன அனைத்தையும் சொல்லி கொடுத்து கரை சேர்க்க வேண்டும் . சீடன் குரு தக்ஷ்சனை கொடுக்கவேண்டும். குரு சொல்லும் கட்டு பாடுகளை கடைபிடிக்க வேண்டும் .
. சித்த்குரு தனது சீடனுக்கு தச தீட்சை சொல்லிகொடுத்து . சீடனின் உடலை பொன் உடலாக மாற்றி புதிய பிறவி எடுக்க செய்ய வேண்டும் . அப்பொழுது புதிய பிறவியெடுத்த சீடன் அந்த குருவின் மகன் . அந்த சீடனுக்கு குரு அப்பா .
ஆகையால் சித்தர்களுக்கு சீடர் தான் மகன் . . போஹரின் அப்பா காலங்கி பாட்டன் திருமூலன் .
வாசி என்றால் என்ன? வாசி யோகம் என்பது எது? சிவயோகம் என்பது என்ன ?
பிரபஞ்ச வெளியில் இருப்பது காற்று
.அது உடலுக்கு உள் வந்தால் மூச்சு .
மூச்சை நெறிபடுத்தினால் மூச்சு பயிற்சி அல்லது பிராணாயமம் . உரிய கால கணக்கோடு மூச்சை நெறிபடுத்தினால் உருவாவது வாசி.
.
வாசியை பிரானாயாமமாக செய்வது அடிப்படை வாசி யோகம் அல்லது வாசி பிராணாயமம் .
வாசியை ஆதார தளங்களில் நிறுத்தி உரிய முறைப்படி அஷ்டாங்க யோகம்மாக செய்வது வாசியோகம் அல்லது வாசிதவம் ..
வாசி யோகத்துடன் கல்ப மருந்துகள் உட்கொண்டு, கடும் பததியம் இருந்து பத்து ஆண்டுகள் செய்வது சிவயோகம் . சித்தர் நிலை அடைய செய்யும் கடைசி தவம்
பத்தியம் : பெண் அல்லது ஆண் , புளி, உப்பு , போதை பொருள் , மாமிசம் , மீன் தள்ள வேண்டும் . ஒருநேரம் உணவு உட்கொள்ளவேண்டும்.
இதன்படி கடும் தவம் செய்பவர் சித்தர் நிலை அடைவார்கள். அஷ்டமா சித்தி பெற்று, அழியாஉடல் பெறுவார் .. இறைவனை காண்பார்கள் . பேரின்பநிலை கிடைக்கும் .
இத்தகைய சித்தா இறைவனுடன் சேர்ந்து தானே இறைவன் ஆவது ஞான நிலை . ஞான நிலை பெற்றவரே ஞானி ., முனி , ரிஷி , பிரம்ம ரிஷி .
இந்த படித்தரத்தில் நீங்கள் அடையும் நிலையை பொருத்து கட்டாயமாக பலன் உண்டு . .
பயிற்சியை இடையில் விட்டு விட்டு பிறகு விட்ட இடத்தில் இருந்து தொடரலாம்
இதைதான் விட்டகுறை தொட்ட குறை என்பார்கள் .
யார் வாசியோகம் செய்வது ?.:.
வாசி யோகா பிரனாயாமம்வரை யாரும் பயிற்சி செய்யலாம் . . உலக வாழ்க்கை வெற்றி பெறும். அனைத்து செல்வமும் கிடைக்கும் .. உடல் உறுதி பெறும். குறைவு இல்லா இன்பம் கிடைக்கும் யாரும் எளிதில் வெல்ல முடியாது
உயர்நிலை வசியோகமான சிவயோகம் செய்வதற்கு முன் திருமணம் செய்து உலக வழ்வில் பெற வேண்டிய புத்திர செல்வங்கள் பெற்று முடித்து . நாம் செய்யவேண்டிய உலக கடமையை செய்து முடித்து நாற்பது வயதிற்கு மேல் அறுபது வயதிற்குள் செய்வது சிறப்பு . siddharyogam.comஎழுபது வயதுவரை கடும் முயற்சி யுடன் செய்யமுடியும் . அதன் பின் என்பது வயது வரை செய்தால் நூறுவரை ஆயுள் . . என்பதிற்கு பின் பயன் இல்லை .
நாற்பது வயதிற்கு முன் சிவயோகம் செய்தால் தவறு என்ன ?
சிறுவயதி வாசிதவம் , மற்றும் சிவயோகம் செய்தவர் நீண்டநாள் வாழ முடியாது . திரு ஞான சம்பந்தர் , ஆதி சங்கரர் வள்ளலார், விவேகானந்தர் ஆகிய ஞானிகள் இளம் வயதில்பரு உடலை இழந்தார்கள் ..
இன்றைய ஆய்வு சொல்வது ; வாசிதவம் அல்லது அதற்க்கு ஒப்பான பயிற்சி இளம் வயதில் செய்தால், அவர்களின் விந்து அணுக்கள் குறைபாடு ஏற்பட்டு உள்ளது . இதனால் மட்டுத்தன்மை அல்லது குறை பாடு உள்ள குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டு ..
வீட்டில் வாசி யோகம் பாடம் 1
மாணவர் தகுதி : இயமம் நியமம் என்ற மனித நேயமும் அன்பும் கடை பிடித்தல் அவசியம். .
சித்தர் கல்வி தகுதி : யோகா சித்தி., வேதை சித்தி , காய சித்தி மூன்று தீட்சை சித்தர்களால் சித்தர் என்று அழைக்கப்பட்டவர் .
உலக கல்வி தகுதி : BE; ME., B.A M.A, Etc.,
வாசியோகம ஏன் செய்ய வேண்டும் .?
மனித பிறவியில் ஒவவோருவரும் பெற வேண்டியது நான்கு சித்திகள் !. !.காய சித்தி .: அழியும் உடலை அழியாமல் பாது காத்தல் ..
“அடங்கினால் ஒன்றும் இல்லை வருவதேது .
அச்சடத்தை வாழ்வித்தால் அவனே சித்தன் “
அகத்தியர் பூரண சூத்திரம் பாடல் ௪௫ மற்றும் ௪௬
2. வேதை சித்தி ::ஒரு பொருளின் அனுதன்மையை மாற்றுதல் . மதிப்பு குறைந்தவற்றை மதிப்பு மிக்கதாக மாற செய்தல் , பயன்படுத்தல், அறவழி பொருள் ஈட்டல் . ஆகியவை வேதை சாகா மருந்து என்ற முப்பூ செய்து முடித்தல் வேதை சித்தி .
3. யோகசிததி
யோகா என்றால் இணைத்தல் என்று பொருள் . பொருள்களை இணைத்து புதிய பொருள் பெறுவது வேதை. அழியும உடலை அழியா உடலாக மாற்ற இறைவனோடு இன்னைத்தல் காய சித்தி
இறைவனோடு இணைந்து ஒன்றிப்போதல் ஞானம் .. இம்முன்றையும் பெறுவதற்கான தொழில் நுட்பம் சொல்வது யோகா .இதில் வெற்றி பெறுதல் யோகசித்தி ..
4. ஞான சித்தி .; இதுவே முக்தி . காய சித்தி , வேதை சித்தி, யோகசிததி அடைய வேண்டும் . தன்னுள் இறைவனை ஒளி வடிவில் கண்டு , இறைவனுடன் ஒன்றி, நிலைத்த பேரின்பம் பெற்று , இறைவனாக ஐந்தொழில் செய்தல் ( படைத்தல் , காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்).
வாசியோகா :
யோகா என்பதில் பலவிதங்கள் உண்டு . இந்தியர் களின் யோகாவில் முக்கியமானவை பக்கதி யோகா .: இறைவனிடம் பக்தி செய்து முக்தி அடைதல்
..ஹடயோஹா . உடலை பேணி பலவித பிராணாயாமம் செய்து , பந்த்ம் . முத்திரை , கிரியை ஆகிய முறைகளை பின்பற்றி இறைவனை அடைதல்
கர்ம யோகம் .: நமது கடமைகளை விறுப்பு வெறுப்பு இல்லாமல் இறைவனுக்கு அர்பணித்து செய்தல் .அதன் மூலம் இறைவனை அடைதல் .
வாசி யோகம் : இதற்கு அஷ்டாங்க யோகம் , குண்டலி யோகம் , ராஜ யோஹம் , ஆகிய பெயர் உண்டு இதை சிறிது மாற்றி கிரியயோகம் என்றும் சொல்லுவார்கள் .
வாசி யோகத்தில் ௮ அங்கம் உண்டு. அவை . இயம, நியம , ஆசன , பிரணயாம , தாரண , தியான , சமாதி . .
வாசி என்பது காலக் கணக்கோடு , நெறிப்படுத்திய சுவாசம் ,. இந்த நெறிபடுத்திய சுவாசத்தை பயன் படுத்தி . குண்டலி என்னும் சக்தியை உருவாக்கி அதை வாலையாக ஒளிர செய்வது . இந்த வலை என்ற ஒளி தான் பூரணம் என்ற இறைவன் இந்த வாலை எல்லையற்ற சக்தி கொடுக்கும் . இந்த சக்திகள் சிததி எனப்படும் . சித்திகள் ௬௪ இருந்தாலும் ௮ சித்திகள் அஷ்டமா சித்திகள் எனப்படும் . அமிர்தம் என்ற சாக சுரப்பை வாலைகொடுக்கும் . இதுவே உடலை அழியாமல் காக்கும் .
வாசி யோகா சிறப்பு .
அந்நெறி இந்நெறி என்னா தட்டங்கத்
தன்னெறி சென்று சமாதியில் நிலமின்
நன்னெறி செல்வார்க்கு ஞானத்தில் லேகலாம்
புன்னெறி யாகத்திற் போகில்லையாமே
திரு மூலர் திரு மந்திரம் . பாடல் ௫௫௧ .
உலகில் பலவிதமான யோகா நெறிகள் உண்டு . அந்தநெறி இந்த நெறி என்று எண்ணாமல் அட்டங்கம் என்ற வாசி யோகா நெறியை கடை பிடியுங்கள் . அதில் சமாதி நிலை அடையுங்கள் . இதனால் ஞானம் அடையலாம். யாகம் போன்ற தவறான வழியால் இறைவனை அடைய முடியாது .
வாசியோகம் செய்வதால் யோக சித்தி யுடன் காய சித்தி , வேதை சித்தி , ஞான சித்தி கிடைக்கும் . வாசி யோகம் செய்யாது பிற சித்தி அடைய முடியாது . . அணைத்து சித்திகளுக்கும் வாசி யோகமே அடிப்படை . இதை திரு வள்ளுவர் பஞ்ச ரத்தினம் ௫௦௦ என்ற நூலில் பாடல் ௩௧௬ இல் சொளியுள்ளார் .
அட்டாங்க யோகம் அது பலித்திட அருளும் முக்தி .
தொட்டங்கு நின்று துணைய இயம, நியம , ஆசனம
பட்டாங்கில் உள்ளபடி பாவிக்கதற்கு
முட்டாகும் முப்பு முடியாது மொழிந்தேன் இது சத்தியம் .
அட்டாங்க யோகம் என்ற வாசி யோகத்தை தக்ஷனா மூர்த்தி moorthy moorthy சுப்பிரமணியர் , அகத்தியர் , திரு மூலர் , போகர் , ரோமர், காக புசுண்டர், திருவள்ளுவர் மற்றும் சித்தர்கள் சொல்லி உள்ளார்கள். விஷ்ணு புராணத்தில் பராசர முனியும் , யோக சூத்திரத்தில் பதஞ்சலியும் சொல்லி உள்ளார்கள் .
எனவே உறுதியான உடல் பெற , உயர்ந்த அறிவு பெற , நிறைந்த சக்தி பெற , அறவழியில் நிறைந்த பொருள் ஈட்ட , நிறைவான இல்லறம் நடத்த , அமானுஷ்ய சக்தி பெற உள்ளுறை இறைவனை அறிய , காய சித்தி பெற வேதை சித்தி பெற , ஞானம் சித்தி பெற வாசி யோகம் செய்தல் அவசியம் . வாசி யோகத்தின் ஒவ்வொரு அங்கமாக பாப்போம் . படிப்படியாக வாசி யோகம் செயல்முறை பார்போம்
வீட்டில் வாசி யோகம் பாடம் 2
வாசியோக சந்தேகமும் நிவர்த்தியும்
வாசி யோகத்தில் பிரிவு உண்டா ?
வாசி யோகம் என்பதில் இரண்டு வகை உண்டு . ஒன்று அடிப்படை வாசியோகம் அல்லது வாசியோகம் மற்ற ஒன்று வாசியை வளது இடமாக வாசித்தால் வரும் சிவா யோகம் . சிலர் இரண்டையும் குழப்பிகொள்கிறார்கள் . சிவயோகம் யோகிகலுக்கு மட்டுமே . வாசியோகம் இல்லறத தாற்கும செயல் படும்.
வாசி யோகம் யார் செய்யலாம் ? . ...
வாசி யோகத்தில் பிராணயமம் என்பது நான்காம் அங்கம் இதில் வாசி உருவாக்கினால் அது வாசி பிரானாயாமம் . இந்த வாசி பிரானாயமத்த்தில் மூலாதாரம் என்ற குதத்திற்கு மேல் இரண்டு விரல் அகலம் உயரே மனதை பதிய வைத்து வாசி யோகம் செய்தால் யாருக்கும் எந்த துன்பமும் வராது எந்தவயதினரும் இதை செய்யலாம் இது மூச்சுக்காற்றை நெறிபடுத்துதல்
புறப்பட்டு புக்கு திரிகின்ற வாயுவை
நெறிபட உள்லே நின்மலமாக்கில்
உறுப்பு சிவக்கும் உரோமம் கருக்கும்
புறப்பட்டு போகான் புரி சடையோனே
திரு மூலர் திரு மந்திரம் பாடல் ௫௭௫
.
. இது அடிப்படை வாசி யோகம் .. அதுவாக கட்டுப்பாடு இல்லாமல் இயங்கும் மூச்சு காற்றை நெறி படுத்தினால் உடல் உறுப்புகள் சிவந்து இளமை யுடன் இருக்கும். முடி கரு மையாக இருக்கும் . இறைவன் நம்மை விட்டு நீங்கி போகமாட்டன் .. அடிப்படை வாசி யோகத்துடன் மூலிகை கல்பம்கள் உண்ணலாம் .
சிவயோகம் என்பது முப்பு என்னும் சாகா மருந்து உண்டு உயர் நிலை வாசி யோகம் பத்து ஆண்டு செய்வது . இதற்கு குரு உதவியும் பல கட்டுபாடுகளும் உண்டு . . இது மரணத்துக்கு ஒப்பான துயரம் தரும் . முடிவில் அழியா தேகமும் முக்க்தியும் தரும் . இது யோகிகளுக்கு மட்டுமே . இதில் மூன்று தீட்சை மூன்று ஆண்டு முடித்தால் சித்தர் தகுதி தரும் .. நான் முடித்து உள்ளேன் .. எனக்கு சித்தர்களே குரு
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் புடிக்கும் கணக்கு அறிவாறில்லை
காற்றை புடிக்கும் கணக்கு அறிவாளற்கு
கூற்றை உதிக்கும் குறி அது வாமே .>
திரு மூலர் திரு மந்திரம் பாடல் ௫௭௧
மூலதாரத்தில் கால கணக்கோடு வாசியோகம் செய்து
குண்டலி உரு வாக்கி. சுவதிடணம்.,மனி பூரகம் , அனாகதம், விசுக்தி ஆகயா, ஆகிய ஆறு தலங்களில் வாசியோகம் செய்து மேலே ஏறி குண்ட்லியையும் மேலே ஏற்றி பிடரி வழியாக ஒவொரு தள மாக கிழே இறங்கி மூலா தாரம் அடையவேண்டும் . அப்பொழு து இரண்டு நாசி துவாரத்தின் வழியாகவும் வாசி யோகம் செய்ய வேண்டும் . . இத்தகைய வாசி யோகம் செய்பவர் யாரும் இல்லை . அப்படி செய்தவர் எமனை எட்டி உதைக்கும் தகுதி படைத்தவர் . இது சித்தர்களும் யோகசித்தி அடைந்தவர் மட்டுமே செய்ய முடியும் . இதை தினமும் நான் செய்கிறேன் .. இது சிவ யோகம் இதை கற்றுக்கொள்ள குரு வேண்டும் . $0 வயதிற்கு மேற்பட்டவர் செய்யலாம்
.
அடிப்படை வாசி யோகம் செய்ய தீட்சை பெற வேண்டுமா ?
செய்முறை சொல்லி தருவதே தீட்சை . குரு என்பவருக்கு மாணவர் தட்சனை தரவேண்டும் . குரு கற்று கொடுக்க வேண்டும் .. இந்தவக்குப்பில் நான் யாருக்கும் குரு இல்லை . வழி காட்டி மாணவர் இயம நியமத்துடன் அன்புடன் இருப்பதே நான் கேட்கும் கட்டணம் . நான் வேறு கட்டணம் கேட்கவில்லை .. நான் சொல்லித்தரும் செயமுரைகளே தீட்சை . விருப்பமுள்ளோர் சாங்கியம் வேண்டும் என்றால் உங்கள் வீட்டில் தீபம் ஏற்றி சித்தர் படம் வைத்து அல்லது சாமிபடம் வைத்து சிததரிடம் வாசியோகம் கற்றுதர வேண்டி கொண்டு பயிற்சி ஆரம்பியுங்கள் . வாசி யோகம் சித்தர் சொத்து .. என்னுடையது இல்லை. சித்தரிடம் வேண்டுங்கள் .
இல்லறத்தில் இருந்து கொண்டு வாசி யோகம் செய்யலாமா?
என்யோகம் நின்யோகம் வசிஷ்டர் யோகம் .
இதனிர்தான் நிக்கோடு விசுவாமித்திரர்
இம்மலையில் வியாசரிஷி சுகரின் யோகம்
இதனிர்தான் காகியரும் கும்பனாதர்
இதனிற் தான் தெட்சனத்தர்ர் யோகமோடு
இல்லறத்தில் இருந்தார்கள் பாகமொடு . .
காக புசுண்டர் பெரு நூல் காவியம் .பாடல் ௭௩௬
பொருள்
நான் செய்யும் வாசி யோகமும் நீங்கள் செய்யும் வாசி யோகமும் வஷிஸ்டர் , விசுவாமித்திரர் , வியாச ரிஷி , சுகர் . கக்கியர் . கும்பனாதர் என்ற அகத்தியர் தெற்கு பக்கத்து சித்தர்கள் களும் செய்ததார்கள் இந்த யோகத்தை செய்து கொண்டு இல்லறவாழவிலும் சிறப்பாக வாழ்ந்தார்கள்
“இல்லறத்தில் இருந்தாலும் முக்தி தானே .”
காக புசுண்டர் பெரு நூல் காவியம் பாடல்௫௪௧
..
வாசி யோகம் செய்ய தியான மண்டபம் , காடு குகை போகவேண்டுமா ?
வேண்டாம் வீடு போதும் .
வீட்டிலே கூட்டினுள்ளே முக்தி உண்டு
மெய்யிலே சோதி உண்டு திரிகாலங்கள்
இந்த உடம்புக்குள் ஜோதிஎன்ற இறைவன் உண்டு அவனை வீட்டில் இருந்து உடல் என்னும் கூட்டில் கண்டு முக்தி பெறலாம்
.
வாசி யோகம் செய்தால் செல்வனம போய் விடுமா ? இல்லை அறவழி யில் செல்வம் வரும் வறுமை வராது. வந்த செல்வம் போகாது .
வருனையே தாறது யோகம் யோகம்
வாய்த்தாலே போகாது ....காகபுசுண்டர் பெருநூல் காவியம் பாடல் ௮௦௫
குரு தீட்சை கொடுத் தல் முக்தியும் சித்தியும் கிடைக்குமா ?
இல்லை நீங்கள் தான் வாசி யோகம் செய்து முக்தி அடையவேண்டும் . சாஸ்திரங்கள் படித்தோ , குரு தீட்சை பெட்றோ. மந்திரங்கள் ஓதியோ முக்தி பெறமுடியாது . வாசி யோகம் செய்ய வேண்டும் ..
ஆகுமோ சாத்திரத்தால், குருவால் ஆகா
ஆச்சரிய மந்திரத்தால் ஜெப்பத்தால் ஆகா
காக புசுண்டர் பெரு நூல் காவியம் பாடல் ௭௫௬
இருபது வயதிற்கு கீழ் வாசி யோகம் செய்தவர் விரைவில் மரணம் அடைவார ?
இருபது வயதிற்கு கீழ் சிவயோகம் செய்து முக்தி பெற்றவர் விரைவில் பரு உடல் இழப்பார்கள்.
ஐம்பது வயதிற்கு மேல் தான் வாசி யோகம் செய்ய வேண்டுமா .?
கட்டாயம் இல்லை எந்த வயதிலும் அடிப்படை வாசி யோகம் செய்யல்லாம் சிவயோகம் நாற்பது வயதிற்கு மேல் என்பதுக்குள் செய்யலாம் . உடற்பிணி இருப்பவர் வாசி யோகம் செய்யலாமா ?
. முடிந்த வரை செய்யலாம் . முடியாவிட்டால் செய்யவேண்டாம் .
வாசியோகம் செய்ய பத்தியம் உண்டா ?
இல்லை சரிவிகித உணவு எதுவும் சாப்பிடலாம் .. சிலருக்கு சர்கரி . உப்பு சத்து இருந்தால் அதற்கான பத்தியம் காததல் நன்று . நாளடைவில் நோய் கட்டுப்படும். பத்தியமே இல்லையட முப்பதின்
மேல் பாரினிலே யாருக்கும் . .
காக புசுண்டர் பெருநூல் காவியம் பாடல்
வீட்டில் வாசி யோகம் பாடம் 3
வாசியோகம் ஆரம்பிக்கும் முன் சில தயாரிப்புகள் வேண்டும் . அதற்கு வாசி யுடன் தொடர்புடைய காரணிகள் பார் போம்.
பாரப்பா சென்னியின் நீர் காலனகும்
பார்த்து அறுத்தார் சென்னியின் நீர் பித்தம் தானே
வீரப்ப வளநீரே இடுப்பில் வாதம்
மெய்யதனில் நெஞ்சுதொண்டை விழாவின் பக்கம்
துரப்ப மூலதண்டு நாக்கு மட்டும்
சொல்மொழியும் சேத்துமன் தான் சமனை நின்றால்
காரப்ப நாசிவழி பிராணண் பாரு
கால வாசி நேர்ணடக்க நாக்கு மூக்கே
காக புசுண்டர் பெரு நூல் காவியம் பாடல் ௮௪௯ 846
பெரும் சித்தி கெடுத்துவிடும் மலமும் பூச்சி. பாடல் ௮௫௩ 853
நோய் கோழை உடற்கு எமன் தானே. பாடல் ௮௪௫ 845.
மனம் மாண்டால் பொருள் உனதோ உடல்தான் மாலும் பாடல் ௮௫௨ 852
தந்தையென்ன இவவுடற்கு மனது தானே பாடல் ௮௪௫ 845
இந்த உடலை அழிப்பவை சென்னியில் இருக்கும் பித்தநீர்.
இடுப்பில் இருக்கும் வாத நீர் . நாக்கு தொண்டை முதுகு தண்டு பேச்சை குலரவைக்கும் சிலேத்துமம் . இம்மூன்றும் சமமாய் இருந்தால் உடல் அழியாது அதற்கு உயிர் சக்தி பெறவேண்டும் . அதற்க்கு வாசி யோகம் செய்
.
> வாசி யோகம் சிததி அடைவதை தடுக்கும மலத்தில் உள்ள பூச்சி . எனவே அதை போக்க குடலை சுத்தி செய்யவேண்டும் . இதற்கு கடுக்காய் கற்பம் உண்ணவேண்டும் .. இதற்கு தனி பதிவு செய்வேன் .
கோழை உடலின் சளிப்படலம்மாக உடல் முழுவதும் இருக்கும் அதை போக்குவது கடினம் . இதற்கு சித்தர்கள் வழழை வாங்கள் என்ற ஒரு முறை சொல்லி யுள்ளர்கள் . இதற்கு கரிசாலை , கத்தாழை கடுக்காய் கற்பம் பயன்படும் இதையும் தனி பதிவு செய்வேன்
கோழையும் மலமும் கற்பத்தால் சுத்தி செய்யமுடியும் .
வாசியை தொடர் புடைய முக்கிய காரணி மனம். மனதை பற்றி அகத்தியர் சொன்னது .
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே (அகத்தியர்
சில மூட குருக்கள் இப்பாடலை காட்டி வாசியோகமும் மந்திரங்களும் செய்யவேண்டாம் மனம் செம்மையானால் போதும் என்பார்கள் . இப்பாடலில் உள்ள மறைப்பை அறியார்கள் . . மனம் செம்மை ஆவது எப்படி என்றல் தியானம் செய்யுங்கள் என்பார்கள் . மனம் செம்மையானால் தான் தியானம் கைகூடும் . ஆக மனமும் செம்மை ஆகாது தியானமும் கைகூடாது . இவர்கள் குழப்பவாதிகள்
சிதர்கள் இந்த மறைப்பை வேறு இடத்தில் விடு விக்கிரார்கள் ..
“சுழிமுனை திறந்தால் மனம் சுழியில்
அகப்பட்ட துரும்பு போல் ஒடுங்கும் “
சுழிமுனை திறக்க வாசி யோகம் செய்ய வேண்டும் . அப்பொழுதுதான் மனம் செம்மை படும் . வாசி யோகம் செய்து மனதை செம்மை படுத்திய யோகி யின் மூச்சு வாசியாக மாறிவிடும் எனவே அவர் வாசி யோகம் செய்யவேண்டாம் . அவர் சொல்லும சொற்களே மந்திரம் எனவே அவர் மந்திரங்கள் சொல்லவேண்டாம் .
எனவே வாசி யோகமும் மனமும் நெருங்கிய தொடர்பு உடையவை . ஆனால் மனதை நெறி படுத்தினால்தான் வாசி யோகமே செய்ய முடியும் .வாசியோகம் செய்தால் தான் சுழிமுனை திறந்து மனம் ஒடுங்கி செம்மை ஆகும் .. யோகம் சித்தி ஆகும் . யோகம் சித்தி ஆனால் ஞானம் சித்தி ஆகும். இதுவே முக்தி . மனதை நெறிபடுத்தல் எல்லாவற்றிற்கும் அடிப்படை
..
மனதை நெறிப்படுத்த சித்தர்கள் ஹட யோகிகள் செய்முறை வகுத்தனர்
ஹட யோகிகள் த்ராடக என்ற செய்முறை (தீட்சை) கடை பிடித்தனர்
சித்தர்கள் சூரிய யோகம் சந்திர யோகம் அல்லது சூரிய சந்திர யோகம் என்ற செய்முறை வகுத்தனர் .
இவற்றை ஸ்ரின்கேறி ஜகத் குரு அபிநவ வித்யாதீர்த்த மகா ஸ்வாமிகள் செயதார் . விவேக நந்தர் செய்தார் . இதன் அடிபபடையில் கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தியான மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது .
இதன் தத்துவத்தை பார்ப்போம் . . மனம் என்பது கண்டு , கேட்டு ., உண்டு , உயிர்த்த புலன் களின் தொகுப்பு . மனதை குவிய செய்ய இந்த ஐந்து புலன்களையும் குவியசெய்தால் மனம் குவியும் . மனம் நெறிப்படும். இதற்கான தொழில் நுட்பமே த்ரடகவும் , சூரிய சந்திர
.யோகமும்
நான் சில ஆண்டுகள் இந்த இரண்டு யிற்சிகள் செய்து வெற்றிகண்டேன் அப்பொழுது எனக்கு ௨௭ வயது .. இந்தவெற்றியால் என்னுடைய ஆவியை நான் காண முடிந்தது .
ஆரம்ப செய்முறை பயிற்சிகளை சொல்கிறேன் .
த்ரடக .
:ஒரு சுவற்றில் உள்ள சுவாமிபடத்தில் சுவாமியின் கண்களை மட்டும் இமை கொட்டாமல் பாருங்கள் . சிறிது நேரத்தில் கண்ணீர் வடியும் . அதன் பின் பழக பழக கண்ணீர் வரத்து நின்றுவேடும் .. சிறிது சிறிதாக நேரத்தை கூட்டுங்கள் . . இரவில் சிறு பலப் லோ வோல்டேஜ எரியவைத்து அதை இமை கொட்டாமல் பார்த்து பழகுங்கள் . . இதனால் மனம் குவியும் . விவேகானந்தர் தியான கூடத்தில் ஒரு இரருட்டு அறையில் ஓம் என்ற குழல் விளக்கு எரியும் . அதை பார்த்து தியானம் செய்வார்கள் . . கண்கள் சோர்வு அடையாமல் சிறிது சிறிதாக நேரத்தை கூட்டி செய்யுங்கள் .
சூரிய யோகம் .
ஏதுமென்ற பங்குனி சித்திரை இரண்டில்
இதமாக உதயத்தில் ரவியை பாரு
தேருமடா கண் கூசிடாது இளமை வெயில்
தீர்க்கமாய் பிங்கலையில் கண் மூடிப்பரு .
. நூறு மடங்காய் அருணன் காந்தி வீசும்
நுனியான சுழி முனையில் உற்று பாரு
பேருபெருன்ச் சுளினைஎலே கண் கெடாது .
பேராக இன்னமொரு சேதி கேளு
அகத்தியர் பூஜா விதி ௦௦ பாடல் ௧௧௦
பொருள்
பங்குனி சித்திரை மதத்தில் சூரியன் உதயமாகும் போது சூரியனை பாருங்கள் . கன்னியா குமரியில் சூரிய உதயம் பார்ப்பது போல் . கண் கெடாது பின்பு கண்ணை மூடி மோதிர விரலால் இடது நாசியை அடைத்து வளது நாசியில் சுவாசியுங்கள் . அன்நாக்கிற்கு மேல் மனதை நிறுத்தி பாருங்கள் . உள்ளுக்குள் ஒளி தெரியும் ..
தயவு செய்து இதை உடனே செய்ய தீர்கள் த்ரடக செய்து சித்தி ஆனா பின்பு சூரியனை நேரில் பாருங்கள்
யோகதொடக்கம் .
ஆரம்பத்தில் குளித்து மேல் ஆடை இல்லாமல் சூரியன் முன்பு நில்லுங்கள் . ஓம் ந மா சி வ யா என்று 108 முறை சொல்லுங்கள் . . அல்லது உங்கள் விருப்ப ஜெபம் , மந்திரம் சொல்லுங்கள் சுமார் 7muthal 10௦ நிமிடம் செய்தால் போதும் .
இந்த யோகம் சக்தி வாய்ந்தது . ஸ்ரீ ராமர் சூரிய யோகம் செய்து அதித்ய ஹிருதயம் என்ற மந்திரம் ஜெபித்து ராவணனை வென்றார் . சூரிய ஒளி தரும் வைடாமின் டி உணவில் இருந்து கல்சியத்தை பிரித்து உடலின் செல்களுக்கு கொடுக்கும் . கல்சியம் உடலை இளமையாக வைத்திருக்கும் . சூரிய நாடியில் உயிர் சக்தி முழுமையாக பிரபஞ்சத்தில் இருந்து கிடைக்கும் ..
பின்பு வீட்டிற்குள் வந்து ஒரு கோரை பாய் அல்லது பருத்தி துணிமேல் சம்மணம் இட்டு நிமிர்ந்துஉட்காருங்கள். உங்கள்ளல் எவ்வளவு மூச்சை இரண்டு நாசியிலும் இளுக்க முடியும்மா அவ்வளவு இழுங்கள் . எவ்வளவு நேரம் நிறுத்த முடியுமோ நிறுத்துங்கள் . பின்பு வெளிவிடுங்கள் இப்படி 7 முறை செய்யுங்கள் .. இப்படி 10 நாட்கள் செய்யுங்கள் .
வீட்டில் வாசி யோகம் பாடம் 5 .
அஷ்டாங்க யோகத்தில் நான்காம் அங்கம் பிராணாயமம் . இந்த பிராணாயாமத்தில் வாசியை உருவாக்கினால்தான் அஷ்டாங்க யோகம் வெற்றி பெறும் ., அதுவே வாசி யோகம் . அது போல் வாசி யோகத்தில் 8 அங்கம் களை கடை பிடித்தால்தான் வாசி யோகம் வெற்றி பெறும் . இந்த 8 அங்கங்களையும் அவற்றை செய்முறை படுத்தவும் திரு மூலர் திரு மந்த்திரத்தில் சொல்வதை பார்போம்.
இயம நியமமே என்னில ஆதனம்
நயமுறு பிராணாயாமம் பிரத்தியாகாரம்
சயமிகு தாரணை தியானம் சமாதி
அயமுறு அட்டாங்கம் மாவது மாமே
திருமந்திரம் பாடல் ௫௫௨
அஷ்டாங்க யோகத்தின் 8 அங்கங்கள்
1 இயமம் என்ற ...செய்ய தகாதவை .
2 . நியமம் என்ற ... செய்ய வேண்டியவை .
3.ஆசனம் . யோகா ஆசனம் இவைகள் எண்ணிக்கையில் அடங்காதவை
4. பிராணாயாமம் என்ற சிறப்பான மூச்சு பயிற்சி
5. பிரத்தியாகாரம் தென்ற உடலுள் பார்ப்பது .
6. தாரணை என்ற பாவிக்கும் முறை .
7. தியானம் என்பது மனதை குவித்து ஒன்றின்மேல் இறைவன்மேல் நிறுத்துதல் .
8சமாதி என்ற இறைவனோடு ஒன்றுதல் ஆகிய 8அங்கங்களும் வாசி யோகா அங்கங்கள்.
நமது வழக்கை முறை மனதை பாதிக்கும் அது மூச்சின் செல்பாட்டை பாதிக்கும் . அது நமக்கு இன்புணர்வு அல்லது துன்ப உணர்வை தரும் .. மனம் மகிழஉடன் இருக்க நமது வாழ்க்கை முறை முக்கிய பங்கு கொள்ளும . இதை அடிப்படையாக கொண்டது முதல் இரண்டு அங்கங்களான இயமமும் நியமமும் ஆகும் .. இவற்றை தான் அனைத்து மதங்களும், இயக்கங்களும், பக்தி மார்க்கங்களளும் சொல்கின்றன , திரு மூலர் சொல்வதை பார்ப்போம்
.
இயமம். என்ற செய்ய கூடாதவை .
கொல்லான் பொய்கூறான் களவிலான் எண்குணன்
நல்லான், அடக்கமுடயன் நடுசெய்ய
வல்லான் பகுந்துஉண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் இயமத்திடை நின்றானே
திரு மந்திரம் பாடல் 554
. உயிரை கொல்லாதவன் ,.பொய் சொல்லாதவன் , களவு செய்யாதவன் , . ச நல்லவன். .அடக்கமுடயவன் . நீதி சொல்ல வல்லவன் . தனக்கு கிடைத்ததை பிறர்க்கும் கொடுப்பவன் பகிர்ந்து உண்பவன் . குற்றம செய்யாதவன் . கள் முதலிய போதை பொருள் உண்ணாதவன் வேசித்தனம்இல்லாதவன் . இத்தகைய வாழகை வாழ்பவர் இயமத்தான் . இவரே என்குணன் என்ற இறை வனை அடைய தகுதி பெற்றவர் ..
இதுவே மனித தர்மம் , மனித நேயம் மனிதம் , மனிதனின் கடமை . வேதங்களும் சத்திரங்களும் சொல்பவை . இறைவன் இல்லை என்பவரும் ,பக்தி மான்களும் சொல்லுவது .
நியமம் என்ற செய்ய உகந்தவை
தவம் செபம் சந்தோசம் ஆததிகம் தானம்
சிவன்றன் விரதம் சித்தாந்த கேள்வி
மகம் சிவபூசை யொன்மதி சொல்லீரைந்தும்
நிவம்பல செய்யின் நியமத்தானாம்
திரு மந்திரம் பாடல் 557
. !. இறை நம்பிக்கை . 2. அதில் மகிழ்ச்ச்சி. 3. தவம் செய்தல் 4 ஜெபம் செய்தல் . 5. தம்மிடம் மிகுந்த்து உள்ளதை தானம் செய்தல் ,6 இறைவனை அடைய விரதம் ( சிவா விரதம் ) 7. உண்மைகளை அறிய அறிவார்ந்தவர் சொல்வதை கேட்டல் ..8. அகம் என்னும் உள்நோக்கள் 9 இறைவனை பூசித்தல் ( சிவ பூசை ) 10. அறிவுடைய சொல் சொல்லுதல் ஆகிய பத்து செயல்களும் செய்பவர் . நியமத்தார்
இங்கு திரு மூலர் சிவன் என்று சொல்வது ஆதி சிவனாகிய இறைவனைதான் . அவரது காலத்தில் ஏசு, அல்லா என்ற பெயர் இறைவனுக்கு இல்லை .. இறைவனை சிவன் என்று சொல்லி உள்ளார் .. . இறைவன் யார் சிவன் யார் என்பதை திரு மூலர் 50 பாடல்களில் திரு மந்த்திரத்தில் சொல்லி உள்ளார் . அன்பே சிவம்...
இறைவனை அறியவும் , அடையவும் வாசியோகம் செய்யவும் இயம நியம மற்றும் அன்பு அவசியம் .
செய்முறை . . முன் பதிவில் சூரிய யோகம் சந்திர யோகம் , பிராணாயாம ஆரம்பம் ஆகியவை சொன்னேன் . பல நண்பர்கள் செய்து பார்த்து மகிழ்ச்சியை பகிர்ந்தனர் . சந்தேகம் கேட்டு தெளிவு பெற்றனர் . நன்றி . வாசி யோகா அடிப்படை ஆரம்பிக்கும் முன் நீங்கள் உங்கள் முச்சு காற்றின் தன்மையை கீழ கண்டவாறு நிர்ணயம் செய்யுங்கள்.
.> மூச்சு பயிற்சி ஆரம்பிக்கும் முன்
!. பாய் அல்லது கம்பளி விரித்து அதன் மேல் ஒரு பருத்தி துணி விரியுங்கள் . அல்லது கனமான ஜமுக்காளம் விரியுங்கள் .
2. காற்று ஒட்டமான அரை நல்லது. .Ac ஏசி அரை என்றால் எச்சஸ்ட் மூலம் உள் காற்றை அகற்றியபின் பயிற்சிக்கு அமருதல் நல்லது .
3 ஊர்வன பறப்பன தொல்லை இல்லாமல் இருத்தல் நல்லது .
4.கூரைக்கு கீழ் அமருதல் நல்லது . ஆரம்பகாலத்தில் வெட்ட வெளியில் அமர வேண்டாம் . ,
5. கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமருதல் வேண்டும் .
6.வெறும் வயிற்றில் பயிற்சி செய்தல் நலம் . தவிர்க்க முடியாவிட்டால் திரவம் அருந்தலாம் .
7. உணவு உண்டால் சுமார் 2 மணி கழித்து பயிற்சி செய்தல் வேண்டும்
8. சம்மணம் கூட்டி நிமிர்ந்து உட்கார்ந்த்தால் போதும் .இது சுகா ஆசனம் . . பயிற்சி உள்ளவர்கள் பத்ம ஆசனம் அல்லது வச்ரா ஆசனத்தில் அமரல் நன்று கீழே உட்காரமுடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து நிமிர்ந்து உட்காரலாம்
9 பெருவிரலையும் ஆட்காட்டி விரலையும் இணைத்து மதரா மூன்று விரல்களையும் நீட்டி உள்ளங்கை வானை நோக்கி இருக்கும்படி இரண்டு முழங்கால் மீது வைத்துக் கொள்ளுங்கள். இது சின் முத்திரை ..
இதன் பின் மூச்சை கனகிடுகிறோம்.
1 மூச்சை உள்ளே இழுக்கும் போது மனதுள் ஒன்று இரண்டு. என்று எண்ணுங்கள். உங்களால் சிரமம் இன்றி எவவளவு என்ன முடியும் என்பதை குறித்து கொள்ளுங்கள். மூன்று அல்லது நான்கு முறை செய்து அதன் சராசரியை குறித்தல் சிறப்பு .. இதன் பெயர் பூரித்தல். இந்த எண்ணிக்கை பூரித்தல் நேரம்
2. மூச்சை உள்ளே இளுத்த பின் மூச்சை உள்ளே நிறுத்துங்கள் . அப்பொழுது மனதுள் ஒன்று இரண்டு என்று எண்ணுங்கள் . சிரமம் வரும் வரை எண்ணுங்கள் இது கும்பகம் என்பது இந்த எண்ணிக்கை கும்பக நேரம் .
3 மூச்சை இழுத்து நிரித்தியபின் சிரமம் வரும் போது வெளிவேடுங்கள் . அப்படி வெளியிடும் போது மனதுள். ஒன்று இரண்டு என்று எண்ணுங்கள். . இதன் பெயர் ரேசகம். இந்த எண்ணிக்கை உங்கள் ரேசக நேரம் .
இவற்றை செய்து பார்த்து நேரத்தை குறித்து வையுங்கள் . இது உங்கள் இன்றைய மூச்சு திறன்
வீட்டில் வாசி யோகம் பாடம் 6.
வாசி யோகத்தின் 3 வது அங்கம் ஆசனம் . அஷ்டாங்கயோகத்தின் 3 ஆம அங்கமும் பிற அங்கங்களும இயம நியம அன்பு உள்ளவர்கே கற்று தர வேண்டும் .. இவை இல்லாதவர்க்கு கற்றுதருவது பெரும் பிழை என்று திரு மூலர் சொல்கிறார் . பார்க்க திருமந்திரம் பாடல் 506
ஈவது யோகா இயம நியமங்கள்
சார்வ தறிந்தன்பு தங்கும் மவர்கன்றி
ஆவ தறிந்தன்பு தங்கா தவர்களுக்
கீவ பெரும் பிழை என்று கொள்வீரே .
மாணவர் அனைவரும் தகுதி உள்ளவர்கள் எனவே ஆசனம் பற்றி திரு மூலர் சொல்வதை பார்ப்போம் .
பங்கயமாதி பரந்த பல் ஆதனம்
அங்குளவாம் இருநாலு அவற்றினுள்
சொங்கில்லை யாகச் சுவத்திக மெனமிகத்
தங்க இருப்பத் தலைவ னுமமே .
திரு மந்திரம் பாடல் 558
பங்கயம் என்ற பத்மாசனம் முதல் பல ஆசனங்கள் உள்ளன ,அவற்றுள் எட்டு ஆசனங்கள் சிறந்தவை . அதில் துன்பமில்லாத சுவத்திகம் என்ற சுக ஆசனத்தில் அமர்ந்து வாசி யோகம் செய்ய தலைவனாக(இறைவனாக) ஆகலாம்
. சம்மணம் கூட்டி நிமிர்ந்து உட்கார்ந்த்தால் போதும் .இது சுகா ஆசனம். அது இயலாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து நிமிர்ந்து உட்கார்ந்தால் போதும்
.
வாசி பிராணாயாமம் செய்யா ஆசனத்தில் அமரும் முன் சில முன் தயாரிப்புகள் செய்தல் நல்லது . அவை சூரிய யோகம் , சூரிய நமஸ்காரம் . கற்பம் உன்னால் ஆகியவை . . சூரிய யோகம் முன்பதிவில் பார்த்தோம் . சூரிய யோகம் சித்தி பெற்றால் சூரிய நமஸ்காரம் செய்வது சிறந்தது . சூரிய நமஸ்காரம் 12 ஆசனங்கள் . தொடர்ச்சி யாக செய்வது இது செய்தால் சூரிய யோகம் செய்த பலன் கிடைக்கும் . மேலும் பத்து நாடிகளும் சீராக செல்படும் . வாசி யோகம் செய்யும் பொது மூச்சு பிடிப்பு போன்ற இடையூறு ஏற்படாது . வாசி நிற்கும் ..
நம்மில் பலருக்கு சூரிய நமஸ்கார அருமை தெரிவதில்லை . காலை அல்லது மாலை சூரியனில, சூரியனை நோக்கி இந்த தொகுப்பு ஆசனங்களை வாசியோக பிரானா யாம செய்வதற்கு முன் செய்வது சிறந்தது இதை செய்யும் விதத்தை சொல்கிறேன்.
வீட்டில் வாசியோகம் படம் 7
வாசியோக எட்டு அங்கங்களில்; இயம, நியம, ஆசன என்ற மூன்று பார்த்தோம் . வாசி நிற்பதற்கு முன்தயாரிப்பாக . மனதையும் உடலையும் சுத்தி செய்ய வேண்டும் . மனதை குவியசெய்யவும் பிரபஞ்ச உயிர்சக்தி பெறவும் திராடக , சூரிய யோகா, சந்திர யோகா மற்றும் சூரிய வணக்கம் ஆகியவை பார்த்தோம்.. பிராணயாமத்தில் பூராக, ரேசக கும்பகம் . பார்த்தோம் . அதில் அமரும் ஆசனம் பார்த்தோம் .
இனி உடலை சுததிசெயும் முறை பார்ப்போம்.. உடல் என்பது மூன்று தேகங்கள் கொண்டது .அவை
1. ஸ்துல என்ற பரு உடல் ::தலை ,கை., கால நெஞ்சு, நுரையீரல், இதயம், இரைப்பை குடல் ஈரல் போன்ற அங்கங்களால் ஆனது பரு உடல்
2. சூட்சமம் என்ற நுன் உடல் :: இரத்தம் , காற்று , வெப்பம் , மின்சக்தி, காந்தத சக்தி ,உயிர் சக்தி ஆகியவைகளின் நாடிகள் ஓட்டம்; , அங்கங்களளின் செல்கள் முதலியவை நுன் உடலில் அடங்கும்
3. காரண தேகம் என்ற விஷ்ட தேகம் ; ஸ்துல சூட்சமம் தேகம் பெற அடிப்படையானது . இன்றைய அறிவியல் இதை geneஜீன் உடல் என்கிறது
இந்த மூன்று உடலையும் சுத்தம் செய்து வாசியை நிறுத்த வேண்டும் .. அதற்கு உபாயம் கொங்கணர் சொல்கிறார்
.
இரண்டாக இருந்ததப்பா . வாசி தாணு
மேர்த்துடனே ஒன்றாச்சு அதுவும் போச்சு
பந்தாக பழகிற்தற் கிதுவே மார்க்கம்
பார்க்கையிலே கற்ப்பமுண்டு பாரு பரு
. கொங்கணர் மூவாயிரம் முதல் காண்டம் பாடல் 201
வாசி என்ற மூச்சு காற்று இடது நாசி ஓட்டமாக இடைகலைஎன்றும்
வலதுபுற ஓட்டமாக பிங்கலை என்றும் இரண்டாக ஓடும் . அதை வலது நாசியில் உள்ளே இழுத்து நிறுத்தி இடது நாசியில் வெளி இட்டு. ஒன்றாக மாற்றப்பட்டது . பின்பு வாசி குண்டலியாகி வாலை ஆகியது. . இவ்விதமாக முறையாக வாசி யோகம் பழக வேண்டும் . இவ்விதம் வாசி யோகம் பழகும் போது கற்பம் உண்டு வாசியோகம் பழக வேண்டும் .
கொங்கணர் விதிப்படி வாசி யோகம் பழகுவதை விரிவாக பிராணயாமம் என்ற நான்காம் அங்கததில். பார்ப்போம். அதற்க்கு முன் கற்பம் உண்ணுதல் என்பதை பார்ப்போம் ,
கற்ப மருந்து அல்லது கல்ப மருந்து எது ?
மருந்துகள் ஐந்து வகை உண்டு . அவை
1. துயர் நீக்கி ( : )பரு உடலில் வரும் நோய் துயர் . இந்த நோயில் வேலை செய்து . உடல் துன்பத்தை போக்கும் . சிலவகை காய்ச்சல் , தலைவலி, இருமல் , சிறு கட்டிகள் போன்றவை களை நலமாக்கி துயர் நீக்கும் . .
.
2, பிணி நீக்கி ( ) சூக்கும உடலில் வரும் நோய் . பிணி . இது செல்களை பாதிக்கும் . . இதன் வெளிப்பாடு பரு உடலில் தெரியும் . காச நோய் , , எயிட்ஸ் , பால்வினை நோய்கள் மஞ்சக் காமாளை முதலியவைகளை. குணப்படுத்தும் ..
3. கன்மம் நீக்கி ( ) இது காரண தேக பாதிப்பால் உருவாவது .. ஜீன் குறை பாட்டால் உருவாகும் . . புற்று நோய், நீர்இழிவு . வலிப்பு ,மரபு குறைபாடு ஆகியவை அடங்கும் , இதை கர்மவினை என்பர் . இவற்றை போக்குவது கன்ம நீக்கி முறை .
4.நோய்தடுப்பு மருந்து .( ) நோய் வராமல் தடுப்பது.
5. கற்பமருந்து அல்லது கல்பங்கள்: இம்மருந்துகள் துயார் , பிணி, கன்மம் ஆகியவற்றை போக்கும் . கற்ப மருந்துகள் 108 என்று இறுதி செய்துள்ளார்கள் சித்தர்கள் . எயிட்ஸ் பற்றியும் , புற்றுநோய் பற்றியும் அதை போக்கும் கல்ப மருந்துகள் பற்றியும் சொல்லி உள்ளார்கள் ..
.. இன்றைய ஆங்கில மருத்துவ முறை கல்ப மருந்துகள் என்னும் விஞ்ஞானம் பற்றி அறியவில்லை . . கண்ம நோய்களுக்கு தீர்வும காணவில்லை ..
வாசி யோகத்திற்கும் கல்பங்களுக்கும் உள்ள தொடர்பை பார்பபோம .
கலபங்கள் செல்களில் தங்கி யுள்ள விசங்களை போக்கி வெளி ஏற்றும் .. இந்த விசங்கள் கழிவுகலாய் வெளியேற்றபடும் . . முக்கியமாக சளி , மலம் மூத்திர மாக வெளியேற்றும் . இதனால் செல்கள் புதிப்பிக்கப்படும் செல் களுக்கு உள்ளேயும் செலகளுக்கு வெளியேயும் இடை வெளி உருவாகும் . இதனால் உறுப்புகளின் சுருங்கி விரியும் தன்மை அதிகரிக்கும் . இதனால் நுரை ஈரல் . உதர விதானம் , மர்புக்ககூடு ஆகியவை அதிகமாய் விரிவடையும் . பிராணயாமம் செய்யும் பொது அல்லது சுவாசிக்கும் போது அதிக உயிர் சக்தி உடலுள் வரும் . உடல் வலுப்பெறும் . உடல் இளமை அடையும் .
சித்தர்களின் 108 கற்பன்களில் முதன்மையானவை மூன்று . இந்த்த மும்மூர்த்திகளே வாசியை நிர்க்கசெயும் கல்பங்கள் இவைகள் செல் கலீல் விசத்தை பொலி அவற்றை சளியாக , மலமாக மூத்திர மாக வெளி ஏற்றும் . வாசி வலுபெற்று நிற்கும் . .
1. கரிசாலை என்ற கரிசலங்கண்ணி என்ற கரிப்பபான் என்ற வெள்ளை பூ பூக்கும் கரிசாலை . .
2. கற்றாழை என்ற சோற்று கற்றாழை .
3 . கடுக்காய் என்ற அமிர்த கடுக்காய்
இவை மூன்றும் நம்மில் பலருக்கு தெரியும் ., ஆனால் இவற்றை கல்ப மாகாக பயன் படுத்தும் தொழில்நுட்ட்பமே சித்தர்கள் அறிவியல் . இவற்றை விரிவாக வரும் பாடத்தில் பார்ப்போம்
வீட்டில் வாசி யோகம் பாடம் 8.
இன்றைய மருத்துவ அறிவியல் உடலை புதிப்பித்தல்rr( Theory of rejuvenation ) என்னும் கோட்பாட்டில் பெரும் பொருள் செலவு செய்கிறது. அதில் ஒருபகுதி செல்லகளில் உள்ள விஷத்தை போக்குதல் .( Removal of junk or toxin materials from the cells ). இதில் அவர்கள் வெற்றி பெறவில்லை . ஆனால் சித்தர்கள் செல்ல்களில் உள்ள விஷத்தை போக்க மூன்று கல்ப மருந்துகளை கொண்டு ஒரு செய்முறை (procedure ) வக்குத்துள்ளனர் .. அதன் பெயர் வழலை வாங்கல் ..
வழலைவாங்கள்
சென்ற பாடத்தில் கல்பம் பற்றி சொன்னேன் . அதில் முக்கியமான மூன்று கல்பங்கள், கரிசாலை , கத்தாழை . இவற்றின் தயாரிப்பு , பிரயோகம் செயல்படும் விதம் ஆகியவை பார்ப்போம்.
இம்முன்றையும் ஒன்றன் பின் ஒன்றாக பயன் படுத்தும் முறைக்கு வழலைவாங்கள் என்று பெயர் . . இந்த முறையால் உடலில் செல்களில் உள்ள விசம கோழையாக , மலமாக மூத்திரமாக வெளியேறும் . இதுவே வாசி யோகத்தில் உடல் சுத்தி . இது பற்றி கொங்கணர் சொல்வதை பார்ப்போம்.
சுகமாக காயத்தில் வழலை வாங்கப
பேனப்பா ஆவின் நெய் படிகாலுக்குள் .
பேரான கையான்சார் அரைப்படிதான்
நானப்பா மெழுகுபதம் தன்னிலேதான்
நறுநெய்வடி கலசத்துட் சொலலகேளே
கொங்கணர் கற்ப்பம் 100 பாடல் 57
வெல்லுகிறேன் என்ற மிளகு தானே
மீறாமல் லாரை களஞ்சி பொடித்துக்கொண்டு
செல்லும் பூவழலை பணவேடையும் கூட்டி
சிறப்பாக வடிகலசம் தான்னில் போடு.
பாடல் 58
நாட்டமுடன் சுகழினையிலே மனதை நாட்டி
நலமாக மேலவாசல் கண்டத்து ஊதி
மாட்டடா பெரு விரலை நெய்யில் தோய்த்து
வலஞ்சுத்தி உள்ளேற்று வாசி ஊதி
கலட்டடா கருவழலை வழலை வாங்கு
பாடல் 59
தாங்கியபின் இகவேன்நீர் விட்டு விட்டு
சலக்கட்டை யுறிஞ்சி கொப்பளிப்பாய்
பாங்குடனே மண்டலந்தான் செய்யும்போது
படுபாவி கண்டநஞ்சு கொல்ல பார்க்கும்
ஓங்கியே கத்தலழன் சாருதன்னை
ஓகோகோ கருவிட்டு சொல்லகேளு
பாடல் 60
கேளப்ப தர்சனையும் மத்திமையும் கூட்டி
கேடியான தத்துவங்கள் தளர போட்டு
வாளப்பா பாவை போல் இருந்து கொண்டு
வாகாக கண்டத்தை வசைத்து வாட்டு
நாளப்பா தினந்தோறும் மிது போல்செய்து
நலமாக பின்னங்கே வழழை வாங்கே
பாடல் 60
பேனுநீ இந்நீரில் கடுக்காய் மையை
பிதற்றாமல் கரைத்துடனே உள்ளே கொள்ளு .
வேணிநீ கொண்டபின்பு பர்ப்பமெல்லாம்
விறேசிக்க லச்சியத்தில் மேவி யூது
பாடல் 62
ஆட்டையிலே கண்ட நஞ்சு கூமுட்டை போல்
அப்பனே அகன்று ஆரோக்கியமாகும் .
பாடல் 64
பாடல்களின் பொருள் மற்றும் வழலை வாங்கல் செய்முறை
கரிசாலை நெய் .
கரிசாலை என்ற வெள்ளை பூ பூக்கும் கரிப்பான் என்ற மூலிகை எங்கும் கிடைக்கும் . நகர் புறத்தில் கீரை விற்பவர்களே கொண்டுவந்தது தறுவார்கள் . அதை கழுவி தண்ணீர் காய்ந்ததபின் . மிச்சியில் போட்டு அரைத்து விழுதை எடுக்கவேண்டும் . அதை ஒரு துணி அல்லது வடிகட்டியில் வைத்து பிழிந்து சாறு எடுக்கவும் . கரிசாலை சாறு ஒருபக்குடன் அரைபங்கு நெய் சேர்த்து கலக்கி அடுப்பில் வைக்கவும் . சிறு தீயாக எரிக்கவும் . சிறிது நேரத்தில் தண்ணீர் சத்து வற்றி மெழுகு போல்வரும் . முருகவிடகூடது . . 5கிராம் மிளகை த்ஹோல் செய்து இந்த கரிசாலை நெய்யில் சேர்த்து கிண்டி இறக்கவும் . . கரிசாலை நெய் பயன் பாட்டுக்கு தயார் .
பயன்படுத்தும் முறை
கரிசால நெய்யை கட்டை விரல் வெள்ளை பகுதியில் ரேகைக்கு மேல் உள்ள பகுதி முழுவதும் தடவவும் . வாயை நன்றாக திறக்கவும் . கரிசாலை நெய் தடவிய கட்டை விரலை வாய்க்கு உள்ளே அன்னக்கிர்க்கு ( உள்நாக்கு ) மேல்பக்குதிக்கு கொண்டு செல்லவும் . .
கரிசாலை நெய்யை அண்ணாக்கின் மேல்பகுதியில் தடவவும் . அங்கு கட்டை விரலால் அழுத்தி இடவலமாக(கையை ) சுற்றவும் . ஒரு நிமிடம் சுற்றினால் போதும் . தலை , தொண்டை மார்பில் இருக்கும் விஷம் சளியாக கோழையாக கைவழியாக இறங்கும்.
இது வழ வாழபாக இருப்பதால் வழலை என்று பெயர் . இது சங்கிலிபோல் நஊலாகவும் வரும் . சிலருக்கு உள்ளே உள்ள சளி வெளிவரும் . . இப்படி வழலை வெளி வந்தபின் வாய கொப்பளிக்கவும் . வெது வெதுப்பான நீர் நல்லது . இது ஒரு சுற்று . இவ்விதம் நான்கு சுற்று வழலை வாங்கவும் . . இதை சிவா வாக்கியர் மூலாதாரத்தில் முளைக்கும் கோரையை தினம் நான்ங்குகட்டு அறுத்து எடுக்கவேண்டும்.. இதனால் கிழவன் பாலனாவான் என்று மறை பொருளாக சொல்கிறார் .. இந்த நெய்யை ஒரு ரூபாய் வட்டம் அளவு சாப்பிட்டு நீர் அருந்தவும்..
கத்தாழை கற்பம .
இவ்விதம் காரிசாலை கற்ப வழலை வாங்கும் போது வெளியான விஷம் மரணத்தை தரும் வல்லமை கொண்டது . அந்த விஷத்தை உடலில் தங்காமல் வெளிஎட்ற வேண்டும் . கத்தாழை கற்பம் விஷத்தை முறித்து மலமாகவும் மூத்திரமாகவும் வெளியேற்றும் . இது சித்தர் அறிவியல்.
செய்முறை .
சோற்று கத்தாழை மடலில் இரண்டு அங்குலம் தோல் சீவி கத்தாழன் சோற்றை எடுத்து அதில் ஒரு சிட்டிகை மிளகை சேர்க்கவும் நடுவிரலும் ஆள்காட்டி விரலும் சேர்த்து கொள்ளவும் . அதன் வெள்ளை பகுதியில் கத்தாழை மிளகு கூழல் தடவவும் . வாயை நன்றாக திறக்கவும் . இந்த கத்தாழை கூழ்தேய்தத விரல்களை தொண்டைகுள் அடிபகுதிக்கு செழுத்தவும். கத்தாழங் கூழை தொண்டை அடிப்பகுதியில் தடவி விரல்களை (கையை )முன் பின்னாக அசைத்து நன்றாக தேய்க்கவும்
. மீதம் இருக்கும் கத்தாழை கூழை சாபிடவும் .
கடுக்காய் .. கற்பம்
கத்தாழை முறித்த விசத்தையும் முறிக்காத விசத்தை யும் கடுக்காய் முறித்து விறேசகம் என்ற வகையில் மலம் , வாயு , குடல் சளி அனைத்தும கலங்கி வெளியேறும். . .
செய்முறை .
கடுக்காய்க்கு கொட்டையில் விஷம் . அதை போக்க கடுக்காயை பாலில் வேகவைத்து எடுத்து கொள்ளவும் . அதை வெயிலில் காயவைக்கவும் . விஷம் நீங்கிவிடும். இது சுத்தி செய்த கடுக்காய் . .இதை கொட்டையுடன் உடைத்து மிக்சியில் அரைத்து பொடிசெயயாவும் . . கடுக்காய் கற்பம் தயார் . .
கத்தாழை உண்டபின் முக்கால் ஸ்பூன் கடுக்காய தூளை ஒருடம்ளர் நீரில் கலந்தது குடிக்கவும்
இவ்விதம் நாற்பது நாள் செய்யவேண்டும் . , அப்பொழுது மலம் வயிற்றை கலக்கி வெளியேறும் . , ஆகையால் கழிப்பறை அருகில் இருக்கும் படி பார்த்து கொள்வது நல்லது . . விறேசகம் அதிகமானால் இளநீர் , நீர்த்த பால் நிறைய குடிக்கலாம் . பால் சோறு சாப்பிடல். நல்லது .
இந்த மூன்று கற்பத்தை முடித்தால் உடல் புத்துணர்வு பெரும் . வாசி நிற்கும் . . பல நோய்கள் நீங்கும் . . குறிப்பாக செல்கள் புதிப்பிக்கப்படும் . . ஆயுள் கூடும் . இளமை பெருகும் . இதுவே மூலத்தில் முளைத்து வரும் கோரையை அறுத்தல் .
வீட்டில் வாசி யோகம் பாடம் 9
வாசி யோகத்தில் நான்காம் அங்கம் வாசிப்பிரானாயாமம் . . இதை சொல்வதற்குமுன் நண்பர்கள் கேட்ட பல சந்தேகங்களை போக்கவேண்டும் .
1. வாசி யோகத்தை வெளிப்படையாக சொல்லலாமா . ?
2. குரு நேரடியாக சொல்லிக்கொடுக்காமல் வாசி யோகம் கற்க முடியுமா ?
3. வாசியோகம் செய்ய துறவு அல்லது பிரமச்சாரியம் அவசியமா .?
இல்லற வாழ்வில் இணைந்து இருந்தாலும் வாசி யோகம் செய்ய முடியுமா ?.
4.வாசி யோகத்தை பாதியில் விட்டு விட்டால் துயர் வருமா ?
5. நீங்கள் எப்படி வாசி யோகம் கற்று கொண்டீர்கள் .?
. 1. வாசி யோகத்தை வெளிப்படையாக சொல்லலாமா . ?
நான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான் பெற்று நின்ற மறைபொருள் சொல்லிடின்
ஊண்பற்றி நின்றஉணர்வுறு மந்திரம்
தான் பற்ற பற்ற தலைப்படும் .
திருமூலர் திருமந்திரம் பாடல் 85
இந்த வான்வெளி ஆகிய பிரபஞ்சம முழுவதும் நிறைந்த இறைவனுடன் நான் சேர்ந்தால்பெற்றது எல்லை அற்றஇன்பம் . அதை வேதமாக திருமந்திரத்தில் சொல்லி உள்ளேன் . அதை கற்று கடைபிடிக்க கடைபிடிக்க உங்கள் உடலின் உணர்வு களில் அந்த இன்பம் தெரியும் .
திரு மந்திரத்தில் அஷ்டாங் யோகம் என்ற வாசி யோகமும் வாசி உருவாக்குவதும் இந்த வையக்கதில் உள்ள அனைவர்க்கும் சொல்லப்பட்டது .. எனவே நான் அனைவர்க்கும் வெளிப்படையாக சொல்வதில் தவறு இல்லை .>
காகபுசுண்டர் பெருநூல் காவியம் 1000 .
என்ற நூலில் பாடல் 996&997 இல் சொன்னது .
“உலகோர்க்காய் இன்நூலை உரைத்திட்டேனே
உரைத்திட்டேன் கருக்குருவை வெளியாய் சொன்னேன் “
.. சித்தி முத்தி யோக ஞான முறையும்சொன்னேன் ..........
............
நெறிக்கண் திறப்பதற்கு நெறியை சொன்னேன்
குறை நீக்கி நரை மாற்ற முறையும்சொன்னேன் .”
பொருள்
காகபுசுண்டர் தனது பெருநூல் காவியத்தில் வாசி யோகம் செய்வது , நெற்றிக்கண் திறப்பது உடல் நோய் நீக்குவது நரை உண்டாக்கும் முதுமை போக்குவது , அஷ்டமா சித்திகள் அடைவது ஞானம் பெறுவது முக்தி அடைவது ஆகியவற்றிற்கான வழிகளை வெளிப்படயாய் யை சொல்லி உள்ளார் . இவற்றை இவ் உலகில் உள்ள அனைவரும் அறிய சொல்லி உள்ளார் . . எனவே யோகத்தையும் ஞானத்தையும் வெளிப்படையாக சொல்லலாம்
.
காகபுசுண்டர் எனக்கு கொடுத்த கட்டளை
நூல் உனக்கு தருவதை மறைவாய் வைப்பாய்
முறையான சிடருக்கு முழுதும் சொல்லு.
நான் உனக்கு சொல்லி கொடுத்த நூலை மறைத்து வை . வாசி யோக முறை முதலில் சொல் . வாசியோக முறை கற்று தெரிய முறையான மாணவர்க்கு , சிவயோகமும் நான் நூலில் கூறியது முழு வதும் சொல் .
எனவே நான் அடிப்படை வாசி யோகம் மட்டுமே வீட்டில் வாசி யோகா தொடரில் சொல்கிறேன் . இது நன்மை தவிர தீமை செய்யாது . .
, 2. குரு நேரடியாக சொல்லிக்கொடுக்காமல் வாசி யோகம் கற்க முடியுமா ?
இதற்கு ஆதிகுருவும் திரு மூலரும் பதஞ்சலியும் திருவள்ளுவரும் சொல்வதை பார்ப்போம் .
வாசி யோக மற்றும் சிவயோக சரித்திரம்
ஆதி சேஷனுக்கு சிவயோகம் கற்க ஆசை வந்தது அதை விஷ்ணுவிடம் சொன்னார் . . விஷ்ணு அதற்க்கு “ மனிதராய் சிவனிடம் சிவயோகம் கற்று மீண்டும் வைகுந்த்தம் வா “ என்று ஆசிர்வதித்தார் .. அதன் படி பதஞ்சலியாக அவதரித்தார் . அவரது உடல் இடுப்புக்கு கீழ் பாம்பு மேலே மனித உரு . அவர் ஆதி சிவனிடம் வந்து வேண்டினார் . அதன்படி சிவயோகமாமுனி , பதஞ்சலி, வியாக்கிய பாதர் , நந்திகள் நால்வர் மற்றும் திரு மூலர் ஆகிய 8 பேருக்கும் சிவயோகத்தை கற்றுக்கொடுத்தார் . இதை திருமூலர் திருமந்திரம் பாடலில் கூறியுள்ளார் .
நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்ச்சலி வியாக்ரமர்
என்றிவர் என்னோ டெண்மரும் மாமே
திரு மந்திரம் பாடல் 67
திருமூலரிடம் காளங்கி எப்படி சிவயோகம் கற்றார் என்பதை பாப்போம்.
பரியான பரிதலத்தில் பணிந்து நின்று
பார்க்கையிலே திரு மூலர் பாதம் கண்டு
கெதியான மோச்ச மென நிற்கும்போது
கேசரியால் மனோன்மனியாள் கவடை திறந்து
விதியான அமைத்தவிதி எழுத்துகூட்டி
வீடான நவக்கிரகவிவரம் சொல்லி
மதியான தவம் காட்டி ரவியுன்ச் சொல்லி
மார்க்கமுடன் வாசியுடன் வழி சொன்னாரே
காலாங்கி நாதர் கற்பவிதி 82 பாடல் 2.
மனோன்மணி தாய் வாழும் வீடான சுழுமுனையில் துரிய தியானத்தில் இருந்தேன் . அப்பொழுது திரு மூலரின் பாதம் கண்டேன் . . எனக்கு நற்கதி கிடைக்க மோட்சம் என்ற முகக்திக்கு வழி கேட்டேன் . அகர உகர ஆகிய எழுத்துகளின் பொருளும் அவற்றை சேர்க்கும் முறையும் சொன்னார் . நவக்கிரக வீடு என்ற உடல் தத்துவம் 96யின் விவரம் சொன்னார் . வாசி யோகம் செய்யும் வழியும் ,மதியான தவம் என்ற சிவயோகமும் ரவி என்ற முப்பு மார்க்கமும் சொன்னார் .
இந்த பாடலில் அறிவது காலாங்கி துரிய தியானத்தில் திரு மூலரிடம் கற்றார். ஆனால் நேர்முகமாக கற்கவில்லை .
. பதஞ்சலி பாடம் சொல்லி கொடுத்ததை சொல்லியுள்ளார் . இது புராணசெய்தி .
பதஞ்சலி சிவயோகம் கற்ற பின் வைகுண்டம் செல்ல காலம் வந்தது . அப்பொழுது மனிதர்களுக்கு சிவா யோகம் கற்று கொடுக்க விரும்பினார். பதஞ்ச்சலி.. அவர் ஆதிசேஷன் அவரது பார்வை அல்லது மூச்சு காற்று பட்டாலே சாதாரண மனிதர்கள் எரிந்து விடுவார்கள் . , எனவே தான்னை சுற்றி திரை அமைத்து அதனுள் இருந்து மாணவர்களை நேரில் பார்க்காமல் பாடம் சொல்லி தந்தார் . அவரின் சொற்களை கேட்டு மாணவர்கள் படித்தார்கள் ..
இது போன்றுதான் .நான் முக நூல் வழி சொல்கிறேன் . அதை படிக்கிறீர்கள்
திருவள்ளுவர் கற்பம் 300 பாடல் 176
கொள்ளுவதற்கு குருவேணும் என்றெண்ணி
யுள்ளங்கலங்க துரைக்க உலகிலுண்டோ
கள்ளமமல்ல கனிந்த குருவாகும் விந்நூல்
வள்ளுவன் மெய் யுரையாய் வையகத்தில் பாடிநேனே
பொருள்
கற்று கொள்வதற்கு .குரு வேண்டும் என்று உள்ளம் கலங்க வேண்டாம் . இந்நூல் போல் கள்ளம என்ற மறைப்பு இல்லாமல் சொல்லும் நூல் உலகில் இல்லை . என்னுடைய நூலே முதிர்ந்து பழுத்த குரு என்பதை உண்மையாக உலகிற்கு சொல்கிறேன் .
எனவே நீங்கள் குரு இல்லை என்று கவலை படவேண்டாம் நான் எழுதுவது குருவாக இருக்கும் . .
.3. வாசியோகம் செய்ய துறவு அல்லது பிரமச்சாரியம் அவசியமா .?
இல்லற வாழ்வில் இணைந்து இருந்தாலும் வாசி யோகம் செய்ய முடியுமா ?.
வாசி யோகம் செய்ய துறவு அல்லது பிரமச்சாரியம் அவசியம இல்லை . அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலாதார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கு இல்லை
அஞ்சும் அடக்கினால் அசேதனம் மாமென்றிட்
டஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே.
திருமந்திரம் பாடல் 2033
கண்டு , கேட்டு , உண்டு , முகர்ந்தது , உற்று அறிய கூடிய அஞ்சு புலன்களையும் அடக்கு அடக்கு என்று அறிவு இல்லாதவர்கள் தான் சொல்வார்கள் . அவ்விதம் அடக்கிய கடவுள்கூட மேல் உலகில் இல்லை . அவ்விதம் அடக்குவது அறிவுடையது இல்லை (அசேதனம் ) என்று அறிந்தேன் . ஆகையால் அஞ்சும அடக்காமலே முக்திபெறும் அறிவு அறிந்தேன் எனவே முக்தி அடைய . பிரமச்சாரியம் அவசியம இல்லை..
ஆண் பெண் இணைப்பை கர்ப கிரியை மற்றும் பரியங்க யோகம் என்ற இரண்டு
அத்தியாயங்கலீல் திரு மூலர் திரு மந்த்திரத்தில் சொல்கிறார் .
அறிகின்ற மூலத்தின் மேல் அங்கி அப்பு
செறிகின்ற ஞானத்து செந்தாள் கொளுவிப்
பொறை நின்ற இன்னுயிர் போந்துறை நாடிப
பரிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே
திரு மூலர் திரு மந்திரம் பாடல் 452
மூலாதாரத்திற்கு சிறிது மேல், உள்ள ஆண் பெண் குறிகளும் கால்களும் இணைந்து, அங்கி அப்பு என்ற சுக்கிலம் சுரோணிதம் கருப்பையில் பெய்ய செய்யும் ஞானம் தந்தவன் இறைவன் ., இதனால் பெண்ணை பத்து மாதம் குழந்தையை கருவில் சுமக்க செய்து ,குழந்தை பிறக்கவைத்தவன் இறைவன் . ஆணும் பெண்ணும் இணைந்து சந்ததி உருவாக்குவது இறைவன் தந்த இயற்கை ஞானம்
கண்டனும் கண்டியும் காதல் செய் யோகத்து
மண்டலம் கொண்டிரு பாலும் வெளிநிற்கும்
வண்டியை மேற்கொண்டு வாநீர் உருட்டிட
தண்டோருகாலும தளராது அங்கமே
ஒத்த மனமும் உடலும் கொண்ட கணவனும் மனைவியும் இணைந்து காதல் செய்வது பரியங்க யோகம் . அப்பொழுது உடலிலுள்ள இருவரின் அக்கினி , சூரிய சந்திரமண்டலங்களும் இணைந்து இருவர் உயிர்சக்தியும் பரவெளியில் ஒன்றும் . இவ்விதம வாநீர் என்ற சுக்கில சுரோணிதம் கலப்பதால் இருவர் உடலும் கெட்டு போகாது .
“விந்து விட்டால் நொந்து கெடும் “.. என்றவாகியத்தை மேற்கோள் காட்டி யோகம் செய்ய பிரமாச்சரியம் வேண்டும் என்பார்கள். அது தவறு . விந்து என்பது தலைக்கு மேல் 4 விரல்கடை உயரத்தில் இருக்கும் சஹாஸ்றாரம் அல்லது பிரம்மரந்தராம் என்ற தலம். வாசி யோகம் செய்யும் போது சுழிமுனை என்ற தலைக்கு உள் இருக்கும் இடத்துடம் வாசி யோகத்தை முடிக்க கூடாது . அதற்க்கு மேல் உள்ள சகஸ்ரார தளமும் ஏறி வாசி யோகம் செய்யவேண்டும் .
இந்த விந்து என்ற சஹாஸ்றாரம் தளம் வரை ஏறி வாசி யோகம் செய்யா விட்டால் யோகா பலம் கெடும் . இதுதான்“விந்து விட்டால் நொந்து கெடும்” என்பதன் பொருள் . இதை போகர் 1000 பாடல் 140 ௦ இல் “
:”தாயென்ற யகாரமாம் சதாசிவன்தான் னொன்று
சார்ந்து நின்ற விந்துவதின் மேலுமமாமே”
என்று சொல்லி உள்ளார்
இல்லறம் பற்றி திருவள்ளுவர்கற்பம் 300 பாடல்கள் சொல்வதை பார்ப்போம்
வாயத்துதைய எந்தனுக்கு மாணவி தானும்
இல்லறமும் துறவறமும் எனக்கே சித்தி
பாடல் 180
எவர்தேற போறார்கள் என்று எண்ணாதே
மருளாமல் இருப்பவரே பெரியோராகும்
மாதருடன் வையகத்தில் வாழழாமே
பாடல் 212
இணை பிரியாமலே துணை மறவாதே நீ
பிணை வழி மாதர்கள் தனையும் அகற்றிடு
உடை கட்டியே மையல்கள் ஊட்டியே
உலகத்தையே சாம்பல் ஆக்கிடும்
பாடல் 214
எனக்கு வாய்த்த மனைவியால் இல்லறத்திலும் துறவரத்திலும் வெற்றி பெற்றேன் .
வாசி யோகாம செய்து கற்பம உண்டு யார் வெற்றி அடைவார்கள் என்று மிரண்டு போகாமல் இருப்பவர் பெரியவர் , அத்தகையோர் உலகத்தில் பெனண்னுடன் சேர்ந்து இல்லற வாழ்க்கை வாழழாம்
உன் மனைவியை மறகாமல் அவளை விட்டு பிரியாமல் இணைந்து வாழ
பிணை வழி மாதர் என்ற விலை மாதர்களை நினைவில் இருந்து அகற்று. அவர்கள் கவர்ச்சியான உடை அணிந்து கவர்ச்சி காட்டி உலகை சாம்பல் ஆககுவார்கள்.
வசிச்டருக்கும் விசுவமித்திரருக்கும் அகத்தியருக்கும் மனைவி யுண்டு . இந்து கடவுள்களுக்கு மனைவி உண்டு . எனவே இல்லறத்தில் இருந்து வாசியோகம் செய்வதே சிறப்பு .
4.வாசி யோகத்தை பாதியில் விட்டு விட்டால் துயர் வருமா ?
வராது . எந்த அளவு சாதனை செய்தீர் களோ அதற்கு ஏற்ப சக்தியும் சித்தியும் கிடைக்கும் . பிற்காலத்தில் வாசி யோகம் தொடரலாம் . இதுவே விட்டகுறை தொட்ட குறை .
5. நீங்கள் எப்படி வாசி யோகம் கற்று கொண்டீர்கள் .?
திருமணம் ஆனா பின்பு சித்தர் நூல்களை படித்து தட்டு தடுமாறி பிராணாயாமம் செய்ய ஆரம்பித்தேன் .. சில ஆண்டுகளில் பிராணாயாம நுணுக்கம் தெரிந்தது . . 5 ஆண்டுகளுக்கு பின் வாசி இருப்பது தெரிந்தாது அதன் பின் வாசியை பழகினேன் . . பலநேரங்களில் சித்தர்கள் கனவில் கற்பித்தார்கள் சிறிது முன்னேறி தியானம் வரை அஷ்டாங்க யோகம் கற்றேன் . துரிய தியானத்தில் மேல்நிலை வாசியோகம் கற்று கொடுத்தார்கள் . பின்பு அவர்களின் நூலில் கட்டளை கொடுத்தார்கள் காகபுசுண்டர் உங்களுடன் பேசுவதை சொல்கிறார்
.
பாருமே மாலுடனே பிரமனோடு
பகர்தெயிவம் யாவையுமே திறந்து காட்டும்
வாரும்மே அவ்வாசல் வழி நீர்தானே
வந்தாக்கால பேசிடுவோம் வாரும் மென்போம
நீருமே அவ்வாசல் வராவிட்டாலே
நீர் ரென்னை தேடாதீர் சும்மா நீரே .
காக புசுண்டர் பெருநூல் காவியம் 1000 பாடல்
வாசி யோகத்தில் ஆறு தளங்கள் வழி மேலே ஏறி சுழிமுனை திறக்கவேண்டும் . அங்கு துரிய தியானநிலை அடையவேண்டும் . அப்பொழுது காகபுசுன்டரும் பிற சித்தர்களும் உங்களுடன் பேசுவார்கள் . . வேறு வழியில் பேசமாட்டார்கள் . முயற்சிப்பது வீண்
வீட்டில் வாசியோகம் பாடம் 10
பிராணாயாமம = பிராண + அயனம் . பிராணன் என்ற உயிர் சக்தியின் . பயனம .
பிராணாயாமம = பிராண +நியமம் . சுவாசம் செய்யும் நெறி . . நெறிபடுத்தப்பட்ட சுவாசம் தான் பிராணாயாமம . இது பல வித யோகா முறைகளில் பலவிதமாக செய்யப்படுகிறது.
குறிப்பாக இந்தியாவில் ஹடயோக முறை பலரால் கடைபிடிக்கப்படுகிறது . ஹடயோக பிரானயாமங்கள் பத்துவகை படும் . அவைகள் , சூரிய அனுலோம (பீடம்), சந்திர அணு லோம , உஜ்ஜயி, சீதகாரி ,சீததாலி, பசஸ்திரிக்கா , கபாலபதி , பிரமாரி, மூர்ச்ச, பிளவினி ,
ஹட யோகத்தில் தவுத்தி நெட்டி ,பஸ்தி ஆகிய கிரியைகள் பயன் படுத்த படுகின்றன . இவ்விதம் செய்யப்படும் ஹட யோகத்தால் ஞானம் பெற முடியாது . மேலும் பல் உடல் துன்பங்கள் ஏற்படும். எனவே இந்த ஹடயோக முறைகளை தள்ள வேண்டும் என்று அகத்தியர் வாத சௌமியம்
பாடல் 927 இல் சொல்லி உள்ளார் .
பாரப்பா தன்மயத்தைஅறியாமல் தான்
பக்க்தியுடன் அடயோகம் செய்வான் பாவி
வீரப்ப மூச்சடக்கி செவி வாய மூடி
வேகமுடன் பூரிக்கில் மேனிதன்னில்
சாரப்ப மூலமதில் சொருகிக்கொண்டு
தலைவலிதது காதடைத்து முகமும் கோணி
நேரப்பா கண் தெறித்து மதிகலங்கும்
நேர்மை கேட்ட ஹட யோகம் தள்ளு தள்ளே
பாடல் 927
அன்டா இதனாலே ஒன்றும் இல்லை
ஆதி என்ற மௌனாதி யோகம் பாரே
பாடல் 928
சாதித்து வரும்போது மைந்தா மைந்தா
தருகின்ற பீடை எல்லாம் தானேபோகும்
பேதித்த தேகமது பிலமாய் நிற்கும்
பிலமான வாசி சிவயோகம் தங்கும் .
பாடல் 822
பொருள்
ஹட யோகத்தின் தன்மையை அறியாமல் அப்பாவிகள பக்க்தியுடன் . ஹட யோகம செய்கிறார்கள் . அதன் தன்மை சொல்கிறேன் . வேகமாக மூச்சை உள்ளே இழுத்து செய்யும் ஹடயோக பிராணாயாமத்தால் ( !6; 64;32 , மற்றும் மேலே சொன்ன பிராணயாம முறைகள் ) தலைவலி , காதடைப்பு முகம் கோணி கண் பிதுங்கி மனம் கலங்கும் . (இவை அனைத்தும இரத்த அழுத்த நோய் குறி .. . இவ்விதம் இரத்த அழுத்த நோய் அடைந்தவரை நான் பார்த்து உள்ளேன் .) எனவே நேர்மை இல்லாத ஹடயோக முறை வேண்டாம் என தாள்ளிவிடு இதனால் ஒருபயனும் இல்லை . எனவே மௌனயோகத்தின் அடிப்படையான வாசி யோகம் செய் . வாசி யோகம் செய்து வரும்போது நம்மை பிடித்த வறுமை, துயரம் ,தோல்வி ,பயம் , துக்கம் , துன்பம் ஆகிய பீடைகள் தானே விலகிப்போகும். நோயுற்ற உடல் ஆரோக்கியமாக மாறி பலம் பெரும் . இந்த வாசி யோகா பலத்தால் சிவயோகம் சித்தியாகும் .
ஹட யோகம் பற்றி ராம கிருஷ்ணkrishna பரமஹம்சர் கருத்தை பார்ப்போம். ஒரு ஹடயோகி ராம கிருஷ்ணரிடம் “நான் கங்கை நதி நீர்மீது நடந்து நதியை கடந்தேன் “ என்றார்
ராம கிருஷ்ணkrishnaர் “ நான்கணா(25 பைசா ) சம்பாதித்தாய் “ என்றார் . நான்கணா கொடுத்தால் படகோட்டி கங்கையை கடந்தது விட்டு விடுவார் . ஹடயோக முறைகள் வித்தை காட்ட பயன் படும் ஞானம் அடைய பயன்படாது என்றார் .
வாசி யோகா பிராணாயாமம்
வெளியே உள்ளவாயுக்கள் காற்று. சுவாசிக்கபடும் கற்று பிராணன் . நெறி படுத்திய சுவாசம் பிராணாயாமம காலக்கணக்கோடு நெறிபடுத்திய சுவாசம் வாசி . முறைப்படி ஆதார தலங்களில் மூச்சை நிறுததி வாசி உருவாக்குவது வாசியோக பிராணாயாமம். .
வாசி யோகா பிராணாயாமம ஐந்து நிலை கொண்டது அவைகள்
1. பூரகம் = மூச்சு காற்றை உள்ளே இழுப்பது .
2.கும்பகம் = மூச்சு காற்றை உள்ளே நிறுத்தல்
3.ரேசகம் = மூச்சு காற்றை வெளிவிட்டால்
4. உட்பவிவித்தல் அல்லது கேவல கும்பகம்
5.ஆதார தலங்களில் நிறுத்தி வாசி உருவாக்கல் .
இவற்றை விரிவாக பார்ப்போம் . திருமூலரின் கொள்கைகள் பார்ப்போம்
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய் ஞானம் சேரவும் மாட்டார் .
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
திரு மந்திரம் பாடல் 724
புறப்பட்டு புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட உள்ள்ளே நின்மல மாக்கில்
உறுப்பு சிவக்கும் உரோமம் கருக்கும்
புறப்பட்டு போகாண புரிசடயோனே
திருமந்திரம் பாடல் 575
பொருள்
உடல் அழிந்தால் உயிர்பிரிந்து விடும் உயிரையும் உடலையும் இணைத்து வைக்கும் சக்தி யானது புரிசடையோன் என்ற சிவன் என்ற உயிர் உடல் இணைப்பு சக்தி . உயிர் என்பது ஒருவகை சக்தி உடல் சிதைவு அடைந்தால் . உயிர்சக்தி உடலை விட்டு பிரியும் . Dr. J. cRIAGCriag venter அவரது குழுவினருடன் ஒரு பாக்டிரியாவின் செயர்கை உடலை Dna matrum Rna moolam செய்து அதி உயிர் உள்ள பாக்டிரியாவை இணைத்தார் . உயிர் உள்ள பாக்க்டிரியவின் உயிர் செயற்கை உடலுக்கு வந்து விட்டது ஆனால் உயர் உள்ள பாக்டிரியா இறந்தது . எனவே உயிர் சக்தி உடலில் இருந்து பிரிந்து வேறு உடலுக்கு சென்றது . . எனவே உடல் சிதைவு ஏற்பட்டால் உயிர் பிரியும் .
உடம்பை வளர்த்தல் என்பது உடலை கொழு கொழுவென வார்ப்பது இல்லை
40 வயதை தாண்டினால் உடல் செல்கள், உற்பத்தி ஆவதைவிட சிதையும் செல்கள் அதிகரிக்கும் . இது வளர் சீதை மற்றம் வயது ஆக ஆக சிதைவு அதிகரித்து உடலஅழியும் .. செல்கள் சிதயாமல் மற்றும் செல் உற்பாத்தி அதிகமானால் உடல் இளமையாகும் . மரணம் ஏற்படாது . இதுவே உடலை வளர்த்தல்.
இவ்விதம் உடலை வளர்க்கும் உபாயம் என்ற தொழில் நுட்பம் அறிந்தேன் . அதனால் உடம்பை வளரத்து எனது உயிர் சக்தியும் வளர்த்து இறவா நிலை பெற்றேன்
உடம்பை வளர்க்கும் உபாயம் எது .?
. . .
சுவாச காற்று அதன் விருப்பம் போல் இயங்கி உடலை வளர் சீதை மாற்றத்திற்கு உட்படுத்தி சிதைவை அதிகரிக்கிறது . அதனால் உடல் அழிகிறது... இதை தடுக்க இந்த சுவாச காற்றை நெறிப்படுத்தி உடலுள் இருக்கும் மாசுகளை அகற்றி தூய்மை படுத்த வேண்டும் . அவவிதம் செய்தால் உடல் உறுப்புகள் சிவந்து இளமை ஆகும் . நரைத்த முடியும் கருக்கும் . உயிர் உடலைவிட்டு நீங்காது .
பிராணாயாமத்தில் அடிப்படை மந்திரம் ஓம் . இதை வாசி யோகத்தில் எப்படி உச்சரிப்பது என்பதை சொல்கிறேன்
ஓம் = அ+உ+ம
இடது நாசி சுவாசம் 16 கலை ஆற்றல்.=ம ( நேர்மறை )
வலது நாசி சுவாசம் 12 கலை ஆற்றல் = அ ( எதிர்மறை)
வாசி உருவாக்கு தாரைகலை அல்லது அக்கிணிகலை 4 கலை ஆற்றல் =உ (எதிர் மறை)
அ+உ =ம அதாவது சூரியகலை + தாரை கலை = சந்திரகலை . . இது உயிர்சக்தி சமம் நிலை . இதுதான் .
எனவே ஓம் உச்சரிக்க காலநிர்ணயம்
அ = 12/ 2 =6 நொடி
உ =4 /2=2 நொடி
ம 16/2= 8 நொடி
உங்கள் இடது கையை முதுகு தண்டு அடியில் வையுங்கள் அ........6 நொடி .. தொடர்ந்து சொல்லிப்பாருங்க உங்கள் கைகளில் முதுகுதண்டு அடியில் அதிர்வு தெரியும் . உ என்பது 2 நொடி சொல்லுங்கள் தொண்டை யில் உணர்வீர்கள் . ம ...... 8 நொடி சொல்லுங்கள் தலையுள் அதிர்வை உணர்வீர்கள் .
இப்படி அ.......உ.ம ........= ஓம் என்று உச்சரித்து பாருங்கள் இந்த அதிர்வு அலை மூலாதார தளத்தில் இருந்து சுழிமுனை தளம் வரை பரவி ஆறு சக்கரங்களையும் ஊக்கபடுத்தி சக்தி சமநிலை உருவாக்கும் . உயிர் சக்தி பெருகும் .
இதுவே வாசி யோகத்திற்கு அடிப்படை மந்திரம் . மூலாதாரத்தின் பீஜ மந்திரம் . இதை சொல்லி பழக வேண்டுகிறேன் .
கவலை பதட்டம் , மன அழுத்தம் , கோபம் ஆகிய நிலையில் மற்றும் செயல் வெற்றிபெற செயல் செய்வதற்கு முன் 27 முறை சொல்லுங்கள் .. இதன் மகிமை உணர்வீர்கள் .
வீட்டில் வாசி யோகம் பாடம் 10சந்தேகம் விளக்கம் .
அ+உ =ம அதாவது சூரியகலை + தாரை கலை = சந்திரகலை . . இது உயிர்சக்தி சமம் நிலை விளக்கவும் .
நாம் நலமுடன் இயங்க பிரபஞ்சத்தில் இருந்து சக்தியை மூச்சு காற்று வழியாக பெறுகிறோம் . மற்றும் நம் உடலிலும் சக்தியை உற்பத்தி செய்கிறோம் . இந்த சக்தி தேவை மொத்தம் . 96 கலை அலகு... கலை என்பதது சித்தர்கள் சக்தியை அளவிட பயன் படும் அளகு .
பிரபஞ்சத்தில் இருந்து பெறுவது 32 கலை Unitஅளவு சக்தி . இந்தசக்தியை பயன் படுத்தி உடல் 64 கலைகள் சக்தியை உற்பத்தி செய்கிறது .. அதாவது ஒரு பிரபஞ்சu கலை இரண்டு உடல்
கலை உருவாக்கும் .
நமது இடது நாசி திறன் அல்லது சந்திர கலை அல்லது இடகலை.16 கலை சக்தி . வளது நாசி திறன் அல்லது பிங்ககலை 12. கலை சக்தி ஆக மொத்தம் 28 கலைகள் . பிரபஞ்ச சக்தியை பெற 4 கலை குறைபாடு உள்ளது மேலும் இதனால் உடலில் உற்பத்தி செய்யும் சக்தி 8கலை குறையும் ஆக மொத்தம் 12கலை சக்தி குறைபாடு எல்லோருக்கும் ஏற்படுகிறது
இந்த சக்தி குறைபாடு செல்களின் இயக்கத்தை பாதித்து கழிவுகளை அகற்ற முடிவது இல்லை . புதிய செல்களை வேனடிய அளவு.. உற்பத்தி செய்ய முடிவது இல்லை
இதனால் உடல் நலிவடைந்து மரணம் ஏற்படுகிறது .
இதை தவிர்க்கும் தொழில் நுட்பம் வாசியோகம்
. . சநரகலை என்ற இடகலையும்யும் சூரியகலை என்ற பிங்கலைம் சமநிலை இல்லை . இரண்டின் வித்தியாசம் 4 கலைகள். இதனால் நோய் மூப்பு சாக்காடு என் ஏற்படுகிறது . வாசி யோகம் மூலம் தாரை கலை அல்லது தாராகலை உருவாகினால் அது 4 கலை கொண்டது ஆகும் . அதன் தன்மை சூரியனை போன்றது. எனவே சூரியகலை ! 2 உடன் தார கலை நான்கு சேர்ந்தால் 16கலை ஆகும் . இது சந்திரகலை16க்கு சமம் ஆகும் . இது தான்
சூரியகலை(1 2 ) + தார கலை(4) = சந்திரகலை16
சூரியகலை= அ , தார கலை= உ , சந்திரகலை=ம
அ=உ =ம
12+4=16
இது சக்தி சமநிலை . இதனால் பிரபஞ்ச சக்தி 32 களையும் முழுமையாக பயன் படுத்தி உடல் 64 கலை சக்தி உற்பத்தி செய்யும் . உடல் அழியாது .
இதுவே வாசியோகம் உடலையும் உயிரையும் வளர்க்கும் விதம் . இக்கருத்தை திமூலர் திரு மந்திரம் பாடல் 855மற்றும்856 ஆகியவற்றில் சொல்லி உள்ளார் .
எட்டெட் டனலிண் கலையாகும் ஈராறுட்
சுட்டப் படுங்கதி ரோனுக்கு சூல்கலை
கட்டப்பட்டுமீ ரெட் டா மதிகலை
ஓட்டப்படா இவை ஒன்றோடொன் றாகவே
பாடல் 855
எட்டெட்டும் ஈறாறும ஈரெட்டும் தீக்கதிர்
சுட்டிட்ட சோமனில் தோன்றும் கலை என்ப
கட்டப்படுந தார கைகலை கதிர்நாலுள
கட்டிட்ட தொன்னுரற்றோ டர்றுங் கலாதியே
பாடல் 856
Sir, I read 10th lesson and tried tried chanting A + U + M, was able to feel vibration on head and throat, but was not able to feel on tip of spine.
உங்கள் பிறங்கை இடுப்பு முதுகு தண்டில் வையுங்கள் . நுனி நாவை நீட்டி மேல் அன்னத்தை தொடாமல் சிறிது வளைத்து கொள்ளுங்கள் .
வாயை சிறிது திறந்து அ.......... என்று ஓசை தொடர்ந்து எழுப்புங்கள் . உங்கள் அ ஓசையென் அதிர்வு அலை உங்கள் பிறங் கையில் உணர்வீற்கை . .
இதை பயிற்சி செய்து பார்க்கவும் .
வீட்டில் வாசியோகம் பாடம் 11
வாசி யோகத்தால் இறைவனை காண முடியுமா ? வாசி எங்கே உருவாகிறது ? எப்படி உருவாகிறது ? எப்படி இருக்கிறது ?எவ்விதம் பயணிக்கிறது ? அதனால் பயன் என்ன ?
சென்ற பாடத்தில் வாசியோக பிராணாயாமத்தில் ஐந்து நிலகள் உள்ளது . வாசியோகத்தின் பிரதான மந்திரம் ஓம் . அதை உச்சரிக்கும் முறை பார்த்தோம் . இப்பாடத்தில் மேலே சொன்ன கேள்விகளுக்கு பதில் பார்ப்போம்.
காணவே ஓங்காரம் பிரதானம் தான்
கருவான ஆதார மூல பீடம்
தோணவே மூலம்மென்ற ஆதாரத்தில்
துலங்கி நின்ற ஆவியட வாசியாச்சு
பேணவே ஆவிஎன்ற வாசிஎறி
பெருகி நின்ற ஆதாரம் கடந்தபபாலே
பூணவே ரவி மதியில் சுடரில் சென்று
புத்தியுடன் பூரணமாய் தீபம் பாரே
அகத்தியர் அந்தரங்க தீட்சை விதி பாடல் 32
கூறவே மூலத்தில் வாசி கொண்டு
கோழி முட்டை போலிருக்கும் முக்கோணத்தில்
மாறவே இடை பின்னாய் இரண்டும் ஓடும்
மற்றொன்று சுழிமுனைதான் மகிழ்ந்து கேளே
அகத்தியர் அந்தரங்க தீட்சை விதி பாடல் 353
வாசியோ கத்தின் பிரதான மந்திரம் ஓம் . இந்தமந்திரம் மூலாதாரத்தின் பீஜ மந்திரம் . இந்த ஓம என்ற மந்திரத்தை மூலாதாரத்தில் உச்சரித்து வாசி உருவாக்க வேண்டும் . மூலாதாரம் என்ற இடம் மலவாய்க்கும் குறிக்கும் நடுவே முதுகு தண்டின் அடியில் உள்ள இடம் . இது ஆறு ஆதாரதளங்களில் அடியில் இருப்பது எனவே அடி மூலம் என்ற பெயர் உண்டு . ஆதார தலம் பற்றி விரிவாக வரும் பதிவில் பார்ப்போம் .
. எனவே வாசி மூலாதாரத்தில் உருவாகிறது . அது ஆவியாக இருக்கிறது. ஆவி என்பது காற்றும் வெப்பமும் சேர்ந்தது அதனுடன் இணைந்தநுண் துகள்களாக நாத சக்தி அல்லது விந்து சக்தி கலந்து உள்ளது .
. ஆரம்பத்தில் இது குண்டலியாக உள்ளது . சரியான கால நிர்ணயத்துடன் நெறிப்படுத்தி பிரானாயாமம் செய்து வாசியை உருவாக்குவதால் குண்டலி வாசியாக மாறும் ..
எனவே வாசி உருவாக்குவதால் குண்டலி வாசியாக மாறும் . . இந்த வாசி மூலாதாரத்தில் தார கலை என்ற சுடர் கலை உருவாக்கும் . மூலாதாரத்தில் இயற்கை யாக உள்ளது இடகலை அல்லது சந்திர கலை மற்றும் பிங்கலை என்ற சூரியகலையுடன் இந்த தாரைகளை என்ற சுடர் கலை சேர்ந்து சக்தி சமநிலை உருவாக்கும் . சக்தி சமநிலை பற்றி செனற பாடத்திலும் அதன் விளக்கத்திலும் பார்த்தோம் . சக்தி சமநிலையால் உடல் அழியா நிலை பெறும் .
மூலாதாரத்தில் உருவான இந்த வாசி , சுழிமுனை என்ற சுடர்கலை நாடி உருவாக்கும் . அதன் மூலம் சூரியகலை சந்திரகலை யுடன் சேர்ந்து மூலாதாரத்தில் இருந்து சுவாதிஷ்டானம் , மணிபூரகம் , அனாகதம , விசுகக்தி ஆக்ஞா .. ஆகிய தலங்களுக்கு வாசி யோகா முறைகளால் ஏறும் .. சூரியகலையும் சந்த்ரகலையும் பிணைந்திருக்கும் . இது பாம்புகள் இணை சேர்வது போல் பிணைந்து இருக்கும் . எனவே சூரிகலையும் சந்திர கலையும் இணை சேர்ந்த பாம்பு போல் உருவக படுத்தி படம் வரை வார்கள் . இரண்டின் நடுவில் சுழிமுனை நாடியில் வாசியாக மரியா குண்டலி அல்லது வாசி மேலே ஏறும் .
இம்மூன்று கலையும் அதாவது சூரிய கலை (நேர்மறை ) 12 + தாரைகலை என்ற சுடர் கலை 4(நேர்மறை சக்தி) .இரண்டும் சேர்ந்து 16 எதிர் மறை சக்தி உருவாக்கும் . சந்திரகலை 16 நேர்மறை சக்தி கொண்டது . 16. நேர்மறை சக்தியும் 16 எதிர்மறை சக்தியும் சேர்ந்து அதாவது சூரியன் சுடர் என்ற தாரை சந்திரன் ஆகியவை சேர்ந்து 32 கலை கொண்ட பூரணம் என்ற என்ற ஒளியாக தோன்றும் .
அதாவது பிரபஞ்ச இறை சக்தி வாசியோகத்தின் படி உடலுள் ஒளியாக தோன்றும் . இந்த பூரணம் என்ற இறைவனை வாசியோகம் செய்து பாருங்கள் ..
வாசிப பிரானாயாமத்தில் பூரகம் எப்படி செய்வது ?
பூரகம் என்பது மூசுக் காற்றை உள்ளே இழுப்பது . மூச்சை வேகமாக இழுக்க கூடாது எண்று சென்ற பதிவில் பார்த்தோம் .அதன் தீமைகளையும் பார்த்தோம் .
எனவே மூச்சுக்காற்றை மெதுவாக இழுக்கவேண்டும் . ஏன் ? விடை காண சுவாச உறுப்புகளையும் சுவாச நடப்பையும் பாப்போம் .
சுவாசத்தில் முக்கிய பங்கு வகிப்பது . நுரைஈரல் . இது வளது பக்கம் மூன்று அறைகளும இடதுபக்கம் இரண்டு அறைகளும் கொண்டது . சராசாரி ஆண்கள் நுரையீரல் 4முதல் 4.5 லிட்டர கொள் அளவு கொண்டது பெண்களுக்கு 3.5 முதல் 4 லிட்டர் கொள்ளவு கொண்டது .. இதில் 1,5 லிட்டர் காற்று தங்கி இருக்கும் அதிகபடச்மாக 2 முதல் 3. லிட்டர் காற்று சுவசிக்கப்படும் ..
ஆனால் சாதாரண மனிதன் 0.5 லிட்டர் முதல் 1 லிட்டர் காற்று தான் சுவாசிக்கிறான் .. இதனால் 60 ௦ முதல் 70 ஆண்டு வாழ்ககிறான்
பிராணாயாம பயிற்சி மூலம் சுவாச அளவை 2 முதல் 3 லிட்டராக கூட்டினால் சக்தி அளவும் அதனால் ஆயுள் கூடும் . 100 ஆண்டு வாழ்வது திண்ணம் .
.
வேகமாக காற்றை இழுத்தால் அடியில் இருக்கும் அறைகளுக்கு கற்று செல்லாமல் உராய்வு அதிகரித்து கற்றை உள்ளே தங்கவிடாமல் உடனே காற்று வெளியேறும் . இதனால் அடியில் தங்கிய காற்று வெளியேறாது . கழிவுகளும் முழுமை யாக வெளியேறாது நோய்கள் உருவாகும் . ஆயுள் குறையும் .
இந்த அளவை கூட்ட நுரையீரல் முழுவதும் காற்றை நிறப்பவேண்டும் . அதற்கு மெதுவாக சுவாசித்து நுரை ஈரலின் ஐந்து அறைகளையும் நிறப்ப வேண்டும் . இதற்கு போதியநேரம் மெதுவாக இழுத்து காற்றை நிறப்ப வேண்டும். எவ்வளவு நேரம் உள்ளே இழுக்க வேண்டும் .16 நொடியா 32 நொடியா? என்ற சந்தேகம் உள்ளது .
மூச்சுககாற்று இழுக்கும் அளவை கூட்ட நுரை ஈரலின் கொள்ளவை கூட்ட முடியுமா ?
முடியும் என்கிறது அறிவியல் . நிமிர்ந்து உட்காரும் போது. நுரையீரல் கொள்ளவு அதிக மாக உள்ளது . எனவே பிராணாயாமம செய்யும் போது நிமிர்ந்து உட்காருகிறோம் .. மேலும் பயிற்சிகளால் நுரையீரல் கொள்ளவு
அதிகரித்து 6முதல் 7 லிடர்வரை அதிகரிக்கும் . .
ஆகவே .பிராணயாமா ஆரம்பத்தில் குறைந்தநேரம் மூச்சு இழுத்தவர்கள் பயிற்சியால் அதிக நேரம் மூச்சு இழுக்க முடிகிறது. மூச்சு அளவு அதிகரிக்கிறது . ஆரோக்கியம் வளர்கிறது . ஆயுள் கூடுகிறது
.. உள்ளே நிறுத்துதல் கும்பகம்
மேலும் உள்ளே இழுத்த காற்று அசுத்தத்தை மாற்றிக்கொள்ள Gas எவ்வளவு நேரம் பிடிக்கும் . சாதாரணமாக சுவாசிக்கும் பொது யாரும் காற்றை உள்ளே நிறுத்துவது இல்லை . பிராணாயாமத்தில் தான் உள்ளே நிறுத்துகிறோம் . எனவே கழிவுகள் அதிகமாக வெளிஏறும் . உடல் சுததிபெறும் ஆயுள் கூடும . இதற்கு . 64 நொடி தேவை . இதில் நண்பர்களுக்கு சந்தேகம் இல்லை
. வெளிவிடல் ரேசகம்
வெளிவிடும் மூச்சுக்கற்றின் நேரம் உள்ளே இழுக்கும் நேரத்தை விட அதிகமா குறைவா .? அல்லது வேகமாக வெளிவிட வேண்டுமா அல்லது மெதுவாக வெளிவிடவேண்டும .
உள்ளே சென்ற மூச்சு காற்று கழிவுகளை எடுத்து அசுத்தமாகிவிடும் .. எனவே அதை விரை வாக வெளியேற்றவேண்டும் . அதாவது உள்ளே இழுத்த நேரத்தைவிட குறைந்தநேரத்தில் வெளி விடவேண்டும் . அதிக பச்சம் சமமாக இருக்க முடியும் . அதற்கும் அதிகம் இருந்தால் கழிவு வெளியேறாமல் நின்றுவிடும் உடல் கெடும். வெளியேற்றும் காற்றின் நேரம் 32 நொடிய 16 நொடியா என்றால் 16 நொடி என்பது அறிவு பூர்வமானது .
எனவே உள்ளே இழுக்கும் காற்றின் நேரம் 32 நொடி என்று முடிவு செய்யலாம் .
மூச்சு இழு க்கும் நேரம் 32 நொடி நிறுத்தும் நேரம் 64 நொடி வெளிவிடும் நேரம் 16 நொடி ஆகும் . . இது பற்றி சித்தர்கள் சொல்வதை வரும் பதிவில் பார்ப்போம் .
உட்பவிவித்தல் அல்லது கேவல கும்பகம்
நுரை ஈரலில் இருந்து தங்கியருக்கும் காற்றை முழுமையாக வெளியேற்றியபின் நுரையீரல் காற்றை உள்ளே இழுக்காமல் இருக்கும் நிலை . இதற்கு நேரம் தேவையா. ஆம் ஏன் என்றால் . வெளியேற்றபடாமல் உள்ளே தங்கிய காற்று கழிவுகளை பெற்றுகொள்ளும் . . இதற்கு அதிக நேரம் தேவை இல்லை . இதை குறித்து நேரத்தை சொல்லவில்லை.
மூசசுக் காற்றுக்கு காலக்கணக்கை நிர்ணயித்த சிதர்களின் கணக்கு சரியா என்று ஆய்வுகள் நடத்தி அதை சொல்ல மருத்துவ விஞ்ஞானிகள் முன்வரவேண்டும் .
ஆயிரக்கணக்கான ஆண்டு அனுபவத்தில் சரியாக உள்ளதாக நிருபிக்க பட்டு உள்ளது ..
ஆதார தளங்களில் வாசி உருவாக்கி வாசியோகம் செய்தல்
இந்த காலக்கனகுதான் வாசியா ? திரு மூலரும் அகத்தியரும் பிற சித்தரும் வாசிகாலகனக்கு பற்றி சொன்னது என்ன? என்பதை வரும் பதிவில் பாப்போம் .. .
வீட்டில் வாசியோகம் பாடம் 12
.
சென்ற பதிவில் வாசி எப்படி உருவாகிறது. இறைவனை ஒளிவடிவாய் எப்படி பார்ப்பது என்பதை பார்த்தோம் . இந்த பதிவில் வாசியை எப்படி உருவாக்குவது . இதுவாசியா வழி? வாசி குருயார்? .என்பது பற்றி சித்தர்கள் சொன்னதை பார்ப்போம். குறிப்பாக அகத்தியர் மற்றும் திருமூலரின் கால கணக்கை பார்ப்போம்
வாறான பிராணாயம் வாசிகேளு
வகையான பூரகமே முப்பத்திரண்டு
ஆரன கும்பகமே அறுபத்திநாலு
அட்வான ரேசகமே பதினாறப்பா
கூரான மாத்திரையின் வகைகல்ளெல்லாம்
குறிப்பாக அறிந்து கொள்ளு மாத்திரைசொல்வேன்
தாரான தலைசுத்தி நொடிப்பதப்பா
சமுசயங்கள் ஒன்றுமில்லை மாத்திரையும் மொன்றே
அகத்தியர் அந்தரங்க தீச்சை விதி பாடல் 346
சரியான பிராணாயாமவாசி என்றால் எது என்று சொல்கிறேன் கேள் . மெதுவாக மூச்சி 32 மாத்திரை உள்ளே இழுப்பது (வகையான )பூரகம் .
மூச்சுகாற்று உள்ளே நிறுத்தி அதில் உள்ள உயிர் சக்தியை கிரகிக்க தேவையான நேரம் (ஆறுதல் ) 64 மாத்திரை கும்பகம் எனப்படும் . . வெளியேற்றபடும் காற்றின் காலம் 16 மாத்திரை ரேசகம் , ஒரு மாத்திரை என்பது உச்சி தலை யை கையால் சுற்றி நேற்றிமுன் பெருவிரல் மற்றும் நடுவிரலால் நொடிக்கும் நேரம் . ஏறக்குறைய ஒரு செகண்ட்..
பிராணாயாமம செய்யும் பொது மனதிற்குள் இன்று இரண்டு என எண்ணுவது நடை முறைக்கு சரியாக இருக்கும் .
எனவே அற வாசியையும் அதை உருவாக்குவதையும் தெளிவாக சொல்லி உள்ளார் . காலகணக்கு 32 :64 :16 வாசியை உருவாக்கும்
பல நண்பர்கள் திரு மூலரின் பாடல் 567 லை சொல்லி பிராணாயாம கால கணக்கு !6 :64:32 எண்று பொருள சொல்லி உள்ளார்கள் . சிலர் இப்பாடலை விளக்க சொல்லி உள்ளார்கள் .
சித்தர் பாடல்கள் பல் மறைப்பாக, முன்பின்னாக சொல்லப்பட்டு இருக்கும் . ஒரு சொல்லுக்கு பலபொருள் இருக்கும் . அறிவுடையோர் நெறியாளர் அறிய இவ்விதம சொல்லபட்டு உள்ளது .
ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பகம் அறுபத்து நாலதில்
ஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே
திரு மந்திரம் பாடல் 568
மேலோட்டமாக வாமம் என்பதன் பொருள் பார்க்காமல் அதிரேசகம் என்பதை கவனிக்காமல் பலரும் தவறாக பொருள் சொல்கிறார்கள் . இவை இப்பாடலின் மறைப்பு மேலும் முன்பின்னாக சொல்லப்பட்டு உள்ளது .
“ ஆறுதல் கும்பகம் அறுபத்து நாலதில்” இந்தவரியில் மறைப்புயில்லை
“மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே”
இந்த வரியிலும் மறைப்பு இல்லை
“ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்”
வாமம் என்பதன் பெருள் எதிரிடை .
ஏறுதல் பூரகம் .
ஈரெட்டு என்பது எதிரிடை
“ஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம்” எபதை பிரிப்போம
ஊறுதல் முப்பத்து ரெண்டு ----
அதிரேசகம் .
பொருள் :
ஏறுதல் பூரகம்
ஈரெட்டு வாமத்தால்= 1 6 எதிரிடைஎன்பது = ஊறுதல் முப்பத் திரண்டு
ஏறுதல் பூரகம் ஊறுதல் முப்பத் திரண்டு
இதன் பொருள் . ஊர்வது போன்று மெதுவாக மூச்சு இழுப்பது 32 மாத்திரகொண்ட பூரகம்
அதிரேசகம் ஈரெட்டு = விரைவாக வெளிவிடும் மூச்சு 16 மாத்திரை கொண்ட ரேசகம் .
பாடலின் முழு பொருள்
ஊர்வது போன்று மெதுவாக உள்ளே இழுக்கும் மூச்சு காற்று 32 மாத்திரை கொண்ட பூரகம் . கழிவை அகற்ற(ஆறுதல் ) உள்ளே 64 மாத்திரை நிறுத்தப்படும் காற்று கும்பகம் விரைவாக வெளியேற்றப்படும் காற்று ரேசகம்( அதிரேசகம்) 16 நொடி கொண்டது .. வலது நாசி வழி காற்றை உள்ளே இழுத்து இடது நாசி வழி வெளிவிடுவது வஞ்சகம் . . இடது நாசி வழி காற்றை உள்ளே இழுத்து
..”” வலது நாசி வழி வெளி விடுவதும வஞ்சகம்..
செய்முறை
அன்பு நண்பர்களே மேலே சொன்ன 32:64:16 வாசி பிராணாயாமத்தை உடனே முயற்சி செய்து பார்க்காதீர்கள் .. இதுபற்றி சித்தர்கள் சொலவத்தை பார்ப்போம் ..
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
kaarraiகாற்றை பிடிக்கும் காணக்கறி வாரில்லை
காற்றை பிடிக்கும் கணக்கறி vaalvaalavaalarvaalarkvaalarkkvaalarkkuவாளர்க்கு
கூற்றை உதைக்கும் குறி அதுவாமே .
திருமூலர் திரு மந்திரம் . பாடல் paadal571.
வாசி பிரானாயாமப்படி காற்றை காலக்கனகுடன் பூராக ரேசக கும்பகம் இரண்டு நாசி துவாரம் வழி செய்பவர் இல்லை . அப்படி ஒருவர் செய்தால் அவர் மரணத்தை எட்டி உதைத்து தள்ளுபவர் . இதுதான் அவர்களை அறியும் வழி .
வாசியோக குரு யார் ?.
மூக்கில் கை வைக்காமல் வளது நாசியில் 32 வினாடி மூச்சை இழுத்து64 வினாடி உள்ளே நிறுத்தி இடது நாசியில் 16 வினாடி வெளியிடல் செய்பவரே யோகா குரு . அல்லது வாசி குரு . .
நீங்கள் செய்யவேண்டியதை அகத்தியர் சொல்கிறார் ,
வாசிஎன்ற இடகலையில் பூரனம்தான் ரெண்டு
வரிசையுள்ள சுளினையுள்ளே கும்பகம்தான் நாலு
தேசிஎன்ற பிங்கலையில் ரேசகம் தான் ஒன்று
அகத்தியர் வாத சௌமியம் பாடல் 1.063
முந்தய அத்தியாய செய்முறையில் நீங்கள் சிரமம் இல்லாமல் எவ்வளவு மூச்சை சிரமம் இல்லாமல் இழுத்து நிறுத்தி வெளிவிட முடியுமோ செய்து பார்க்க சொன்னேன் . பலரும் செய்து வருகிறீர்கள் . இனி அடுத்த படி .
நீங்கள் சிரமம் இல்லாமல் உள்ளே மூச்சை இழுக்கும் வரை ஒன்று , இரண்டு என்று மனதுள் எண்ணுங்கள் .. இதுவே உங்கள் பூராக நேரம் .. சிரமன் இல்லாமல் மூச்சை உள்ளே நிறுத்தும் நேரத்தை ஒன்று இரண்டு என்று மனதுள் எண்ணுங்கள் . இது உங்கள் கும்பக நேரம் ..இதன் பின் நீங்கள் மூச்சை வெளிவிடும் நேரத்தை ஓன்று இரண்டு என்று மனதுள் கணக்கிட்டு குறியுங்கள் . இது உங்கள் ரேசக நேரம் . இது உங்கள்இயற்கை பிராண இயக்க உச்சம்
அதன் பின் உங்கள் வாசி பிராணாயாம களத்தை வாடி வமைப்போம்
உங்கள் இயற்கை பிராண யாமம் 9: 15:3 என்றால் அதை மாற்றி
8 : 16 ;4 என்று நிர்ணயம் செய்து இதன் படி முதலில் இரண்டு நாசி வழி செய்து பழகுங்கள் . இதில் சிரமம் இல்லை என்றால் காலத்தை கூட்டுங்கள் ..
உங்கள் அனுபவம் சொல்லுங்கள்
வீட்டில் வாசியோகம் பாடம் 13 (Powered by Prof. Dr.Raja Krishna Moorthy)
சென்ற பாடத்தில் வாசி உருவாக்கல் பார்த்தோம் . இரண்டு நாசிவழி சுவாசித்து மூலாதாரத்தில் வாசி உருவாக்கல் பார்த்தோம் .. இனி வாசியை பயன்படுத்தி வாசி யோகம் செய்வதை கற்ப்போம் இதற்கு முதலில் கலைமாறல மற்றும் வஞ்சகம் செய்முறை பார்ப்போம்.இதற்கும் முதலில் நாடிசுத்தி செய்யவேண்டும் . நாடிசுத்தி
ஒரே நாசி வழி பூராக, ரேசக , கும்பகம் செய்தல் ..
வலது நாசிவழி அல்லது இடது நாசி வழி பூராக, ரேசக , கும்பகம் செய்தல்
வஞ்சகம் .
வலது நாசிவழி மூசசு கர்ற்றை இழுத்து உள்ளே நிறுத்தி இடது நாசி வழியாக காலக்கணக்குடன் விடுவது இது சூரியகலை வாசி பிராணாயாமம்.. அது போன்று இடது நாசி வழி மூசசு கர்ற்றை இழுத்து உள்ளே நிறுத்தி வலது நாசிவழி வெளிவிடல் . இது சந்திர கலை வாசி பிராணாயாமம்
கலைமாறல
வலது நாசிவழி அல்லது சூரியகலை வழி மூசசு கர்ற்றை இழுத்து உள்ளே நிறுத்தி இடது நாசி வழியாக விடுவது . அதை தொடர்ந்து இடது நாசிவழி அல்லது சந்திரகலை வழி மூசசு கர்ற்றை இழுத்து உள்ளே நிறுத்தி வலது நாசிவழி வெளிவிடல்.
இவவிதம் சூரியகலை வாசி பிராணாயாமத்தை தொடர்ந்து சத்திர கலைக்கு மாறுவது கலை மாறல் .
வாசி பிரணாயாமா செய்முறை சுருக்கம்
இதுவரை செய்து பார்த்த வாசி பிராணா யாமத்தை தொகுத்து வரிசைபடுத்துவோம் .
1 இயமம் என்ற செய்ய கூடாததை தவிர்ப்போம் .
2 நியமம் என்ற செய்ய வேண்டியதை செய்வோம்
உடல் சுத்தி செய்ய கரிசாலை , கத்தாழை , கடுக்கை கல்பம் செய்து வழலை வாங் குவோம் . மன ஒருமை பாட்டிற்கு திராடக , சூர்யயோகம் சந்திர யோகம் செய்வோம் .
3, காலை எழுந்தபின் நித்தியகடன் முடித்து சூரிய நமஸ்கார ஆசனமும் சூரிய யோகமும் செய்வோம் .
4. வாசி பிரானா யாமம்
4 .1 தடித்த பருத்தி துணி யை விரித்து அதன் மேல் அமர்ந்தது வாசி பிராணாயாமம் செய்ய , சுக ஆசனத்தில் அமர்வோம்
4.2 ஓம் மந்திரம் உச்சரிப்போம்
4..3 இரண்டு நாசிகள் வழி , இடது நாசிவழி மற்றும் வலது நாசி வழி நாடி சுத்தி செய்வோம் .
4.4 இரண்டு நாசி வழி 2 : 4 : 1 என்றவிகிதத்தில் பூராக கும்பகம். ரேசகம
( 4 ; 8 2, 8;16 ;4 12 :24 6.........32 ; 64 ; 16 நொடி ) செய்து வாசி யை பிராணாயாமம செய்து உருவாக்க வேண்டும் இதுவே வாசி பிராணாயாமம்
4..5 வாசி உருவாக்கி வஞ்சகம்செய்வோம்
4.6. வாசி பிரனாயாமத்தில் கலை மாறல் செய்வோம்
இவை செய்து முடித்தால் வாசியோகத்தை மூலாதாரத்தில் செய்து குண்டலி எழும்பும் நிலை அடைவது . இது வாசி யோகா அடிப்படை நிலை வாசியுருவாக்கள் . இது வாசி பிராணாயாமம். இனி வாசி யோகா பிராணாயாமம பற்றி படிப்போம்.
வாசி யோக பிராணா யாமம்
பாரப்பா பிராணாயா மஞ்சுங் கேழு
பதிவான ரேசக பூராக கும்பகம்
நேரப்ப சவுபீசம் நிற்பீசம் தான்
நிசமாக பிராணாயா மஞ்சும பாரு
பேரப்ப பிராணாயா மஞ்சும பார்த்தால்
பெருகிநின்ற சிவயோகம் உறுதியாச்சு .
அகத்தியர் பூரனகாவியம் பாடல் 47
தங்கியதோர் சவபீசாம் மந்திரத்தில் லூடல்
விரைந்துமே நிற்பீசம் மந்த்திரத்தை விட்டு
வெளியிலே பூரித்தல் மெதுவிலேதான்
போகர் 1000 பாடல் 311
பிராணாயாம என்பது ஐந்து உறுப்பு கொண்டது . அவை பூராக , ரேசக, கும்பக , சவபீசம , நிற்பீசம மாகும் . இந்த ஐந்து பிராணாயாமத்தையும் செய்து முடிட்க்கவண்டும் அப்படி செய்து முடித்தாள் அது சிவயோகம் செய்ய உறுதி கொடுக்கும் ..சவபீசம் என்பது ஆறு ஆதார தளங்களிலும் மந்திர உச்சாடனம் செய்து பிராணயாமம் மூலாதாரத்தில் செய்தல் . நிற்பீசம் என்பது மந்திர உச்சாடனம் செய்வதுடன் ஆறு ஆதார நிலைகளிலும் வாசியை உருவாக்கி பிராணாயாமம செய்தல் . இவ்விதம் ஐந்து உறுப்பு பிராணாயாமம் செய்வது , வாசியோகம் . இது வாசி யோகம் மட்டும் இல்லை இதுவே சிவயோகத்திற்கு உறுதியான அடிப்படையாகும் .
சில குருமார்கள் சாதாரண பிராணயாமம் செய்ய சொல்கிறார்கள் அதன் பின் ஆதார தளங்களில் மந்திர உச்சாடனம் மட்டும் செய்ய சொல்கிறார்கள் . இது வாசி யோகம் ஆகாது .
வாசி உருவாக்கிய பின் வாசியோகம் செய்வதற்கு முன்னாள் உடல் உயிர் தத்துவங்கள் , ஆதாரதலங்கள் பற்றி அறியவேண்டும் . அவற்றை வரும் பதிவுகளில் விரிவாக பார்ப்போம்
வீட்டில் வாசி யோகம் பாடம் 1 4
இதுவரை வாசிபிராணாயாமத்தின் நான்கு பகுதிகளை கொண்டு மூலாதாரத்தில் வாசியுருவாக்குவதை பார்த்தோம் . ஐந்தாம் நிலையான அதாரதலங்களில் வாசயுறு வக்குவதை படிப்பதற்கு முன் சில அடிப்படைகளை அறிந்து கொள்வோம்.
வாசி சக்தி சமநிலை .
கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்
ஓடுவர் மீளுவர் பன்னிரண் டங்குலம்
நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல்
கூடிக் கொளிற்கோல அஞ்செழுத் தாமே
Thirumanthiram paadal 576 Enrgy balance
மனிதன் பிறக்கும் போது மூச்சு காற்று இரண்டு நாசி துவாரங்கள் வழி குடி புகுந்தது . அவை இடகலை மற்றும் பிங்கலை என்ற சுவாசமாகும் . இரண்டிலும் சராசரி12 விரற்கடை (அவரவர் கைவிரலுக்கு) தூரம் உள்ளகாற்று வரை உள்ளே இலுக்கும் அது போல் 12 விரற்கடை தூரம் வரை கற்றை வெளிவிடும் . இவிதம் உள்ளே சென்ற காற்றில் உள்ள உயிர் சக்தி பிரபஞ்ச சக்தி . 8 விரற்கடை அளவு காற்றின் சக்திமட்டுமே கிரகிக்கப்படும் மீதம் வீணாகும் அளவு நான்கு விரக்கடை உயிர் சக்தி .. இப்படி வீணாகும் நான்கு விரல்கடை சக்தியை வாசியோகம் செய்து கிரகிக்க வைத்தால் உடல் அழியாது . அழியா உடல் பெற்று இறைநிலை அடைவார் . இது சிததர்களின் சக்தி சமன் பாடு நீள அளவையில் விரற்கடை அளவில் ( single dimension= length ) சொல்லப்பட்டது. அங்குலம் = விரற்கடை .
இதை ஆற்றல் அளவான (energy unit ) கலை அளவில் திரு மூலர் சொல்லி உள்ளார் . . நமது உடல் அழியாமல் இருக்க 96 கலை சக்தி வேண்டும். 32 கலை உயிர் சக்தியை பிரபன்ச்சத்தில் இருந்து பெறும். 64 கலை சக்தியை( அக்கினிகலை ) உடலுற்பத்தி செய்யும் . அதாவது ஒரு பிரபன்ச்சகலை இரண்டு உடல் கலை சக்தி உற்பத்தி செய்யும். ஆகமொத்தம் 96கலை சக்தி கிடைக்கும். உடல் அழியாது.
ஆனால் பிறப்பில் இடகலை என்ற சந்திரகலை 1 6 கலை சக்தி கொண்டது . பிங்கலை என்ற சூரியகலை 12 கலை சக்தி மட்டும் கொண்டது. பிரபஞ்ச சக்தியான 3 2 கலையில் உடல் 2 8 கலை மட்டும் கிரகிக்கும் . . இந்தநான்கு கலை விததி யாசத்தால் பிரபஞ்ச சக்தியில் நான்கு கலை சக்தி கிரகிக்க முடியாமல் போகிறது . இதனால் உடல் 8 கலை சக்தி உருவாக்க முடிவதில்லை .. .சக்தி குறைபாட்டால் உடல் சிறிது சிறிதாக கெட்டு போகிறது . மரணம் நிகழ்கிறது .
இதை தடுக்க வாசி யோகம் செய்து 4 கலை சக்தி கொண்ட தாரைகலை உருவாக்கி (குண்டலி ) குறைவுடன் பிறந்த மனிதன் 3 2 பிரபஞ்ச கலைகிரகிக்கும் குறை இல்லாத மனிதனாக மாறுகிறான் .இதனால் அழிவற்ற உடல் பெறுகிறான் .
எட்டெட் டனலின் கலையாகும் ஈராறுட
கட்டப் படுங்கதி ரோனுக்குஞ் சூழ்கலை
காட்டப்படும் மீரெட்ட மதிகலை
ஓட்டப் படாயிவை ஒன்றோடோன் றாகவே
திரு மந்திரம் பாடல் 855
எட்டெட்டும் ஈராறும் ஈரெட்டும தீகதிர்
சுட்டிட்ட சோமனின் தோன்றும் கலை என்ப
காட்டப்படும் தார கைகதிர் நாளுல
கட்டிட்ட தொண்நூற் றோடாறும கலாதியே
திரு மந்திரம் பாடல் 856
வீட்டில் வாசி யோகம் பாடம் 15
ஆதார தலங்கள் எப்படி உருவாகின ? சுவாசம் எப்படி ஏறபடுகிறது ? ஆதரதலத்தில் நடைபெறும் சுவாசம் எத்தனை ? அதன் விரயம் எவ்வளவு என்று தெரிந்தால் வாசியோகம் செய்வது புரியும் .
மனிதர்கள் சுவாசம் , உதர விதானம் சுருங்கி விரிவதாலும் , மார்பு கூடு கிழே இறங்கி மேலே ஏறுவதாலும் , மார்பு மேலே உயர்ந்து கிழே தழ்வதலும் . சுவாசம் ஏற்படுகிறது.. இந்த இயக்கத்தின் போது நுரை ஈரலில் அழுத்தம் வெளிக் காற்றின் அழுத்தத்தை விட குறை வாகவும் அதிகறித்து இருப்ப்பதால் கற்று உள்ளேயும் வெளியேயும் சென்று வருகிறது . அது இஷ்டம் போல் . மூச்சு காற்று மனிதனை இயாக்குகிறது .. .. இந்த செயல்களை 28 காரணிகள் வழி Goyten medical physiology விவரிக்கிறது .
ஆனால் இந்த இயக்கங்கள் எப்படி உருவாகிறது என்பது குறித்து தெளிவான விளக்கம் இல்லை .
. வாசியோகி உடல் அசையாமல் தனது விருப்பம் போல் மூச்சு காற்றை இயாக்குகிறார்
“ சித்திரன் போலே இருந்து வாசி பாரு “ என்கிறார் காகபுசுண்டர் பெருநூல் காவியம் பாடல் 73இல்
இது எப்படி சாத்தியம் ? . இதை சித்தர்கள் தெளிவாக சொல்லி உள்ளார்கள்
ஆதாரங்கள்
. ஆணின் விந்துவும் பெண்ணின் கருமுட்டையும் இணைந்து எம்பிரியானிக் ஸ்டெம் செல்லை உருவாக்குகிறது . இதை காக புசுண்டர் சிசுவின் குஞ்ச்சு என்கிறார் . இதன்பின் தாயின் கருப்பையில் நஞ்சு உருவானது அதன் மூலம் சிசு குஞ்சு வளர்ந்து மூலாதாரம் சுவாதிஷ்டானம் மணிபூரகம் விசுக்க்தி ஆக்ஞா ஆகிய ஆறு ஆதாரதலமும் வீணா தண்டு என்ற முதுகு தாண்டும் உருவானது . ஆறு ஆதார தளங்களில் ஆறு சக்கரங்ககள் உருவானது .
இந்த ஆறு சக்கரங்களும் நஞ்சு மூலமும் பணிகுடநீர் மூலமும் பிற பன்ச்ச சக்தியையும் உடல் சக்தியையும் பெற்று அணைத்து உறுப்புகளையும் உருவாக்கியது . குழந்தை முழு வளர்ச்சி பெற்றது . தாயின் கருப்பையில்
வளர்ச்சி பெற்ற குழந்தை தையை தாயின் வாயுக்கள் இயக்கம் வேளே தள்ளியது. மேலும் குழந்தைக்கு கொடுத்த பிரபன்ச்ச சக்தியையும் உடல் சக்தியையும் நிறுத்தியது ... தாயின் கருவில் இருந்த குழந்தையின் நுரை ஈரல் காலியாக காற்று நிறப்பப்படாமல் இருந்தது . தலை வெளியே வந்தஉடன் பிரபஞ்ச சக்தி குழந்தையின் நுரையீரலில் அழுத்த வேறு பாடு காரணமாக உள்ளே புகுந்தது . இந்த பிரபன்ச்ச சக்தி ஆறு ஆதாரங்களால் கிரகிக்கப்பட்டு உடல் சக்தி உருவானது . . . இதன் பின் சக்கரங்கள் சுவாசத்தை இயக்க தொடங்கின . குழந்தை வெளிகாற்ரை சுவாசித்து உணவு உண்டு ஆதார சக்கரத்தின்இயக்கத்தால் தாயின் உதவியுடன் தானே வளர ஆரம்பித்தது .. பின்பு வளர்ந்து தானே செயல்படுகிறது. .
இதை அகத்தியர் அந்தரங்க தீஷை விதி பாடல் 20, 21 மற்றும் 2 8 இல் முன்பின்னாக சொல்லி உள்ளார் . தானென்ற சூச்சமட விந்து நாதம்
தனை அறிந்து நாதமுடன் விந்து சேர்ந்து
கோநென்ற குரு அருளால் அங்குதித்தும்
கொண்டெழுந்த மடபதியை என்ன சொல்வேன்
ஊண் என்ற மடபதிச்கு உறுதியான
உணமை யுளல அக்கினியும் வாய்வும் கூடி
தேனென்ற ஜீவாத்மா பரமாத்வாய்
சென்றிருந்து ஆதாரம் ஆனார் பாரே .
அகத்தியர் அந்தரங்க தீஷை விதி பாடல் 20,
ஆச்சப்பா ஆதி பராபரந்தான் மைந்தா
அனுகிரகத்தால் உதித்த கணபதி வல்லபை மைந்தா
அகத்தியர் அந்தரங்க தீஷை விதி பாடல் 29
கிருபையுள்ள கணபதி வல்லபை மைந்தா
ஆளப்பா பிரம்மாவும் சரஸ்வதியும் ஆனார்
அதன் பிறகு திருமாலும் லடசுமியும்மானார்
மேலப்பா ருத்திரனும் ருத்திரியும் ஆனார்
மேன்மையுடன் மயேஸ்வரனும் மயேச்வரியும் ஆனார் .
காரப்பா சதாசிவனும் மனோன்மணியும் ஆனார்
காரண மெல்லாம் முடிந்து சக்தி சிவமும் மாச்சே .
அகத்தியர் அந்தரங்க தீஷை விதி பாடல் 28
பாரப்பா ஆதாரம் ஆறாதாரம்
பதிவான ஆதாரம் பரத்துக்குள்ளே
நேரப்ப அக்கினிதான் ஜிவத்மாவை
நிறைந்து நின்றது அதுதான் பரமாத்வாவாய்
பேரப்ப பெருகி நின்ற சடத்துக்குள்ளே
பிலமாக நின்று திரு விளையாட்டாடி .
அகத்தியர் அந்தரங்க தீஷை விதி பாடல் 21
ஆகவே . ஆறு ஆதாரங்களும் அதில் உள்ள சக்கர இயக்கமும் மூச்சு காற்றை இயக்கு கின்றன . இச்சக்கரங் களில் வாயு என்னும் பிரபஞ்ச சக்தி பரமாத்மாவாக உள்ளது .(32கலை = 32 நொடி உள்ளே இழுக்கும் காற்று )
இந்த பிரபஞ்சசக்தியால் உடலில் வெப்பம் உருவாக்கபடுகிறது . இது அக்கினி (கும்பகம் 6 4 நொடி =அக்கினி கலை64 ) . இந்த அக்கினி ஜீவாத்மாவாக இயங்குகிறது . . எனவே உடல் இயக்கங்கள் அணைத்து மூச்சு இயக்கம் உள்பட ஆதாரதலமும் அதில் உள்ள சக்கரங்களும் இயக்கு கின்றன . இதுவே அனைத்து இயக்கத்திற்கும் காரணம் .
ஆதார தளங்களில் சுவாசம மற்றும் விரைய கணக்கு
.
மூலாதாரம் சுவாசம் .3 6 0 0 விரயம் 1200
சுவாதிஷ்டானம் சுவாசம் 3 0 0 0 விரயம் 1000
மணிபூரகம் சுவாசம் 3 0 0 0 விரயம் 1000
அனாகதம் சுவாசம் 3 0 0 0 விரயம் 1000
விசுக்ததி சுவாசம் 3 0 0 0 விரயம் 1000
ஆகஞா .................... சுவாசம் 3 0 0 0 விரயம் 1000
இவ்விதம் ஒருநாளில் 21600 சுவாசம் நடைபெறும் பயன் உளளது 14400 விரயம் 7200 .
இவ்விதம் விரயமாகும் சுவாசத்தில் உள்ள பிராணசக்தி அல்லது உயிர் சக்தியை விரயம் ஆக்காமல் இருக்க வாசி உருவாக்கி ஆதார தளங்களில் வாசி யோகம் செய்ய வேண்டும் . அப்போது அமிர்தம் சுரக்கும் . இந்த அமிர்தம் உடல் நோயை போக்கி இளமை தந்து வாழ்விக்கும்
உகந்துநின்ர சுவாசவெளி பாழ் போகாமல்
உத்தமனே தான் நிறுத்த வகையை கேளு
ஆதார தளங்கள் பற்றி விரிவாக வரும் பதிவில் பார்ப் போம்.
வீட்டில் வாசி யோகம் பாடம் 16
சென்றபதிவில் ஆதார தலங்கள் தோன்றியதை பார்த்தோம் இறைவன் யார் ? நான் யார் ? இறைவனுக்கும் மனிதனுக்கும் இருக்கும் தொடர்பு என்ன ஆகியவற்றை பார்ப்போம் . அதில் ஆதாரங்களின் பங்கும் பார்ப்போம்
ஒன்றவன் தானே இரண்டவன். இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குனர் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்த்தணன் ஏழும்பரச்
சென்றனன் தானிருந் தானுனர்ந் தெட்டே
திமூலர் திரு மந்திராம் பாடல் 1
இப்பிரபஞ்சம உருவாகும் முன் எது அல்லது யார் இருந்தாரோ அவர் தான் கடவுள். இந்த நிலையில் இறைவன் ஒருவனே இருந்தான் ..
அவன் அருளால் அவன் தன்னை தான் பிறப்பித்து ஓம் என்ற பெரு வெடிப்பாகமாறினான் . அதில் உயிர் சக்தி துகள் பொருள் சக்தி துகள் என்ற இரண்டு தோன்றியது
பொருள் சக்தி துகளில் . எதிர்மறை சக்தி துகள் ( அகார ) நேர்மறை சக்தி துகள் ( உகார )என்ற இரண்டு உருவானது. இந்த ஆகாரமும் உகாரமும் சேர்ந்து உயிர் அற்ற பொருள் துகள் உருவானது . இது மகாரம் .
அ+உ = ம
. அதுவே அகார உகார மகார என்ற மூன்றாக பொருள்களாக நிலைத்தன . இவ்விதம் கோள்கள் மற்றும் உயிர் அற்ற பொருள்கள். தோண்றின இந்தநிலையில் அ , உ , மற்றும் . உயிர் சக்தி துகள களுடன் நான்காக உணரப்பட்டான இறைவன் .
உயிர்சக்தியானது நேர்மறை உயிர்சக்திதுகள் (நாதம் ) எதிர்மறை உயிர் சக்தி துகள் (விந்து) என்று
இரண்டாக பிரிந்து நிலைத்தது .
ஆக இந்த ஐந்து அடிப்படைதுகல்கள் அ, உ, ம , நாதம் , விந்து என்பவை ஓம் என்பதன் விரிவு . இந்த அடிப்படை ஐந்து துகல்கள் பஞ்ச்விதது என்று அழைக்கபட்டன .
. இந்த பஞ்ச வித்துக்களில் இருந்து நிலம்,நீர் , நெருப்பு , காற்று ஆகாயம் என்ற பஞ்ச பூதம் உருவானது சடப் பொருள்களில் இருந்து உடல் உருவானது . இந்த உடல் குறிப்பிட்டநிலையில் உயிர் சக்தியை ஏற்றது . அதனால் உயிர் உருவானது உயிர்கள் நான்கு வகை யோனிவழி எழுவகை பிறப்புகளை உருவாக்கின . . உயிர்களின் வளர்ச்சியில் பஞ்ச பூதங்கள் ஆறுஆதார தளம் கொண்ட முதுகு தண்டுவடம் உள்ள மனித கருவை உருவாக்கியது .. இந்தமனிதகரு தாயின் கருப்ப்பையில் நஞ்சு மற்றும் பணிகுடநீர் வழி பிரபஞ்சசகதி 32 கலை மற்றும் உடல் சக்தி 64 கலை ஆகியவற்றை பெற்று 96 தத்துவம் உடைய குழந்தையாக நான் உருவாகி பிறந்தேன். . பிறந்தபின் பிரபஞ்ச சக்தியை மூச்சு காற்று வழி பெற்று உடல் சக்தியை உணவு மூலம் பெற்று வாழ்கிறேன் . . .
ஆகையால்
“ நான் என்பது 96 தத்துவங்களாக மாறிய இறைவனின் அம்சம் . “ என்னுள் இறைவன் ஒளி வடிவில் உள்ளான் . அதுவே பூரணம் .
“தன்னைத்தான் தான் அறிந்து பார்க்கும் போது
தத்துவமாய் நின்றதொரு தொண்ணுற்றாறு. “ என்றார் அகத்தியர்
முப்பதும் முப்பதும் முப்பத் தறுவரும்
செப்ப மதிளுடை கோவிலுள் வாழ்பவர்
செப்ப மதிளுடை கோயில் சிதைந்தபின்
ஒப்ப அனைவரும் ஒட்டெத் தார்களே .
திரு மூலர் திரு மந்திரம் பாடல் 154 ..
முப்பது சக்தி தத்துவம் முதற் கூறும் மற்றும் முப்பது சக்தி தத்துவம் இரண்டாம் கூறு சேர்ந்து அறுபது சக்தி தத்துவங்கள் (இதை புறக்கருவி என்கிறார் அகத்தியர் ) . முப்பத்தி ஆறு சிவதத்துவங்கள் ( இதை உட்கருவி என்கிறார் அகத்தியர் .). ஆக மனிதன் என்பவன் 9 6 தத்துவங்கள் கொண்ட இறைவானின் அம்சமாக உயிர் வாழ் கிறான் . இதில் உடல் சிதைந்தால் 9 6 தத்துவங்களும் பிரிந்து சென்றுவிடும் . .
இந்த 96 தத்துவங்களும் ஆறு ஆதாரத்தில் ஒடுக்கம் . ஆறு ஆதாரங்களும் பஞ்ச பூதத்தில் ஒடுக்கம் . பச்ச பூதம் பன்ச்ச வயதில் ஒடுக்கம் பஞ்ச வித்து ஒளி மற்றும் ஒளிவடிவான ஓங்காரத்தில் ஒடுக்கம் . அது இறைவனை அடையும் வழி . மற்றும் உடல் அழியாமல் காக்கும் வழி ..
ஆறு ஆதாரங்களை வாசி கொண்டு இணைத்தால் ஒளி வடிவில் இறைவனை நம்முள் காணலாம் ..
ஆறு தளங்களில் இறைவன் இருக்கிறான் . இதை அகத்தியர் அமுத கலைக்ஞானம் பாடல் 604 ளில் . சொல்லுகிறார்
அஞ்செழுத்து அஞ்சு முகமானால்
சுருக்கான ஆறுமுகம் என்றுகேட்டால்
வெல்லுவேன் புலத்தியனே சொல்ல்கேளு
வேடன்ய்ஹா சுருதிமுடி ஆருதலமாகும்
நல்லுறவாம் ரேசக பூரகமும் நின்று
நன்மையுடன் வீற்றிருக்கும் கும்பகமேயாகும்
அஞ்சு எழுத்து என்ற “நமசிவய” என்ற சிவன் பஞ்ச பூதமாக ஆறுதலத்துள் இருக்கிறார்.
இந்த ஆறுதலங்களே முருகனின் ஆறு முகம் சட அச்சாரம்” என்ற “சரவணபவ “
இறைவனைகாண வாசி யோகத்தில் ஆறுதலங்களிலும் ரேசக பூராக கும்பகம் செய்யவேண்டும் .
ஆரறுதலங்கில் வாசி பிராணாயமம் செய்வதை அறியும் முன் 96 தத்துவங்களில் முக்கியமான ஆறுதலங்களைப்ற்றி விரிவாக அறியவேண்டும் . மற்றும் ஐந்து அவத்தைகள் என்ற உணர்வு நிலை தச வாயுக்கள் நாடிகள் அறிய வேண்டும் .
சிலர் ஆறு தலங்களில் வாசியோக பிராணாயாம் செய்யாமல் வெறும் மந்திரங்களால் ஆறுதலம் செபித்தால் சித்தி என்று சொல்கிறார்கள் . இதை சக்கர தியானம் என்று சொல்கிறாகள் சிலர் மந்திரமும் சொல்லாமால் வாசியும் செய்யாமல் நேரே ஆறுதலம் கடந்து தியானம் செய்கிறேன் என்கிறாகள் . இது பலன் தராது . பலரும் இவ்விதம் செய்து துண்பப்பட்டு வாசியோகம் துயரம் தரும் என்று தவறாக சொல்கிறார்கள் . இவை வாசி யோகம் இல்லை .
.. நமசிவய . . சரவணபவ மற்றும் 51 அச்சர இதழ் மந்திரங்கள் அல்லது பஞ்ச பூத பீஜ மந்திரங்கள் ஆறுதலங்களில் செபிக்க படுகின்றன . இவை ஆறுதல வாசி பிரானாயாமத்திற்கு உதவி செய்யும் .. .
.
வாசி உருவாக்கி அதை ஆறு தலங்களில் நிறுத்தி வாசியோகம் செய்ய வேண்டும் .. அப்பொழுது தான் அண்டம் என்ற பிரபஞ்ச சக்தியும் . பிண்டம் என்ற உடல் சக்தியும் இணைந்து சாகா கலை என்ற தர்ரகலை உருவாக்கி குண்டலி உருவாக்கி , வாலை என்ற ஒளி உருவாக்கி . அமிர்தம் சுரக்க செய்யும். இந்த அமிர்தம் காயசிதி கொடுக்கும் . . வாசி அஷ்டமா சித்தியுடன் 64 சிததி தரும் ..
ஆறு ஆதாரங்களும் , அவத்தைகளும் மந்திரங்களும் வரும் பதிவுகளில் பார்ப்போம் ...
வீட்டில் வாசி யோகம் பாடம் 17
சென்றபதிவில் இறைவன் 96 தத்துவமாக மனிதனாக மாறி உள்ளான் என்று பார்த்தோம் இந்த தத்துவங்களுள் ஆறு ஆதார தலங்கள் முக்கிய மானவை ஆறு ஆதார தளங்களே மூச்சு காற்றை இயக்கும் தலங்களாக உள்ளன . இதில் வெட்டாத ஆறு சக்கரங்ககள் இயங்குகின்றன . இந்த சக்கரங்களையும் அவற்றின் இயக்கங்களையும் சித்தர்கள் மனக்கண்ணால் பார்த்து பதிவு செய்து உள்ளனர் . அதை பாடல்களாக சொல்லி உள்ளனர் . இதான் அடிப்படையிலும் எனது அனுபவ அடிப்படையிலும் சிகரங்களின் அமைப்பை நான் யோகினி. Gabriele Sielmann அவர்களிடம் விவரித்தேன் . யோகினி என்னிடம் ஆன்லைனில் வாசியோகம் பயின்றவர் . வாலை ஒளி பார்த்தவர். பன்முக அறிவு கொண்டவர் . ஜெர்மனி நாட்டை சேர்ந்த சிறந்த டாக்டர், ரெய்கி மாஸ்டர், பல நூல் களுக்கு ஆசிரியர் . மூன்று உயர் அறிவுசார்ந்த குழு நடத்துகிறார் சிறந்த அறிவுசார்ந்த .படைப்பாளி. உயர்ந்த ஓவியர் . ஆதாரங்களை பற்றி நான் அனுபவித்ததையும் அறிந்ததையும் அவரின் அறிவை பயன் படுத்தி ஓவியமாக வரைந்து நமக்கு தந்துள்ளார் பலநாட்கள் இதற்கு செலவு செய்தோம் .... இருவரின் பெயர் முதல் எழுதுக்கழும ஆதார சக்ர ஓவியங்களில் RR R.G என்று குறிக்க பட்டு உள்ளது அவரின் சித்தர் பணியை நன்றியுடன் போற்றுவோம்
மூலாதார சக்கரம்
மூலாதாரம இருக்குமிடம் .
நாபிக்கு கிழே பன்னிரெண்டு அங்குலம்
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிகிலர்
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிந்தபின்
கூவிக் கொண்டீசன் குடி இருந்தானே
திருமூலர் திருமந்திரம் பாடல் 579
மூலத்திரு விரல் மேலுக்கு முன்னின்ற
பாலித்த யோனிக் கிருவிரல் கீழநின்ற
கோலித்த குண்டலி யுள்லெழுஞ் செஞ்சுடர்
ஞாலத்து நாபிக்கு நால்விரல் கீழதே
திருமூலர் திருமந்திரம் பாடல் 580
தொப்புளுக்கு நாள் விரல்கடை உள்ளேயும் அங்கு இருந்து 1 2 விரல் கடை பருமன் கீழே யும் உள்ள இடத்தில் மூலாதாரம் உள்ளது. மல துவாரத்திற்கு இரண்டு விரல்கடை மேல் உள்ளது குறிக்கு இரண்டு விரற்கடை கீழ் உள்ளது .இங்கு குண்டலி உருவாகும். மூலாதாரத்தில் நின்று வாசியோகம் செய்வது அங்கு தாபிக்கும் மந்திரம் . ஓம் . . இதை அறிந்து செய்தால் உடலையும் உயிரையும் இணைக்கும் இறைவன் விரும்பி அங்கு குடியிருப்பான் . உயிர் நிலைத்து இருக்கும் .
மேலைநிலத்திணன் வேதாக பெண் பிள்ளை
மூலநிலத்தில் எழுகின்ற மூர்த்தியை
ஏல எழுப்பி இவளுடன் சந்திக்க
பாலனும் ஆவான் பார்நந்தி ஆணையே
திரு மூலர் திரு மந்திரம் பாடல் 590
மூலாதாரத்தில் ஆண்களுக்கு ஆண்தன்மை கொண்ட உயிர்சக்க்தி . இது எதிர்மறை உயிர் சக்தி ( விந்து சக்தியாக உள்ளது ) இதை மூலநிலத்தில் எழுகின்ற மூர்த்தியை என்கிறார் திரு மூலர் . அகாரம் என்கிறார் போகர்.. விந்து சக்தி குண்டளிவழி மேலே ஏறி மேலை நிலம் என்ற ஆக்ஞா சகரத்த்ல் உள்ள பெண் சக்தி யான நாதசக்தியுடன் இணைந்தால் . வாலை உருவாக்கி , அமிர்தம் சுரக்கும் . அதனால் ம்திர்ந்த வயது ஆனவர் இளமை அடைவர் . . நந்தி என்ற சிவனின் மேல் சத்தியம. இது உணமை
மூலாதாரத்தை பார்க்கும் விதம் . அதன் அதி தேவதாக்கள்
காணவே ஓங்காரம் பிரதானம் தான்
கருவான ஆதார மூலபீடம்
அகத்தியர் அந்தரங்க தீச்சா விதி பாடல்32
பாரப்பா நயன வொளி சூச்சத்தலே
பரிவான மூலமதில் ஆறு ஆதாரம்
அகத்தியர் அந்தரங்க தீச்சா விதி பாடல் பாடல்24
ஓசைஎன்ற சத்தம் உதித்து அடங்கும் வீட்டை
உத்தமனே மனக்கன்னல் நிததம்ம் பாரே
அகத்தியர் அந்தரங்க தீச்சா விதி பாடல் 25
சோதி என்ற ஆதார மூலம் பார்த்து
புத்தியுடன் அடிமூலம் தன்னில்நீயும்
பதிவாக இன்பமதாய உருவே செய்தால்
சிட்தியுள்ள கணபதியும் வல்லபையும் மைந்தா
சிந்தை தனில் ஒளிவிளக்கை தரிசிப்பாயே
அகத்தியர் அந்தரங்க தீச்சா விதி பாடல் 26
தரிசிப்பாய் தினந்தோறும் தியானம் பண்ணி .
தேர்கமுடன் மானசமை பூசை செய்தால்
பக்தியுடன் சக சித்தும் கைகுல்லாமே .
அகத்தியர் அந்தரங்க தீச்சா விதி பாடல் 2 7
ஆறு ஆதாரங்களுக்கும் தலையாயது மூலாதாரம் .மூலாதாரத்தை அடி மூலம் என்பார்கள். மனக்கண்ணால் உள்முகமாய் மூலாதாரத்தை பார். . இப்படி உள்முகமாய் பார்ப்பது. பிரத்தியாகாரம் எனப்படும் . (பின்பு விரிவாக பார்ப்போம் ) ஓசை உருவாவதும் ஒடுங்குவதும் ஓம் என்ற தலையாய மாத்திரத்தில் மட்டும் தான் ..மனதை மூலாதாரத்தில் நிறுத்தி . ஓம் என்னும் மந்திரத்தை உச்சாடனம் செய்து வாசியோகம் செய்து தியானம் செய் (தியானம் பற்றி பின்பு விரிவாக பாப்போம்) . இப்படி தினந்தோறும் தியானம் செய் . அப்பொழுது மூலாதார அதி தேவதைகளான கணபதியும் வல்லபையும் தோன்றுவார்கள் . ஆனால் அவர்களை ஒளிவடிவில் காண. உனக்கு சகல சித்துகளும் தரு வார்கள் .
மூலாதாரத்தை போகர் விவரிக்கிறார்.
காணவே மூலமது அகண்டம் போல
காரனமாய் திரிகோனமாக நிற்கும்
பூணவே மூன்றின்மேல் வலயமாகும்
புறம்பாக இதழ் அதுவும் நாழு மாகும்
காணவே காற்கமலைத்து அச்சரங்கள்
நலமான வ ச ஷ ஸ வ வும் மாகும்
மூணவே முக்கோணத்து உள்ளொளி ஓங்காரம்
முயற்சியாய் அதற்குள்லே அகாரமாகும் .
போகர் 7000 முதல் காண்டம் பாடல் 11
ஒடுங்கிய தோர் முனை ஒன்றில் சக்தி கதளிப்பூவாய்
உகாரமை முகம் கீழ் க் குண்டலியம் சக்தி
பெண்பாம்பு போல் சுருட்டி சீறிக்கொண்டு
அகாரமாய் சுழிமுனை வுடுருவி நிற்பாள்
துரியாதீதம் என்ற அவத்தை தானே .
போகர் 7000 முதல் காண்டம் பாடல் 12
கூறவே மூலததில் வாசிகொண்டு
கோழி முட்டை போலிருந்து முக்கோணத்தில்
மாறவே இடை பின்னை இரண்டும் ஓடும்
மற்றொன்று சுழிமுனைதான் மகிழ்ந்து கேளே
அகத்தியர் அந்தரங்க தீச்சா விதி பாடல்353
ஓம் என்ற பிரணவமே மூல பீடம்
அகத்தியர் பரி பூரணம் பாடல் 379
மூலாதாரம் அகண்டம் என்ற பிரபஞ்சம் போன்றது . காரண தேகம் என்ற நிலையில் மூலாதார சக்கரம் இயங்குகிறது. இதை மனக்கண்கொண்டு பார்க்க முடியும் .வெட்டப்படாத சக்கரம் . முக்கோண வடிவு உடையது ஒரு கோணத்தில் வல்லபை சக்தியும் . இரண்டாம் கோணத்தில் கணபதியும் மூன்றாம் கோணத்தில் குண்டலி சக்தி பெண் பாம்புபோல் சுருண்டு சீறிக்கொண்டு உள்ளது . முக்கோணத்திற்கு உள்ளே ஓம் என்ற பிரணவம் உள்ளது அதனுள் அகாரம் என்ற விந்து சக்தி உள்ளது .
. முக்கோணத்தை சுற்றி வலயம் உள்ளது அதற்கு வெளியே நான்ங்கு தாமரைஇதழ்கள் உள்ளன .
இங்கு உள்ள குண்டலி சக்தி அகாரம என்ற விந்து சக்தியை சுழிமுனைக்கு பிற தலங்களை ஊடுருவி எடுத்து செல்ல தயாராக உள்ளது.
மூலாதாரத்தில் இடகலை பிங்கலை நாடிகள் பின்னிக்கொண்டு ஓடும் ., வாசி யோகம் செய்வதால் அதை ஊடுருவிக்கொண்டு சுழிமுனை நாடி உருவாகும் இதன் வழி குண்டலி சக்தி விந்து சக்தியை சுழிமுனைக்கு எடுத்து செல்லும் . .
அகர , உகார , மகார நாத விந்து என்ற பஞ்ச வித்துக்கள் மற்றும் நிலம,நீர், தீ ,காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் ஒடுக்கம் மூலாதாரம்.
படைத்தல் ,காத்தல், அழித்தல் , மறைத்தல் அருளல் என்ற ஐந்து தொழில்கள் நடைபெறும் இடம் .
இதன் நிறம் மாணிக்க சிவப்பு .. . .
வீட்டில் வாசி யோகம் பாடம் 18
சென்ற பாடத்தில் ஆதார தலங்களின் அடிப்படையான மூலாதாரம் பற்றி பார்த்தோம். 25 வயதுக்கு கீழ இருப்பவர்கள் மூலாதாரத்தில் இருந்து பிராணயாமம் செய்தால் போதும் . 25 வயதிற்கு மேல் இருப்பவர்கள் வாசியுருவாக்கி பிறதலங்களில் நின்று வாசி யோகம் செய்யலாம் .
மூலாதார தலத்திற்கு மேலே உள்ள தலம் சுவாதிஷ்டாணம். .அனைத்து சித்தர்களும் இது பற்றி பாடி உள்ளார்கள். அவற்றுள் போகர் சிறப்பாக சொல்லி உள்ளதையும் அகத்தியர் மற்றும் திரு மூலர் சொன்னதையும் பார்ப்போம் .
துதிசெய் மூலத்தை தாண்டி அப்பால்
துடியான நாலங் குலமே தாண்ட
பதிசெய்த பிரம்மனுட வீடுமாகும்
பகர்ந்த சுவாதிஷ்டானம் மென்றுபேரு
அதிசெய நால்வட்டாக வலயஞ்சுத்தல்
ஆறிதழ் தானச்சரத்தை யறியகேழு
பதிசெய்த பாமபுராமா யாக வந்தால்
பாங்கான நாடு பீசம் லங்நங் ஆமே
போகர வயித்திய காவியம் 1000 பாடல35
நகாரம்மென்ற எழுத்ததுவும் பிரமர்க்காகும்
லாஎன்ற எழுத்ததுவும் பிரிதிவி பீஜம்
வகாரம்மென்ற துரியத் திருப்பிடந்தான்
புகழ்கின்ற இருக்கான வேதமாகும்
அகாரம்மென்ற அன்னமாம் வாகனந்தான்
அதனுடைய நிறம்பொன் நிறமுமாகும்
மகாருகின்ற இவருடைய தொழிலின் கூறு
மயிரெலும்பு இறைச்சிதோல் நரம்போடன்சே
போகர வயித்திய காவியம் 1000 பாடல36
அஞ்சான பொன்னிநிறம பிரம்மன் பக்கம்
அடங்காத வாணி நிறப்பாள் ளறிந்துகொள்ளு
போகர வயித்திய காவியம் 1000 பாடல37
கேளடா நிலையறிந்து வாசிகொண்டு
கீழ் மேலும் நன்றாக நின்றுபாரு
சூலட நின்றநிலை பார்க்கும் போது
ஜோதிஒன்று தோன்றுமடா பிரம்ம சொரூபம்
ஆளடா பிரம்மநிலை ரூபம் கண்டால்
அடங்காத வாசியது அடங்கும் வீட்டில்
கானடா வாசியது அடங்கி நின்றால்
கண்ணடங்கா பூரானத்தை காணலாமே
அகத்தியர் வாத சௌமியம் பாடல் 59
கொண்ட இச்சக்கரம் கூத்தன் எழுத்தைந்து
திரு மூலர் திரு மந்திரம் பாடல் 9௪9
நின்ற எழுத்துக்கள் நேர்தரு பூதமும்
நின்ற எழுத்துக்கள் நேர்தரு வண்ணமும்
திரு மூலர் திரு மந்திரம் பாடல் 9௪7
ஆகின்ற சக்கரத் துள்ளே எழுத்தைந்தும்
பாகொன்றி நின்ற பதங்களில் வர்த்திக்கும்
ஆகின்ற ஐம்பத்தோர் எழுத்த்துள் நிற்கப்
பாகொன்றி நிற்கும் பராபரன் தானே .
திரு மூலர் திரு மந்திரம் பாடல் 9௪5
சுவாதிஷ்டாணம். இருப்பிடம்
மூலாதாரத்தில் இருந்து அவரவர் கைவிரல் அளவில் நான்கு விரல் அளவு மேலே உள்ளது சுவாதிஷ்டாணம்..
சக்கர அமைப்பு .
நாற்கோணம் என்ற சதுரம் .அதை சுற்றி வட்டம் . வட்டத்தை சுற்றி ஆறு தாமரை இதழ்கள். இதன் நிறம் பொன்நிறம் என்ற மஞ்சள்..
. மந்திரம்
ஆதார தலங்கலீல் கூத்தன் என்ற சிவன் பீஜ மந்திரம் ஐந்து எழுத்து மந்திரமான “நமசிவய” உள்ளது . ஐந்து பூதங்களான மண் , நீர், நெருப்பு , காற்று , ஆகாயம் உள்ளது . அதன் நிறங்களும் உள்ளது .
ஆறு ஆதாரதளங்களில் உள்ள மொத்த இதழ்கள் ஐம்பது இதனுள் ஐம்பது எழுத்துக்கள் அடங்கும் . நிறாதார தலமான சகஸ்ராரத்தில் ஓம் என்பது ஒரு எழுத்து உள்ளது . அதையும் சேர்த்து 51 எழுத்தாக விரியும் . அக்காலத்தில் தமிழுக்கு ஐயம்பதொறு எழுத்து என்றும் கூறுவார் . சமஸ்கிருதத்தில் 51 எழுத்து என்றும் கூறுவார் .
இந்த 5o1 எழுத்துக்களும் ஐந்து எழுத்தில் அடக்கம் எனவே ஐந்து எழுது பீஜ மந்திரத்தையும் ஓம் உச்சரித்தல் சிறப்பு அல்லது போதும் .
சுவாதிஷ்டாண. தலத்தின் பீஜ மந்திரம லங் அல்லது லம். அல்லது நங் அல்லது நம்
இத்தலத்துள் இருப்பது உகாரம் என்ற பஞ்ச வித்து. இத தலம் பிருதிவி என்ற மண்ணின் கூறு
பிரிதிவின் பீஜ மந்திரம் லா . இதை லங் என்றும் லம் என்றும் உச்சரிக்கலாம்.. சிவனின் பீஜமந்திரமானது “நமசிவய “ . இந்த மந்திரத்தில் “ந” என்பது மண் பூதமாகும்ந” இதை “நங்” என்றோ அல்லது “நம்” என்றோ உச்சரித்தல் வேண்டும் .
இந்த தலத்தின் உணர்வு நிலை அல்லது அவத்தை “ துரியம்” என்ற உணர்வுநிலை . ஒருவர் தியானம் செய்யும்போது ஐந்துவகை அதிர்வு அலைகள் உருவாகின்றன என்று இன்றைய அறிவியல் சொல்கிறது அதன் படி துரியம் என்ற நிலையில் உருவாவது காமா அதிர்வலை ஆகும் .
இத்தலத்தின் அதி தேவதைகள் பிரம்மாவும் சரஸ்வதியும் ஆவார்கள். இவர்களிடம் படைத்தல் என்ற குழந்தை வரம் வேண்டல் சிறப்பு . அறிவு ஆற்றல் பெறவும் பிற படைப்புகள்,நூல்கள் , திட்டங்கள் செய்வதர்க்கும் இந்ததலத்தில் வேண்டுதல் செய்யவேண்டும் .
வீட்டில் வாசி யோகம் பாடம் 19
சென்றபதிவில் சுவாதிஷ்டாணம் தளத்தையும் சக்ரத்தையும் பார்த்தோம் . இந்தபதிவில் மணிபூரகம் தளத்தை படிப்போம்.
மாலினுட வீடதுதான் நறுவிரல்லின் மேலே
மாசற்ற பிறைபோலே கோட்டையாகும்
மாலினுட வளையம்போல் பத்திதழதான்
பத்தமு னச்சரத்தின் பயனைகேளு
தாலினுட ஜனகமா முனியின்தாகந்
தயங்காத நரபர்ப்பர் தண்மையாகும்
ஆலினுட மங்நடுவில் பூதம் அப்பு .
அதன் பீசம் வங்கென்று அறியலாமே
போகர் வைத்திய காவியம் 1000 பாடல ௪3
அறிந்த மணிபூரகத்தின் வீடுமாகும்
அப்பனே துரியமது யிருப்பிடந்தான்
பிறிந்தேசர் வேதமுமாம் படிகவர்ணம்
பிரியாம லச்சரந்தான் வாமபாகம்
கறித்தஅறு சுவையுமங்கே காணலாகும்
கதித்த மச்சையோடு உதரமூளை
வெறித்ததோர் விந்துவோடு அஞ்சுமாகும்
மிக்கசங்கு சக்கரமும் கருடவாகணமே
போகர் வைத்திய காவியம் 1000 பாடல ௪௪
கார்க்கஉரு செபித்தநாடு புருவமததில்
கண்ணுமன கண்ணாலே நன்றாய் பார்த்தல்
மார்கமுடன் லட்ச்சுமியும் விஷ்ணுதேவர்
மகத்தான பூரணசந்திரன் போல் மைந்தா
ஏற்கையுடன் இருதயத்தில் காணும்பாறு
இண்பமுள்ள தரிசனத்தை கண்டாயானால்
தீர்கமுளல சிவயோக வாழ்வு பெற்று
செல்வபதியாய் இருப்பாய் தினமும் நோக்கே
அகத்தியர் வாத சௌமியம பாடல் 61
பொருள்
மணிபூரகம் அமைவிடம்
சுவாதிஷ்டாணம் தலத்தில் இருந்து ஆறு விரற்கடை உயரத்தில் மணிபூராக தலம் உள்ளது
மணிபூரக சக்கர அமைப்பு .
நடுவில் சதுரம் . அதை சுற்றி சகரம் என்ற வட்டம் சக்கரத்துள் மூன்றாம் பிறை வடிவில் கோட்டை வட்டத்தை சுற்றி பத்து தாமரை இதழ்கள்.
பஞ்சவித்து :மகாரம் .
பஞ்ச பூதம் : நீர் என்ற அப்பு
நிறம் : ஸ்படிகம் அல்லது பளிங்கு வெண்மை
அவத்தை :துரியம
உடலில் செல்படும் இடம் ..,சதை, இரத்தம்,மச்சை, மூளை விந்து ஆகிய ஐந்து இடங்கள் . அறு சுவை அறியும் தன்மை .
வேதம்: யஜூர் வேதமாகும்
அதி தேவதைகள் : திருமாலும் லக்ஷ்மியும் ஆவார்கள் கருடனும் சக்கரத்தழ்வரும் . திருமாலுடன் இருப்பார்கள்.
பீஜ மந்திரம் :
இந்த தலத்தின் பூத மந்திரம் வங்
இந்தத்தல விஷ்ணு மந்திரங்கள் : அரிநமோ நாராயண : ஓம் நமோநாராயநாயா
.
இந்த தலத்தின் லக்ஷ்மி மந்திரம் : ஸ்ரீயும்
சிவ மந்திரம் ; ம உச்சரிப்பு மங் அல்லது மம்
எந்த மந்திரம் சொன்னாலும் நன்று . ஆயினும் வாசி யோகா பிராணாயாமத்தில் ஸ்ரீயும் அல்லது மங் அல்ல மம ஆகிய அசசரங்கள் சொல்லி வாசி உருவாக்கல் சிறப்பு . இவ்விதம் தினமும் வாசி யோகம் செய் .
இந்த தலத்தின் தொழில்: காத்தல்
மணிபூரகம் தளத்தில் மனதை நிறுத்தி , ஸ்ரீயும் அல்லது மங் அல்ல மம என்ற அசிரத்தை செபித்து வாசி உருவாகவேண்டும் . தினமும் வாசி யோகம் செய் அங்கு மணக்கண்ணால் மணிபூரகத்தை பார்த்தால் அங்கு திருமாலும் லக்ஷ்மியும் தோன்றி அருள் செய்வார்கள் . வெள்ளைநிற பூரண சந்திரன் போல் ஒளி தெரியும் . அனைத்து செல்வங்கள் பெற்று செல்வபதியாய் இன்பமான வாழ்கை பெறுவார்கள் சிவ யோக வாழ்வும் கிடைக்கும் அதாவது உடலும் உயிரும் காக்கப்படும் .நீண்ட ஆயுள் பெறுவார்கள் . .. இதற்கான வேண்டுதல் இங்கு செய்யலாம் ...
வீட்டில் வாசி யோகம் பாடம் 20
சென்றபதிவில் மணிபூரக தலமும் சக்கரமும் பார்த்தோம் . இந்த பதிவில் அனாகதம் தலமும் சக்கரமும் பார்ப்போம்
.அறிவுக்கு மேலேறி எட்டங்குலத்துக்
கப்பால் நாகதத்தின் வீட்டை கேளு
முறிவுக்கு முக்கோனமாகி நிற்கு
முதிர்வளயம் பனிரண்டு இதழுமாகும்
பிறிவுக்கு காகா கா காங ச சா
பேரான ச ச ஞாடா டாவாகுமே
இறிவுக்கு இதழில் நிறகு மட்சரந்தான்
ஏற்றுமாச்ஞ் சுழுத்தியதுக் கிருப்புமாகும் .
போகர் வயித்திய காவியம்1000 பாடல் 49
ஆமென்ற சிகாரத்தின் நெழுத்து நடுவாகும்
ஆண்மையாம் பூதமதுதேயு தானாம்
தேனென்ற செம்மைநிற சிவப்புமாகும்
தேயுவுட பீசமது நவ்வுமாகும்
ஒம் மென்ற ஒளிகோடி பானுவாகும்
ருத்ரணும் ருத்ரியும் நடுவே நிற்பார்
கோமென்ற அவருடைய குணமே தென்றால்
கொடும் பொசிப்பு, சோம்பலோடு பயமும்தூங்கே
போகர் வயித்திய காவியம்1000 பாடல் 50
தூங்கவே எழுப்பி மெல்ல பெண்ணை சேர்க்கும்
சுகமஞ்சும் சிவன்கைக்குள் தொழில் தானப்பா .
தாமென்று தியானித்து வாசியை நீவைத்து
தம்பித்து ஓம் ஆம் அ உ ம சிவாயநமா வென்று .
போகர் வயித்திய காவியம்1000 பாடல் 50
ஒருசாமவேதத்தின் உறுப்புமாகும்
போகர் வயித்திய காவியம்1000 பாடல் 51
மாலை கடந்து மகத்தான ருத்திரன்
காலையுறத் தாக்கிக் கலங்காதே நோக்கிட்டு
சாலச் சிகாரத்தை தனக்குள் ரேசிக்க
மேலை சிவப்போடு யவே விரிவெட்டு சித்தியே
திரு மூலர் கருக்கிடை வைத்தியம் பாடல் 346
பொருள்
அறிவால் உள்நோக்கி பார்த்தால் திரு மாலின் தலமாகிய மணி பூரகத்திற்கு மேல் எட்டு விரற்கடை மேல் உள்ள தலம் அனாகதம். இதன் சக்கர தன்மை பார்ப்போம். நிறம் அடர் சிவப்பு . இதன் அமைப்பு . நடுவே முக்கோணம் அதை சுற்றி வட்டம் வட்டத்தை சுற்றி 12 தாமரை இதழ்கள்.
இந்த தலத்தின் உணர்வுநிலை என்ற அவத்தை சுழுத்தி ஆகும் . தலத்தின் அதி தேவதைகள் ருத்ரனும் ருத்திரியும் ஆவார்கள். இவர்களின் தொழில் அழித்தல ஆகும்
பஞ்சவித்துவில் மகாரமாகும் . . பஞ்ச பூதங்களில் அக்கினி இதன் பூதமாகும் இதன் ஆற்றல் தன்மை 2 4 கலைகளாகும் . இங்கு ஒருநாளில் 3000 சுவாசம் நடை பெரும் . இத்தளம் உடலில் ஜடாக்கினி என்ற அமிலத்தை சுரக்கசெய்து கடும் பசியை உண்டாக்கும் .. பயம் , தூக்கம் ,சோம்பல் உருவாகும் . தூங்கியபின் பெண்ணை சேர உணர்வுகளை உருவாககும் . ஐம்புலன் இயக்கமாகிய கண்டு, கேட்டு , உண்டு , உயிர்த்து உற்று அறியும தன்மை இத்தளத்தை சார்ந்தது நாளமில்லா சுரப்பிகளில் தயமுஸ் என்ற நோய் எதிர்ப்பு சுரபி செயல் படும் . .. வேதங்களில் சாமவேதமாகும், .
மந்த்திரங்களில் பீஜமந்திரம் ந ம சி வ ய என்பதின் நடுவண் “சி “ ஆகும்
பஞ்சபூதத மந்திரம் “ரம்” .
பண்ணிரண்டு இதழ்களின் அச்சரம்
காகா கா காங ச சாச ச ஞாடா டா வாகும. இதழ் களின் மந்திரம் சில சித்தர்கள் மாறுபட்டு சொல்கிறார்கள் . .
புரியட்டம் என்ற எட்டு சூக்கும தளங்களில் உடலில் உள்ள மூன்று தளங்களில் முதல் தளமாகும். இத்தளத்தில் மனதை நிறுத்தி வாசி யோகம் செய் . இங்கு நோய்களை அழிக்கவும் , கெட்ட குணங்களை எணணங்களை அழிக்க வேண்டுதல் சிறப்பு ..
வீட்டில் வாசி யோகம் பாடம் 21 விசுக்தி
சென்ற பதிவில் அனாகதம் தலம் பற்றி பார்த்தோம் விசுக்தி தலம் மற்றும் சக்கரம் பற்றி .பார்ப்போம் ..
எறியே பன்னிரண்ட.டங்குல மேதாண்டி
யேறமாம் விசுக்க்தி என்ற தலமதாகும்
மாறவே யறுகோண வளையமொன்று
மகத்துவமாம் பதினாறு இதழு மாகும்
ஆறவே இதழுக்கு லச்சரந்தான்
அ-ஆ-இ-ஈ உ-ஊ
வகாரமது வேறோ இல்லோ இல்லோ
துணையான எ-ஏ-ஐ- oஒஓ ஒள அம ஆம்
போகமுனிவர் வைத்திய காவியம் பாடல் 56
அம்முதல் பதினாறு எழுத்துமிட்டு
அறுகோண நடுவேதான் வகாரம் நிற்கும்
வாமுதலாய் மயேஸ்பரனும மயேஸ்பரியும் நிறபார்
மகத்தான சொர்பனத்துக் கிருப்புமாகும்
பூ முதலாய் பூதமது வாயுவாகும்
புகழான பீசமது அங்கு மாகும்
நாமுதலா யதர்வண வேதந் தானாகும்
நல்ல மனமே வாகனமாய் நாடலாமே
போகமுனிவர் வைத்திய காவியம் பாடல் 57
நாட்டமா யிவருடைய தொழிலினன் றாய்
நடத்தலோடு ஓட்டல் மயங்கி கிடத்தல்
நீட்டமாய் நிருத்தளோடு கலங்க்கா திருத்தல்
நிலை யஞ்சின் விபரத்தை நிலைக்க கேளு
பூட்டமாய் பொசித்தளோடு ராகங்க்கேட்டல்
பொங்கியே கோபஞ்சன்டை சுமயைதாங்கள்
ஓட்டமா யோங்க்காரம் உன்னை கண்டால்
உயர்வாயை திறந்திடுதல் உண்மை கானே .
போகமுனிவர் வைத்திய காவியம் பாடல் 5௮
குரமையாய் நாதமது கண்டத்திற் காணும்
குறிப்பன திரேதகையின் கூறறு தானே .
போகமுனிவர் வைத்திய காவியம் பாடல் 61
மார்க்கமாய் மந்திரத்தை யுண்ணி யுண்ணி
வாசியை நீ மறவாமல் மருவி பூட்டி
ஆர்க்கமாய் அங்கென்று கும்பித்து நிற்கில்
ஆத்தாளும் உமையாரும் அகம் மகிழ்ந்து
மார்க்கமாய் வாதத்தின் வழியுஞ் சொல்லி
வரிசையோடு அதற்க்கு வழியும் சொல்வார் .
போகமுனிவர் வைத்திய காவியம் பாடல் 63
உள்ளும் மகேசன் உருக்கும் பரத்தடி
தெள்ளியே நோக்க சிறுபிள்ளை தானாவான்
அல்லும் கனிபோலேஆகும் சிவயோகம்
துல்லியவாசி துடியாது சித்தியே .
திரு மூலர் கருக்கிடை வைத்தியம் .பாடல் 34௮
பொருள்
அநாகத தளத்தில் இருந்து மேலே 12 விரல்கடை ஏறினால் இருக்கும் இடம் விசுக்தி .
. விசுக்தி சக்கர வடிவ அமைப்பு .
விசுக்தி தளம் அறுகோண வடிவானது . அதை சுற்றி வட்டம் உள்ளது . அந்த வட்டத்தை சுற்றி பதினாறு தாமரை இதழ்கள் உள்ளன .,
விசுக்தியின் நிறம் கருமை .
விசுக்தியின் பஞ்சவித்து நாதம் .
விசுக்தியின் உயிர் சக்தி 10 கலை .
விசுக்தியின் பூதம வாயு
விசுக்தியின் அதி தேவதைகள் மகேஸ்வரன் மற்றும் மகேஸ்வரி ஆகியோர் சக்கரத்தின் நடுவே நிற்பார்கள் .
விசுக்தியின் அதி தேவதைகள் தொழில் திரதேயி என்ற மாயை . மற்றும் மறைத்தல் .
விசுக்தியின் அவத்தை என்ற உணர்வுநிலை சொப்பனம்
விசுக்தியின் செயல் நிற்றல் , நடத்தல் , ஓடல் மாயங்கல் கலங்காது இருத்தல் ஆகி ஐந்து . உணவின் சுவை அறிதல் , இசை ரசித்தல் , கோபம் கொள்ளுதல் , சண்டைஇடல் மனசுமைகளை தாங்குதல் ஆகிய செயல்களும் நடைபெற காரணமாகும்
விசுக்தியின் பீஜ மந்திரம்
சிவமந்திரமான ந ம சி வ ய வில் “ வ “விசுக்தி சக்கரத்தின் நடுவே இருக்கும் வங் என்று ஊச்சரிக்கலாம் .
இதன் பஞ்ச பூத பீஜமந்திரம் ...” யம்”
இதன் பதினாறு இதழ்களின் அச்சரம்
அ – ஆ- இ- ஈ – உ-ஊ- எ-ஏ- ஐ-o ஒ-ஓ ஒள –அ- ம- ஆ- ம
விசுக்தி தளத்தில் மனதை நிறுத்தி மறவாமல் மந்திரம் ஓது .வாசியோகம் செய் . அப்பொழுது பத்தாம் வாசலுக்கான வழி சுழிமுனை செல்ல திறக்கும் . இந்த தலத்தில் இருக்கும் உமையார் என்ற மகேஸ்வரன் ஆத்தாள் என்ற . மகேஸ்வரி மனம் மகிழ்ந்து வேதிகள் செய்வதற்கான மார்கத்தையும் , படிப்படியாக செய்யும் முறைகளும் சொல்லி தருவார்கள் . விசுக்தியில்நின்று வாசி யோகம் செய்தால் பத்தாம் வாசல் திறந்து வாசியோகம் சித்தி ஆகும் விசுக்தியில் நின்று சிவயோகம் செய்தால் முதுமை மறைந்து இளமை அடைவார்கள் . இதனால் சிவயோகம் சித்தி ஆகும் . இந்ததளத்தில் வாசி யோகம் செய்து வேதை சித்தி செய்ய வேண்டல் சிறப்பு . குழப்பமான நிலையில் உண்மை தன்மை அறிய வேண்டுதல் சிறப்பு . மறைப்பையும் மாயையும் நீக்க வேண்டல் சிறப்பு .. .
. மூலாதாரம்
.
வீட்டில் வாசி யோகம் பாடம் 22 ஆக்ஞா
சென்றபதிவில்
விசுக்தி தலம் என்ற மகேஸ்வரன் தலம் பார்த்தோம் இப்பதிவில் சதா சிவத்தின் தலமாகிய ஆக்ஞா.தலமும் சக்கரமும் பார்ப்போம்
ஊர்க்கமா மயேஸ்பரத்தின் பத்தியை விட்டு
உயர்ந்தேறி பதினோரங் குலமேலேறே
போகர் வயித்திய காவியம்௧௧௧௧ 1o000 பாடல் 63
மேலேறி ரண்டு புருவமத்தியில்
மிகையான அண்டம்போல் நிற்குமப்பா
வாலேறி வட்டமாம் வீடுபோலே
வளையமொன்று ரண்டிதழ்தான் ஷா ஷிரி வாகும்
ஆளேறி அங்கென்ற அச்சரந்தான்டுவே
ஆகாச பூதமாம் பூத பீசம்
மாலேறி மனோன்மணியும் சதாசிவனும் நிற்பார்
மவத்தை தான் சாக்கிரத்தின் வீடுமாமே
போகர் வயித்திய காவியம் 1o000 பாடல் 64
பூணவே வட்டமத்தின் நிறந்தான் சொல்வேன்
புதுமை வெகுபுதுமையட ஆகாசந்தான் .
அகத்தியர் வாத சௌமியம் . பாடல் 70
விலங்ககின்ற தொழிலதுதான் காம குரோதம்
வாடுமாம் லோபமொடு மோகமாகும்
மதமான மாச்சரியத் தோடஞ்சாகும
நாடு தான் முகன் மாலுஞ் சிவன் மயேசன்
நலமாக காப்பார்கள் திகைத்து தானும் .
தாடுசதா சிவன் றானுந் தளவாயாகும்
தளவாயைக கண்டாக்கால் சகலமாமே
போகர் வயித்திய காவியம் 1o000 பாடல் 65
மூட்டியே தாயுனுட பதததை கண்டால்
முஷ்கரமாய் மாயகைஎல்லாம் மொழிந்து போகும்
நாட்டியே எட்டுடன் நாளும் கூட்டு
நாதாந்த சித்தியெல்லாம் சனத்திலாகும்
மாட்டியே தமருக்குள் புகுதலாகும் .
மயிர் பாலம் நெருப்பாறு கடக்கலாகும் .
நீட்டியே நிராதாரம் அறியலாகும்
நிச்சயமாய் குறிகள் எல்லாம் அறியலாமே .
போகர் வயித்திய காவியம் 1o000 பாடல் 6௮
நினைக்கவே ஐம்புலனும் மொடுனங்கிபோகும்
நோய் மூப்பு சாக்காடு நரை திரையும் போகும்
கனைக்கவே காயசித்தி வாதசித்தியும் காணும்
கண்ணிமைக்குள் போறஉயிர் கடுகி மீழும
அணைக்கவே சாக்கிரத்தில் இருந்து கொண்டு
ஆயியோடு அப்பனுந்தான் கூத்து பார்த்து
தளைக்கவே சரியையோடு கிரியை யோகம்
சார்ந்த தோர் ஞானமெல்லாம் தானானாரே
போகர் வயித்திய காவியம் 1o000 பாடல் 69
போமப்பா சகலபிணி ரோகமெல்லாம்
பூரனச்சந்திரனுட பிறப்பை கண்டால்
காமப்பால் கானர்பால் கருணை தங்கும்
கலையான வாசியது கடக்காதப்பா
சொமப்பால் சொலிக்குமடா அந்தபாலை
அந்தமுடன் நித்தியமும் கொண்டாயாகில்
தாமப்பா தன்னிலையே தான் தானாகும்
தானான ஆதார மூலம் பாரே
போகர் வயித்திய காவியம் 1o000 பாடல் 70
பொருள் ::
அமைவிடம் .
மகேஸ்வரன் தலமாகிய விசுக்திக்கு மேல் பதினோரு அங்குலம் மேலே உள்ள தலம் ஆக்ஞா என்ற சுழுமுனை . இது புருவ மதிக்கு உள்ளேம் அன்னாக்கிற்கு மேலேயும் இருக்கும் இடம்
சக்கர அமைப்பு . :
இது வட்ட வடிவ சக்கரம் இதன் இருபக்கத்திலும் இரண்டு தாமரை இதழ்கள் உள்ளன . இதன் நிறம் ஆகாய நீலம் .
பஞ்சவித்துகளில் விந்து தத்துவமாக உள்ளது . இதன் உயிர்சக்தி நான்கு கலை ஆகும் . இதில் நடைபெறும் சுவாசம் நாள் ஒன்றுக்கு 3 0 0 0
பஞ்ச பூதங்களில் ஆகாய பூதமாக இருக்கிறது .
இதன் அதி தேவதைகள் சதாசிவம் மற்றும் மனோன்மணி ஆவார்கள் . சதாசிவன் ஆறு ஆதார தலங்களின் தளபதி ஆவார் . .
அவத்தை என்ற உணர்வு நில்லையில் சாக்கிருத உணர்வு நிலை உடையது .
இதன் தொழில் அருளால்
இத்தளத்தில் நடைபெறுவது காமம் குரோதம் லோபம் மோகம் மாச்சரியம் ஆகிய ஐந்து செயல்களாகும்
பதான் சுரப்பிகள் பிடிடறி மற்றும் பினியல் ஆகும் .
மந்திரங்கள் .
ஆகாய பீசமந்திரம் :ஹம
சிவமந்திர எழுத்து .:; ய
இதழ் எழுத்துகள் : : ஷா ஷிரி
ஆதார தளங்களில் முடி மூலம் என்ற மேல் மூலம் இந்த தளமாகும்
விசுக்தி தளத்தில் கும்பகம் செய்து வாசியை மேலே ஏற்றினால் பத்தாம் வாசல் திறக்கும் . வாசி சுழிமுனை அடையும் . இங்கு மனதை நிறுத்தி வாசியோகம் செய்து பூரணம் என்ற வாலை என்ற மனோன்மணி தாயை காண வேண்டும் இதற்க்கு எட்டுடன் நான்கு சேர்க்கவேண்டும்
. மூலாதாரத்தில் ,வாசி யோகத்தில் தார கலை நான்கு உருவாக்கி அதன் பிரயோகத்தில் உடலுள் எட்டு கலை உருவாக்கி இரண்டு சேர்ந்து 12 கலை உருவாக்கு . . இதனால் சுழி முனை நாடி உருவாகும் அதன் வழி குண்டலி மேலே ஏறும்
. அதனால் வாலை ஒளி உருவாகும் . இந்த வாலை ஒளி மூலாதாரம் முதல் சுழிமுனை. வரை நீண்ட ஒளிபிழம்பை உருவாக்கும் . இந்த ஒளி பிழம்பு நெருப்பு ஆறு எனப்படும் . இந்த நெருப்பு ஆறு மயிர் பாலம் என்ற இரண்டு புருவ மததியை கடந்து சகஸ்ராரம் செல்லும்
அங்கு இருந்து அமிர்தத்தை உருவாக்க தூண்டும் .
இதனால் சுழிமுனை என்ற ஆக்ஞா தளத்தில் அமிர்தம் சுரக்கும் . இந்த அமிர்தம் கீழிறங்கி உல்நாக்குக்குள் இருக்கும் துவாரம் வழி தொண்டைக்குள் விழும். மரணம் என்ற சாக்காடு அழியும் .
இதனால் நோய்கள் நீங்கும் . மூப்பு நீங்கும் . நரைத்து வெழுத்த முடி கறுப்பாகும் . திரை என்ற கண் மறைப்பு திரை அகலும் . ( காட்ராகட் ) சுறுக்கம் மறையும் .. ஐந்து புலன்களும் அடங்கும் . சுழிமுனை திறந்து மனம் ஒடுங்கும் . இது .. வாசி மேலே ஏறுவதால் நிராதார தலம் என்னும் சகஸ்ரர தலம் தெரியும் ..
சரியை கிரியை யோகம் ஞானம் ஆகிய நான்கும் கைகூடும் . காயசிததி , வேதைசிததி , யோகசித்தி , ஞான சித்தி ஆகி அனைத்து சிததிகழும கைகூடும் ..
வீட்டில் வாசி யோகம் செய்வது பற்றி சந்தேக விளக்கம் .
சிலர் வாசியோகம் என்று அவர்களுடைய விருப்பப்படி மூச்சு பயிற்சி செய்கின்றனர் . அதன் பின் துயர் அடைந்து பரிகாரம் கேட்கிறார்கள் . . அவர்களுக்கு சொல்வது ; வீட்டில் வாசியோக பாடத்தில் சொல்லியபடி படிப்படியாக வாசி யோகம் பழகவேண்டும் .அப்படி செய்தால் எந்த துன்பமும் வராது .
கேள்வி
வாசி யோகத்தில் ; இரண்டு நாசி சுவாசம் , இடது நாசி சுவாசம் வலது நாசி சுவாசம் , ஒருநாசியில் உள்வாங்கி மறுநாசியில் வெளியிடல் ஆகியவை ஏன் செய்ய வேண்டும் ?
நாடி சுத்தி , பிராணாயாமம் வாசி யோகம் , வித்தியாசம் என்ன . ?
பதில் ..
நாடிகள் என்பது சக்தி ஓட்ட பாதைகள் . நமது உடலில் 72000 நாடிகள் செயல் படுகிண்றன . இவை பத்து பிரதான நாடிகள் மூலம் கட்டு படுத்த படுகின்றன .. இந்த பத்து நாடிகளை மூன்று அதி முக்கிய நாடிகள் கட்டுபடுத்துகின்றன . அவை இடகலை பிங்கலை சுழிமுனை அல்லது குரு நாடி . அவற்றுள் சுழிமுனை நாடியை வாசி யோகம் மூலம் நாம் உருவாக்குகிறோம் .
இடகலை , பிங்கலை ஆகிய நாடிகள் நமது இடது நாசி மற்றும் வலது நாசி துவாரம் வழி . . இடதுபக்க செயல்பாடு வலது பக்க செயல் பாடு என பிரித்து செயல்படுகின்றன .. ஆயினும் இடகலை என்ற சந்ரகலை 16 நாத கலை சக்தி கொண்டது . பிங்கலை என்ற சூரிய நாடி 12 விந்து கலை சக்தி கொண்டது .இதனால் நாத உயிர்சக்தி (positive life energy) மற்றும் விந்து உயிர் சக்தி ( negative life energy ) சமநிலை அடையவில்லை . . இதற்காக சுழிமுனை என்ற நாடியை வாசி யோகத்தில் உருவாக்குகுறோம் . இதில் தாரைகளை என்ற 4 கலை சக்தி (கிடைக்கும் )பெறும் பலம் கொண்டது . . இதனால் இடகலை பிங்கலை சமநிலை பெற்று உடல் இளமையுடன் அழியாமல் இருக்கும் .இந்த பிரபன்ச்சத்தில் இருந்து 32 கலை பெறப்படுகிறது . இந்தத உயிர் சக்தி நமது உடல் முழுவதும் பரவி உடலில் உருவாகும் 64 கலை சக்தியுடன் சேர்ந்து 96 கலை சக்தி உருவாக்கும் . இது அளப்பறி சக்தி . நிலை . இதுவே அணைத்து அபூர்வ சக்திகளுக்கும் சிததிகளுக்கும் அடிப்படை ..
.
சாதரணமாக நாம இரண்டு நாசியில் சுவாசிக்கிறோம்
அப்பொழுது நாத கலை !6 விந்துகளை 12 என்ற வித்தியாசத்தால் 4 கலை வீணாகிறது இதை சமநிலை படுத்த ஒருநாசியில் சுவாசம் அடைபட்டு நிகழும் . அப்பொழுது குறைவான சக்தியே பெறப்படும் . உயர்ந்த சக்தி பெற வாசி யோகா ஆரம்பத்தில் மூச்சை நெறிப்படுத்த துவங்குகிறோம் . . முதலிலl காலத்தை நெறிபடுத்தி இரண்டு நாசியிலும் சுவாசித்து வாசி உருவாக்கு கிறோம் இவ்விதம் .வாசிபழகுதல் துயர் தராது
.
அதன் பின் நாடிகளை நெறிபடுத்தி வாசியோகம் பழக வேண்டும் . அதற்க்கு
முதலில் இரண்டு நாசியிலும் சுவாசித்து வாசிபழகுதல் வேண்டும்
அதன் பிறகு வலது நாசியில் யில் வாசி பழக வேண்டும்
அதன்பின் இடது நாசியில் வாசி பழக வேண்டும் .
இவை நாடிசுத்தி எனப்படும்
அதன் பின் வலது உள்வாங்கி கும்பித்து இடது வெளியிடல்
அதன் பினஇடது உள்வாங்கி கும்பித்து வலது வெளியிடல் என வாசி பழகவேண்டும் .
இது பிராணயாமம்
இப்படி படிப்படியாக நாசியை பயன்படுத்தி வாசி யோகம் பழக வேண்டும் .
அதன் பின் ஆதாரதளங்களில் பிராணாயாமம் செய்வது வாசி யோகம் .
இதனால் பிரபன்ச்சத்தில் பெறும் நாத மற்றும் விந்து சக்திகள் உடலில் நாத விந்து சக்திகளை உருவாக்கி . உடலில் சக்தி சம நிலை உருவாக்கும் . இவிதம் படிப்படியாக நாடிகளை நெறிப்படுத்தி சக்தி சமநிலை பெறுவதால் மனம் அமைதியாகி ஒருநிலைப்படும் . உடல் உறுதி பெறும்
.
இப்படி படிப்படியாக வாசி பழகாவிட்டால் சக்தி சமநிலை கெடும் .
. மூசசுபிடிப்பு மற்றும் துன்பங்கள் வரும் .
இவ்விதம் படிப்படியாக வாசி பழகுவதால் உடல் முழுவதும் சக்தி ஓட்டபாதை சீராகும் . அனைத்து அவயவங்களும் சக்தி பெருகும் . இதனால் நோய்கள் தீரும் . . துன்பம் நேராமல் சக்தி பெறுகிறோம். தவறாக செய்த வாசியோக துன்பம் தீரும் . .
வீட்டில் வாசி யோகம் பாடம் 23 சகஸ்ராரம் அல்லது பிரம்ம ரந்திரம்
முந்தய பதிவில் ஆக்ஞா தலம் பற்றி பார்த்தோம். மூலாதாரம் முதல் ஆக்ஞா வரை ஆறு தளங்களும் உடலுக்கு உள்ளே இருப்பவை . . எனவே இவற்றை ஆதார தலம் என்று அழைக்கப்படும். சகஸ்ராரம் அல்லது பிரம்ம ரந்திரம் உடலுக்கு வெளியே இருக்கிறது எனவே இதை நிரராதார தலம் என்று சொல்லப்படும் இந்த தலமே நம்மையும் இப்பிரபன்ச்சத்தையும் இணைப்பது. நம்மை சுற்றி பிரபை என்ற ஒளி உருவை ஏற்படுத்துகிறது . ஆங்கிலத்தில் aura ...... ஆரா என்று அழைக்க படுகிறது .
நமது தியான நிலைக்கு ஏற்ப இந்த பிரபையின் நிறம் பட்டை அகலம ஆகியவை மாறும் . இதை கிம்பர்லின் போடோ கிராப் என்ற முறையில் படம் பிடிக்க முடியும் . இதை போன்றே நமது மூலையில் ஏற்படும் அலை வரிசையை எலெக்ட்ரோ என்செபிலோக்ராபிElectroencephalography
என்றமுறையில் பதிவு செய்ய முடியும் .
எனவே சித்தர்கள் சொல்கிற ஆதார தளங்களும் சக்கரங்களும் இன்று அறிவியல் உத்திகொண்டு நிரூபிக்கப்பட்டு உள்ளது . . எனவே வாசி யோகா மகிமை அளவிடட முடியும் . யாரும் ஏமாற்ற முடியாது .. மேலும் ஒரு வாசி யோகி முன் அமரும் போது அல்லது அவர் வாசி உருவாக்கும் போது அதன் தாக்கத்தை நீங்கள் உணர்கிறீர்கள்.. சிலர் விவரிக்க முடிய வில்லை என்கின்றனர் . இவை அவரின் பிரபையின் சக்தி .. .
சித்தர்கள் சகஸ்ரார தலம் பற்றி சொல்வதை பார்ப்போம் .
தானான மனோன்மணியை தாண்டி அப்பால்
தனித்ததோர் எட்டுவிரல் மேலேகேளு
கோனான குருபதம்தான் கூட்டிப்பாரு
குறிப்பான இதழ்களோ மாயிரத்தெட்டு
ஆனான நாடு மையம் ஐங்கோணமாகும்
ஆகாரம உகாரமொடு மகாரமாகும்
நானான நாதமொடு விந்து அஞ்சும்
நலத்த வைங்கோனத்தில் நிற்கும் பாரே
போகர் 1000 பாடல் 70
பார்க்கவே உகாரமாய் நடுமையத்தில்
பரிசுத்த வொளியாகி உதிக்கும் பாரு
பார்க்கவே நிகாரத்த நிர்மலன்றன் வடிவாம்
பார்த்ததொரு வாசினத்தான் அதற்குள் வைத்து
நேர்க்கவே யோடாமல் நிறுத்திப்பாரு
நிலையாத பிறவியறும் பூரணமுட்கொள்ளும்
ஆர்க்கவே யடிவாழ வேதாந்தத்தி
யனாதிஎன்ற பொருலொருவர்க் கறியொன்னாதே
போகர் 1000 பாடல் 71 .
அமைவிடம் மற்றும் .பயன்
மனோன்மணியின் தலம் என்ற ஆக்ஞா தளத்தில் இருந்து எட்டு விரல்கடை உயரத்தில் தலைக்கு மேல் நான்கு விரல் கடை உயரத்தில் சகஸ்ராரா அல்லது பிரம்ம ரந்திரம் என்ற தலம் உள்ளாது . ஆகையால் உடலுக்கு வெளியே உள்ளது . ஆயினும் உடலையும் பிரபன்ச்சத்தையும் இணைக்கும் .
இதுவே பரிசசுத்த வெளியின் ஆரம்ப நிராதாரதளம் . உடலின் குற்றங்கள் இங்கு இல்லை . இறைவநின் வேதாந்த வடிவான அநாதி வடிவு இந்த தலம் . பூரணம் என்ற ஒளி யாகிய அநாதி ஆகிய இறைவனை இங்கு தரிசிக்கலாம் ..
வாசியோகத்தில் இறைவனை ஒளிவடிவில் இங்கு தரிசித்தால் பிறவி இல்லாமல் போய்விடும் . சமாதி நிலை அடைய கூடிய தலம் பேரானந்த போதம் தரும் இடம் .
. வாசி யோகத்தில் இந்த தலத்திற்கு மேலே உள்ள முப்பாழ் சென்று அதை தாண்டி பரவெளி செல்லும் யோகநிலை மௌன யோகம்
இத்தளத்தில் இருந்து மீண்டும் கீழே உள்ள ஐந்து ஆதாரங்கள் இறங்கி மீண்டும் மூலாதாரம் அடைவது . பிடரி மார்க்கம் எனப்படும். . .
உருவ அமைப்பு
ஐந்து கோணம் உடைய நட்சத்திரம . அதை சுற்றி ஆயிரத்து எட்டு தாமரை இதழகள் உள்ளன .
பூதங்கள்
மண், நீர், நெருப்பு, காற்று ,ஆகாயம் ஆகிய அயிந்து பூதங்கள் ஒடுங்கி உள்ள தலம் .
வித்துகள்
அகார, உகார,மகார ,நாத, விந்து ஆகிய பஞ்ச வித்துக்களின் ஒடுக்கம் இத்தளம் .
நிறம்:: துய ஒளி
பீஜ மந்திரம் ;;; ஓம
அதி தேவதை :: பராபரன் பராபரை
தொழில்::::படைத்தல் , காத்தல் , அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்கள் செய்யும் இடம் . வாசி யோகத்தில், இந்த தளத்தில் இருந்து அருள் ஆசி வழங்கினால் அது சித்திக்கும் .
வீட்டில் வாசி யோகம் பாடம் 24 வாசியோக பந்தம்கள் முத்திரைகள்
இது வரை அடிப்படை வாசியோகத்தில் நான்காம் அங்கமாகிய பிரானா யாமத்தில் செய்யவேண்டியவைகளை பார்த்தோம் . ஆறு ஆதாரங்களையும் ஒரு நிராதாரத்தையும் பார்த்தோம் . வாசியோகத்தில் பிராணாயாமம் செய்யும் போது கடை பிடிக்கவேண்டிய பந்தங்களையும் முத்திரைகளையும் பார்ப்போம் ..
பந்தம்கள்
பந்தம் என்பது உடல் உறுப்புகளைகட்டுதல் என்று பொருள் .
முத்திரைகள்
முத்திரைகள் என்பது ஒரு உறுப்பை அல்லது உறுப்புகளை இணைத்து உருவக படுத்தல்
.
பாரத நாட்டியத்திலும் முத்திரைகள் உண்டு . பலவித பந்தங்களும் முத்திரை களும் பலவித யோகா முறைகளில் சொல்லப்பட்டு உள்ளன .. சிலநூல்கள் பந்தங்களையும் முத்திரைகளையும் பிரித்து பார்ப்பது இல்லை .பந்தங்களையும் முத்திரைகளையும் சித்தர்களுடைய நூலும் ஹடயோக தீபிகை என்ற நூலும் கூறுகின்றன ஆயினும் வாசியோகத்தில் கடை பிடிக்க வேண்டிய பந்தங்களும் முத்திரைகளும் இங்கு பார்ப்போம் .
நவிலுமிந்த யோகம் வந்த பேர்களுந்தான்
கோணாது முத்திரையும் தரிக்கவேனும்
குரு முனியே இதன் விபரம் கூறுவோமே
சுப்பிரமணியர் சிவயோகம் 40 பாடல32
ஓமப்ப முத்திரைதான் னைததுண்டு
உகந்த மகாமுத்திரையும் நபோமுத்திரையும்
தாமப்பா உட்டியானச் சலந்த்தர முத்திரையும்
சார்மூல பெந்தமுத்திரை தெரிந்தான் யோகி
சுப்பிரமணியர் சிவயோகம் 40 பாடல33
பொருள்
“வாசி யோகம் செய்யும் போது முத்திரைகளை கடை பிடிக்க வேண்டும் . அதன் விபரங்க்களை சொல்கிறேன் அகத்தியனே “ என்கிறார் சுப்பிரமணியர்.
முத்திரைகள் பலபலவிதம் உண்டு . அவற்றுள் வாசியோகத்தில் கடைபிடிக்க வேண்டியது ஐந்து உண்டு . . அவைகள் 1. மஹாமுத்திரை என்ற சின்முத்திரை 2. நபோமுத்திரை என்ற கேசரி முத்திரை .3. மூலா பந்த்தம் 4. உட்டியானம் 5.சலந்தர முத்திரை
சுப்பிரமணியர் பந்தங்களை முத்திரை என்று வகை படுத்துகிறார் .
1.மகாமுத்திரை அல்லது சின்முத்திரை
வாசி பிரானா யாமம் செய்ய சுக ஆசனத்தில் அமரவேண்டும் இடது பிறன்கை மற்றும் வலது பிறன்கை ஆகியவற்றை முறையே இடது தொடை மற்றும் வலது தொடைமீது வைக்கவும் . பேரு விரலையும் ஆட்காட்டி விரலையும் இணைத்து வட்டம போன்ற உருவம் உருவாக்க வேண்டும் மீதம் உள்ள மூண்று விரல்களையும் வெளியே நீட்ட வேண்டும் . இது மஹா முத்திரை . . பிரபஞ்ச சக்தியை உள்வாங்கி உடல் முழுவது பரவ செய்யும் .. மனதை ஒருமுகப்படுத்தும் , அறிவு பிரகாசமாகும் . . ஞானம் பெற உதவும் .
2. நபோமுத்திரை என்ற கேசரி முத்திரை என்ற வியோம சக்கரம் .
சின்முத்திரை செய்தபின் செய்யவேண்டியது .
நாம்ப்பா நபோ முத்திரைதான் சொல்வோம்
நாவை கபால மத்தி யதனில் லேற்றி
தாமப்பா புருவமத்தி கண்ணை கொண்டு
தான் பொருத்தி இருப்ப தோடின்னங் கேளே
சுப்பிரமணியர் சிவயோகம் 40 பாடல35
நாவின் நுனியை நடுவே விசிறிடில்
சீவனும் அங்கே சிவனின் உறைவிடம்
மேவிடும் முபத்து மூவரும் அங்கே
சாவதும் இல்லை சதகோடி யூனே
திரு மூலர் திரு மந்திரம் .பாடல் ௮03
திருமூலர் திருமந்திரம் பாடல் ௮03
பொருள் : சின்முத்திரையில் அமர்ந்தபின் செய்வது .
நவீன் நுனியை மடித்து , நாவின் அடிப்பகுதியை வாயின் மேல் அன்னத்தில் ஒன்றும்படி செய்ய வேண்டும் . நாவை விசிறி வாய்வழி மூச்சு காற்று வெளியேவராமல் செய்யவேண்டும் பற்கள் கடிக்காமல் கீழ் தாடை சிறிது கீழே இறக்கவேண்டும் . மனதை சுழிமுனையில் நாட்ட வேண்டும் . இது நபோ முத்திரை என்ற கேசரி முத்திரை என்ற வியோம சக்கரம். இதனால் மூலாதாரத்தில் உருவாகும் வாசி என்ற வெப்பமும் காற்றும் மேலே ஏறி பத்தாம், வாசல் திறக்க அழுத்தம் கொடுக்கும் . அங்கு சீவனு உள்ளான் சிவனும் உள்ளான் . முப்பத்தி முக்கோடி தேவர்களும உள்ளார்கள் அவர்கள் காட்சி தருவார்கள் சீவன் என்ற உயிர் சக்தி வெளியேறாது சுழி முனையில் தங்கும் . . மரணம் ஏறபடாது. நூறுகோடி ஆண்டுகள் வாழவார்கள் .
3 மூலா பந்த்தம் அல்லது மூல பந்த முத்திரை
கேசரி முத்திரை செய்தபின் மூல பந்த் செய்ய வேண்டும்
.
.
தானப்பா ஒழுகாது பிராண வாய்வும்.
தன்னை விட்டு புறம் போகா தன்மை கேளு
வேணப்ப இறுகுதியும் குதத்தியக்கி
மேலும் மல வாயிலையும் முன்னேவாங்கி
தேனப்ப அபான வாயுவை மேலேற
செய்தாற் பிரானவையும் மெதிர்த்து
மோனப்பா அபான வாயுவுடன் சம்பந்தம்
முன்னாகில் மல ஜாலங்கள் அடைய தென்னே
சுப்பிரமணியர் சிவயோகம் 40 பாடல37
என்ன முதியோர் இளமைப் பருவமாவார் .
இது மூல பெந்த முதிரையாம் என்பார் .
பின்னமில்ல பிராண வாயு மேளிழுக்க
பிசகாத அபானவாயு கிளிழுக்க
மன்னியதால் துனப வாதனையுறாமல்
வல்ல நிஷ்டை புரிபவனே யோகி ஆவான்
சுப்பிரமணியர் சிவயோகம் 40 பாடல3௮
மல வாய் என்ற குததத்தின் இருபக்கமும் உள்ள மேல்தொடை பகுதியை நெறுக்க வேண்டும் . குதத்தை மேல் நோக்கி இழுத்து பிடிக்க வேண்டும் . இதுதான்
மூலபந்த் . மூலாதாரத்தில் இந்த பந்தம் செய்யப்படுவதால் இதற்க்கு மூல பந்தம் என்று பெயர்.. பிராணாயாமம் செய்ய ஆரம்பிக்கும் போது இந்த பந்தம் செய்ய வேண்டும் .
மூல பந்தின் இயக்கம்
நமது உடலில் பத்துவித வாயுக்கள் இயங்குகின்றன அவைகள் 1. பிராணன் 2. அபானன் 3.வியானன் 4.உதானன் 5. சமானன் 6. நாகன் 7. கூர்மன் ௮. கிருகரன் 9. தேவதத்தன் 1 0 தனஞ்செயன் . இவற்றின் இயக்கங்கள் ஒன்பது வாயிலையும் மூடி திறக்க உதவுகின்றன . இந்தவாயுக்கள் சமநிலையில் இருந்தால் உடல் அழியாது இளமையுடன் இருக்கும் .
வாயு சமநிலை பற்றி இன்றைய அறிவியல் சொல்வதை பார்ப்போம் .. நமது உடலை காற்றுமண்டலம் அழுத்திக்க்கொண்டு உள்ளது . ஒரு சதுர செண்டி மீட்டரில் ஒருகிலோ படிக்கல்லை வைத்தால் தரும் அழுத்தம் அது .. அந்த அழுத்தத்தை நமது உடலில் உள்ள வாயுக்கள் எதிர் அழுத்தம் கொடுத்து நமத உடல் நசுங்காமல் நமக்கு துன்பம் தெரியாமல் காக்கின்றன . இதுவே நமக்கு ரத்த அழுத்தமாக தெரிகிறது வாகலின் அழுத்தம் அதிகமானால் ரத்த அழுத்தம் கூடும் மாரடைப்பு ஏற்படும் . மரணம் ஏற்படும் . அல்லது வாத நீர் உருவாக்கி உடல் இயக்கத்தை முடக்கும் . வாயு முத்தினால் வாதம் என்பது சித்தர் கோட்பாடு .
. .
இன்றய அறிவியல் உடல் கொடுக்கும் காற்று அழுத்தங்களை காஸ் pressureபிரசர் என்கிறது . அதை பிரித்து ஆக்சிசன் பிரசர் , கார்பன்டை ஆக்சைட் பிரசர் மீதேன் பிரசர் என்று பேசுகிறது .
ஆனால் அவைகளின் பாதைகளையும் இயக்கத்தை பேசவில்லை .
சித்தர்கள் பத்து வாயுக்கள் உடலில் இயங்கும் பாதைகளை சொல்லி உள்ளார்கள் அவற்றை வாசி யோகத்தில் முத்திரைகள் மூலம் கட்டு படுத்தி, சமநிலை படுத்தி , நீடித்த ஆயுளும் இளமையும் பெரும் வித்தையை சொல்லி உள்ளார்கள் .
தச வாயுக்களில் பிராணவாயுவும் அபான வாயுவும் மூச்சின் இயக்கத்திற்கு பெரிதும் உதவுபவை . சாதாஈனமாக பிராணவாயு மேலே எழும்பும் மேல்நோக்கி இழுக்கும். அபானவாயு கிழே இறங்கும் கீழ்நோக்கி இழுக்கும் . இதனால் உடலில் உற்பத்தி ஆகும் சக்தி செயல் பாடும் , வெளியேறும் கழி செயல் பாடும் சரிவர நடை பெறாமல் உடல் கெடும் .. உடல் . முதுமை அடையும். .
வாசி யோகத்தில் மூலபந்தம் செய்யும் போது பிராணவாயுவும் அப்பானவயுவ்ம் சமநிலை பெறும் அதனனல் பிரபஞ்ச சக்தியை பெறுவதிலும் , கழிவுகள் வெளி ஏற்றுவதிலும் உடல் சீறாகஇயங்கும் .ஆகையால் உடல் பலத்துடன் இளமையாக் இருக்கும்.. முதிர்ந்த வயதுடையவர் இளமை அடைவார் ..
இவ்விதம் வாசி யோகத்தில் மூலபந்தம் செய்து பிராண வாயுவையும் அபான வாயுவையும் சமநிலை படுத்துபவர் யோகி ஆவார்கள் .
4. உட்டியானம்
மூலபந்தம் செயதபின் , உட்டியானம் முத்திரை செய்யவேண்டும் இதை சிலர் ஆசனம் என்பார்கள் .. பூரகத்திற்கு முன்பு அதாவது ரேசகத்திர்க்கு பின்பு செய்யவேண்டும் இது கேவல கும்பகமாக அமையும் . மேலும் நுரை ஈரலில் தங்கியுள்ள காற்றை கூடியவரை வெளியேற்ற உதவும் .
இன்னங்கேள் முதுகு வயிற் ருந்திமேலே
இயம்பு பிரானை தரித்த லுட்டியானம்
இதனாலே வானில் சஞ்சாரம் செய்வான்
சுப்பிரமணியர் சிவயோகம் 40 பாடல36
பொருள் .
மூலபந்தம் செயதபின் , உட்டியானம் முத்திரை செய்யவேண்டும் இதை சிலர் ஆசனம் என்பார்கள் .. பூரகத்திற்கு முன்பு அதாவது ரேசகத்திர்க்கு பின்பு செய்யவேண்டும் இது கேவல கும்பகமாக அமையும் . மேலும் நுரை ஈரலில் தங்கியுள்ள காற்றை கூடியவரை வெளியேற்ற உதவும்
வயிற்றை கூடியவரை முத்துக்கு பகுதியை ஒட்ட செய்வது . உட்டியானம் முத்திரை அல்லது பந்தம் அல்லது ஆசனம். இதை வாசி யோகா பிரானா யாமத்தில் செய்வதால் பிரபஞ்ச தொடர்பு ஏற்படும் .
5 . சலந்த்தர முத்திரை அல்லது ஜலபந்த் அல்லது ஜலபந்த்
பின்னமில்லா சலந்த்ற முத்திரையின் மார்க்கம்
பேசுவாய் யதனாலும் நரம்பினாலும்
தன்மைலத்தை தானிருக்கி
கிழேயுள்ள தணலினால மதியிருந் தமிர்தந்தானே .
சுப்பிரமணியர் சிவயோகம் 40 பாடல36
இன் முதுகுத்தண்டை நேரே நிமிர்த்தி முகவாய்கட்டை என்ற நாடியை சிறிது கீழே தாழ்துதல் சலந்த்தர முத்திரை அல்லது ஜலபந்த். இதனால் நரம்புகள் ஊக்கமடையும் .இறுகும் . மூலாதார காறும்ம் வெப்பமும் மேலே ஏறி வாலை உருவாக்கி அமிர்தம் பொழிய செய்யும் .
வாசி யோகா பிராணாயாமத்தில் ஐய்ந்து முத்திரைகளை கடை பிடித்து மூலாதார வெப்பத்தால் வாசி உருவாக்க வேண்டும் . அது குண்டலி யாகி வாலையாக வேண்டும் .. அது பத்தாம் வாசல் திறந்து அமிர்தம் பொழிய வேண்டும் . அமிர்தம் உண்டு நீங்கா இளமையுடன் சாகாநிலை அடைய வேண்டும் .
இறை அருள் பெறுக!!! தானவன் ஆகுக!!!