முப்பூ
சித்தர்களில் முப்பூவை பற்றி பேசாத சித்தர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு முப்பூவைப் பற்றி பேசி இருக்கிறார்கள்.வைத்திய முப்பூ குரு
இன்றைய மருத்துவ முறைகளில் தலைசிறந்த மருத்துவமும்,ஆதி மருத்துவமாகவும் போற்றப்படுவது சித்த மருத்துவம் தான் .இறைவன் சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட இம்முறையில் மருத்துவம் தவிர யோகம்,ஞானம்,இரசவாதம்,காயகற்பம்,சரகலை,பஞ்சபட்சி, மாந்த்ரீகம், போன்ற அரிய கலைகள் அடங்கியுள்ளன.
இது வேறு எந்த ஒரு மருத்துவ முறையிலும் இல்லாத சிறப்பாகும்.
இப்படி மகத்துவம் வாய்ந்த சித்த மருத்துவத்தின் மருந்துகள் செய்முறையில் மணிமகுடமாக இருப்பது முப்பூ என்னும் குருமருந்து ஆகும்.இம் முப்பூவை தயாரிப்பது மற்ற மருந்துகளைப் போல் எளிதான காரியமல்ல.சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் முப்பூவைப் பற்றிய பாடல்களில் ஏராளமான பரிபாஷைகளில் (மறை பொருள்)கூறியுள்ளதால் சித்தர்களின் நூல்களை படித்து அறிந்து முப்பூவை தயாரித்தல் என்பது இயலாத காரியமாகும்.
சித்தர் நெறியில் தேர்ச்சி பெற்ற மெய்குருவின் திருவடியைப் பற்றி உண்மை சீடனாக -12-வருடம் தொண்டுகள் செய்து பெற வேண்டிய அபூர்வமான கலைகளில் இதுவும் ஒன்று என சித்தர்கள் தங்கள் நூல்களில் தெளிவாகக் கூறியுள்ளனர்.
முப்பூவில் 5 - வகை
1 - வைத்திய முப்பூ
2 - இரசவாத முப்பூ
3 - மாந்திரீக முப்பூ
4 - காயகற்ப முப்பூ
5 - ஞான முப்பூ
என்ற ஐந்து வகைகள் உள்ளன.
வைத்திய முப்பு என்பது மருத்துவத்திற்காக உபயோகப்படுத்தப்படும் முப்பு ஆகும்.
இதனை குருமருந்து என்றும் அழைப்பர்
ரசவாதம் முப்பு
இது ரசத்தினை வாதம் செய்து தங்கமாக மாற்ற உபயோகம் செய்ய பயன்படுத்தும் முப்பு ஆகும்.
மாந்திரீகம் முப்பு
மாந்திரீகம் முப்பு என்பது மாந்திரீக வேலைகளுக்காக பயன்படுத்தப்படும் முப்பு ஆகும் இதன் மூலம் அவசியம் கேளுங்கள் போன்றவையுடன் இணைத்து தயார் செய்து அதனை கொடுத்து பிரயோகம் செய்வர்
காய முப்பு
இதை காயசித்தி ஆக உபயோகம் செய்ய பயன்படுத்தும் முப்பு ஆகும்
ஞானம் முப்பு
இது ஆன்மீக வாழ்வில் ஞானத்தை அடைய ஞான மார்க்கமாக நமக்குள்ளே உருவாக்கி அதனை உண்டு ஞானத்தை அடையும் முப்பு ஞானம் முப்பு ஆகும்.